Published:Updated:

மலர் வழிபாடு!

மலர் வழிபாடு!

மலர் வழிபாடு!

மலர் வழிபாடு!

Published:Updated:
மலர் வழிபாடு!
##~##

பூக்கள் என்றாலே, அவற்றின் மணமும் அழகும் நம் எல்லோரையும் கவரும். நம்மை மட்டுமல்லாமல், பூச்சிகளையும் விலங்குகளையும் அவை எளிதாய்க் கவரும். பூக்கள் என்றாலே அழகு. ஜோதிடத்தில் பூக்களுக்குக் காரகர் அழகு தேவதை! அழகுக்குக் காரகன் சுக்கிரன் ஆவார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம் வீட்டின் சுற்றுப்புறம் அழகாக அமையவேண்டும் என்பதற்காகப் பூச்செடிகளை வளர்ப்போம். குழந்தை பிறந்தபோதும், சமுதாய நிகழ்ச்சிகளிலும், திருமணம் போன்ற சுப காரியங்களிலும் பூக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. காதலை வெளிப்படுத்துவதற்கும் பூக்களைக் கொடுப்பதுண்டு. முக்கியஸ்தர்கள் வெளியூர், வெளிநாடு செல்லும்போது அவர்களுக்குப் பூங்கொத்து கொடுத்து வழிஅனுப்புவது வழக்கம்.

திருமணத் தம்பதியருக்கு பூங்கொத்து கொடுத்து, பூக்களைப்போல் அவர்களது வாழ்க்கை மலரவேண்டும் என வாழ்த்துவது உண்டு. கோயில்களுக்குச் செல்லும்போது நமது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும், இறைவனுக்கு அர்ச்சனை செய்வதற்காகவும் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுவத்தி, கற்பூரம் இவற்றோடு பூக்களையும் கொண்டு செல்வோம். இறைவனுக்கு அர்ச்சித்த பின்பு அர்ச்சகர் நமக்குப் பிரசாதம் தருவதுடன், இறைவனுக்கு அர்ச்சித்த பூக்களையும் தருவார். நாம் அதைக் கண்களில் ஒற்றிக்கொள்வோம்.

மலர் வழிபாடு!

பூக்களுக்கு மருத்துவ குணமும், நோய் தீர்க்கும் தன்மையும் உண்டு.   குறிப்பாக, தாமரை மலர்- ஈரல் பாதிப்பு, குடல் புண், உடற்சூடு, எரிச்சல், பித்தம், நீர்ச்சுருக்கு, நீர்த்தாரை, காய்ச்சல் ஆகிய நோய்களைத் தீர்க்கும் என்பார்கள். வெண் தாமரை மலர் இதழ்களை வெந்நீரில் இட்டு, வடிகட்டிக் குடிப்பதன் மூலம், இதய நோய் குறையும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

மலர் வழிபாடு!

மந்தாரை மலரை முகர்ந்தால் வாந்தி நிற்கும், உஷ்ணாதிக்கம் விலகும் என்பார்கள். செண்பக மலரை வாதம், பித்தம், காய்ச்சல், பால்வினை நோய் தீரவும், விந்து விரயம் ஆகாமல் தடுக்கவும், தலைவலியைப் போக்கவும் பயன்படுத்தினார்கள் நம் முன்னோர்கள்.  

பூக்களுக்கும் நம் மனத்துக்கும் தொடர்பு உண்டு. நம் மனம் சம்பந்தமான நோய்கள் பலவற்றைப் பூக்கள் சரிசெய்கின்றன என்று மலர் மருத்துவம் கூறுகிறது.

கோயில்களில், பரிகாரமாக குறிப்பிட்ட மலர்களால் குறிப்பிட்ட கிரகத்துக்கு அர்ச்சனை செய்தால், உங்கள் சங்கடம் தீரும் என்பார்கள். ஒவ்வொரு கிரகத்துக்கும் குறிப்பிட்ட மலர் உண்டு.

சூரியனுக்கு செந்தாமரை, சந்திரனுக்கு வெள்ளாம்பல், செவ்வாய்க்கு செண்பகம், புதனுக்கு வெண்காந்தள், குருவுக்கு முல்லை, சுக்கிரனுக்கு வெண் தாமரை, சனிக்கு கருங்குவளை, ராகுவுக்கு மந்தாரை, கேதுவுக்கு செவ்வாம்பல்.

மலர் வழிபாடு!

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகமாக:

சூரியன் வலுத்திருப்பவர்கள் செந்தாமரை மலர்கொண்டு சூரியனை அர்ச்சித்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடும்.

சந்திர பலம் உள்ளவர்கள் வெள்ளாம்பல் மலர்களால் சந்திரனை அர்ச்சிப்பதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகமாகும்.

இதுபோல் மற்ற கிரகங்களுக்கும் குறிப்பிட்ட மலர்களால் அர்ச்சிக்கும்போது, குறிப்பிட்ட கிரகம் மகிழ்ந்து நமக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளித் தரும். அந்த வகையில் மேஷ, விருச்சிக ராசிக்காரர்கள் செண்பக மலரும், ரிஷப, துலாம் ராசிக்காரர்கள் வெண்தாமரையும், மிதுன, கன்னி ராசிக்காரர்கள் வெண் காந்தள் மலரும், கடக ராசிக்காரர்கள் வெள்ளாம்பல் மலரும் (Water Lily), சிம்ம ராசிக்காரர்கள் செந்தாமரையும், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் முல்லையும், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் கருங்குவளையும் (கருநீல சங்கு புஷ்பம்) கொண்டு அர்ச்சிக்கலாம்.

செல்வத்துக்கு அதிதேவதையான மகாலட்சுமியை யோக பலம் உள்ள வெள்ளிக்கிழமையில் 1,008 செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்குச் சகல செல்வங்களும் சேரும். குறிப்பாக, நவராத்திரி வெள்ளிக்கிழமையில் இந்த மலர் பூஜையைச் செய்வது விசேஷமாகும்.

பூக்களுக்கு சுக்கிரன் அதிபதி. சுக்கிரனுக்கு அதிதேவதை மகாலட்சுமி. ஆக, சுக்கிரனையும் மகாலட்சுமியையும் வழிபடுவோருக்கு இகலோக வாழ்வுக்கான அத்தனை செல்வங்களும் கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism