Published:Updated:

ராஜயோகம் தேடி வரும்!

Vikatan Correspondent
ராஜயோகம் தேடி வரும்!

ப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி தரும் நீங்கள் பிறருக்கு உதவும் நல்லெண்ணம் கொண்டவர்கள்; முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள். அதோடு, சாதனையின் நாயகனாகத் திகழ்வீர்கள். ராமாயண நாயகன் ஸ்ரீராமபிரான், நாடே புகழ்ந்து போற்றும் ஸ்ரீஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் பிறந்தது இந்த லக்னத்தில்தான்!

##~##

உங்களின் பிற குணங்கள்:

* சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவரான நீங்கள் வார்த்தை ஜாலம் கொண்டவர்கள். பேச்சில் எவரையும் வெல்பவர்கள். தீர்க்காயுள் உண்டு. ஆரம்ப காலம் சுமாராகவும், 40 வயதுக்குப் பிறகு மகாஜனயோகம், கோடீஸ்வரராகும் யோகம் ஸித்திக்கும்.

* எப்போதும் தெய்வ அனுக்கிரகம் உடன் வரும். அன்புக்கு மட்டுமே அடிபணிவீர்கள். அதிகாரம் என்பதே கூடாது என்பீர்கள். நண்பர்கள் அதிகம் உண்டு. தெய்வீக வழிபாடுகளில் அதிக ஈடுபாடு இருக்கும்.

* தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். கல்வியிலும் திறமைசாலிகள்தான். கற்பனைத் திறன் அதிகம் உண்டு. நீதி, நேர்மை, உண்மையில் நம்பிக்கை கொண்டவர் நீங்கள். பண விஷயங்களில்

ராஜயோகம் தேடி வரும்!

கண்டிப்பானவர்.

லக்னாதிபதி: சந்திரன்

தெய்வம்: முருகன்

அதிதேவதை: பார்வதி

வஸ்திரம்: வெண்மை

அதிர்ஷ்ட எண்கள்: முக்கியமாக 2, 11, 20. மற்றும் 9, 18, 27 ஆகிய எண்களும் நலம் பயக்கும்.

வழிபாடு: திங்கட்கிழமைதோறும் சிவாலயம் சென்று தரிசிப்பதும், சிவபுராணத்தை பக்தியுடன் பாராயணம் செய்வதும் நல்லது. அப்படிச் செய்து வந்தால், மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்கி சந்தோஷமான வாழ்வுக்கு வழி பிறக்கும்.

பொதுப் பலன்: மூன்றாம் பிறை தரிசனம் வாழ்வில் முன்னேற்றம் தரும். திருப்பதி திருமலையப்பன் தரிசனமும் நல்லது.

லக்ன குறிப்பு:

பொதுவாக, சூரியன் ஒரு நாளில் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 12 லக்னங்களுக்கு மாறுவார். ஜாதகத்தின் ராசிக் கட்டத்தில் 'ல’ என்ற குறிப்பை வைத்து உங்கள் லக்னத்தை நீங்களே அறியலாம்.