Published:Updated:

பிட்ஸ்!

பிட்ஸ்!

பிட்ஸ்!

பிட்ஸ்!

Published:Updated:
பிட்ஸ்!

கோ தோஷம் பொல்லாதது என்பார்கள் பெரியோர்கள். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நீசனாகவோ, தோஷம் உள்ளவனாகவோ இருந்தால் பசுவின் சாபம் இருக்கக்கூடும் என்பது ஞான நூல்களின் கருத்து. இதனால் குடும்பத்தில் வறுமையும் துன்பமும் சூழும்.

இந்தக் குறை நீங்க பசுக்களுக்கு பச்சைப் புல், அகத்திக்கீரை முதலியவற்றை உண்ணக் கொடுக்கலாம். இதனால் பஞ்ச மகா பாவங்களும் விலகும் என்பது மகான்களின் வாக்கு. பசுக்களுக்கு புல் அல்லது அகத்திக்கீரை தரும்போது கீழ்க்காணும் ஸ்லோகத்தைப் படித்து வணங்குவது இன்னும் விசேஷம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

ஸெளரபேய்ய: ஸர்வஹிதா:
பவித்ரா: புண்யராஸய:  மி
ப்ரதிக்ருண்ணம் த்விமம் க்ராஸம்
காவஸ்த்ரைலோக்ய மாதர:  மிமி

கருத்து: காமதேனு வம்சத்தைச் சேர்ந்தவையும், எல்லோருக்கும் இதம் அளிப்பவையும், பரிசுத்தமானவையும், புண்ணிய கூட்டங்களும், மூன்று உலகங்களுக்கும் தாயானவையுமான பசுக்கள் இந்த புல்லைப் பெற்றுக்கொள்ளட்டும்.

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி புல் உண்ணக் கொடுத்த பிறகு, கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி, பசுவை வலம் வந்து வணங்க வேண்டும்.

கவாமங்கேஷ§ திஷ்டந்தி
புவனானி சதுர்தஸ  மி  
யஸ்மாத்தஸ்மாச்சிவம் மே ஸ்யாத்
இஹலோகே பரத்ர ச மிமி

கருத்து: பசுவின் அங்கங்களில் பதினான்கு உலகங்களும் இருப்பதால், இவ்வுலகிலும் மறு உலகிலும் எனக்கு மங்கலத்தை அளிக்கட்டும்.

பிட்ஸ்!

சந்திராஷ்டமமும் சந்திரனும்!

ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் உலவும் இரண்டேகால் நாளும் கெடுதல் ஆகாது. நட்சத்திர அடிப்படையில் சுப நட்சத்திரத்தில் உலவும்போது சந்திரன் எட்டில் இருந்தாலும் நலமே உண்டாகும். வீடு, வாகனம், இன்சூரன்ஸ் மற்றும் ஆயுள் சம்பந்தமான காரியங்களில் ஈடுபடலாம்.

சந்திரன் 8-ல் சுபர் சாரம் பெற்று, சுபக் கிரகங்களான குரு, சுக்கிரன் ஆகியோருடன் கூடும்போது திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.

மேலும், சந்திராஷ்டம தினங்களில் மனோகாரகனான சந்திரனை தியானித்து வழிபடுவதால், நமது மன சஞ்சலங்கள் யாவும் நீங்கி நலம் பெறலாம். திங்கட்கிழமைகளில் சந்திரனை மனத்தில் இருத்தி,

அமிர்தத்துக்கு இருப்பிடமான சந்திரபகவானே போற்றி
ஸோமனே போற்றி வெள்ளை கிரணங்கள் உடையவரே போற்றி
பாற்கடலில் உருவானவரே ஆம்பல் பூவிடத்தில் பிரியம் கொண்டவரே
உலகங்களுக்கெல்லாம் பிரியமானவரே
ரோகிணியின் நாயகனே போற்றி போற்றி

- என்று துதித்து வழிபட்டால், நாம் விரும்பும் கோரிக்கைகள் யாவும் தடையின்றி நிறைவேறும். எப்போதும் சந்திர பலம் நிறைந்திருந்து நம் சங்கடங்கள் யாவும் விலகும்.

பிட்ஸ்!

திடீர் சொத்து யோகம் யாருக்கு?

சிலருக்கு திடீரென்று சொத்து வாங்கும் யோகம் கூடிவரும். ஜாதக அமைப்புதான் அதற்குக் காரணம்.

ஒருவரது ஜாதகத்தில் நான்காம் வீட்டுக்கு உடையவன் பத்திலும், பத்தாம் வீட்டுக்கு உடையவன் நான்கிலும் அமர்ந்து ஒருவரையருவர் பார்த்துக்கொண்டு வலுத்திருந்து... ராகு 4-ல் சுபர் சாரம் பெற்றிருந்தால் திடீர் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

பிட்ஸ்!

பூமியில் வைக்கக்கூடாத பொருட்கள்!

 சகலவிதமான விஷயங்களையும் தாங்கிக் கொண்டிருக்கும் பூமி மாதா, குறிப்பிட்ட சில பொருட்களை நேரடியாக தன்மீது வைத்தால் அவற்றை தாங்கும் வல்லமை தனக்குக் கிடையாது என பகவான் ஸ்ரீமந் நாராயணரிடம் விவரித்து வேண்டியதாக புராணம் கூறும்.

அந்தப் பொருட்கள்... நல்முத்து, முத்துச் சிப்பி, பகவானின் பிம்பம், சிவலிங்கம், ஸ்ரீஅம்பாளின் மூர்த்தம், சங்கு, தீபம், தேவதா யந்திரங்கள், மாணிக்கம், வைரம், பூணூல், புஷ்பம், புத்தகம், துளசி இலைகள், ஜப மாலை, பூமாலைகள், கற்பூரம், தங்கம், கோரோசனை, சந்தனம், சாளக்கிராமம், சாளக்கிராமத்தை அபிஷேகித்த தீர்த்தம். இவற்றை நேரடியாக தரையில் படும்படி வைக்கக்கூடாது.  

பிட்ஸ்!

வெளிநாட்டு வாய்ப்பு!

ஒன்பதாம் வீட்டோன் மேஷம், கடகம், துலாம், மகர ராசிகளில் அமர்ந்து லக்னாதிபதியுடன் கூடியிருந்தால், வெளிநாட்டு யோகம் உண்டாகும். அதேபோன்று, லக்னாதிபதி 9-ல் அமர்ந்து, குரு 7-ல் வலுத்திருந்தாலும் வெளிநாட்டு   யோகம் உண்டு.

சூரியனும் புதனும் 8-ல் வலுத்திருந்து 8-ஆம் இடம் சர ராசியானால் வெளிநாட்டில் கல்வி பயிலும் யோகம் உண்டாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism