Published:Updated:

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 6

பாசுபதாஸ்திர வழிபாடு!கே.குமார சிவாச்சார்யர்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ருவரது ஜனன ஜாதகத்தில், எதிரிகள் நம்மை தாக்காமல் இருக்கவும் நீதிமன்ற வழக்குகள் நமக்கு பாதகம் ஆகாமல் இருக்கவும் உரிய பரிகாரம் தேடுவதற்கு, நாம் கவனிக்கவேண்டிய இடம் 6-ஆம் பாவமான துர்ஸ்தானம். இதில் குறைகள் இருப்பின், அவற்றைக் களைந்து நம் கவலைகளை எல்லாம் போக்குவதுதான் பாசுபதாஸ்திர வழிபாடு. இதுகுறித்த வழிபாட்டு ஸ்தோத்திரத்தைக் கடந்த இதழில் பார்த்தோம். இப்போது அந்த வழிபாட்டை விரிவாக அறிவோம்.

எல்லா ஊர்களிலும் ஆலய கும்பாபிஷேகம் நடைபெறும்போது, மாலையில் 2-வது கால வேளையில், சூலம் போன்ற அமைப்புக்கு அபிஷேக- ஆராதனைகள் நடத்துவார்கள் (பாவனாபிஷேகம்). அதுவே பாசுபதாஸ்திரம் என்ற அஸ்திரதேவ மூர்த்தி. பொதுமக்கள் கூடியிருக்கும் தலத்தில் எதிரிகளால் இடையூறுகள் ஏற்படாதவாறு இருக்க இந்த வழிபாடு செய்யப்படுகிறது.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 6

செப்புத் தகடு ஒன்றில், இங்கே படத்தில் உள்ளதுபோல் பாசுபதாஸ்திர வடிவத்தை வரைந்து, அந்தத் தகட்டை மணைப் பலகையின் மீது வைத்து, சந்தனக் குங்குமத் திலகம் இடவேண்டும். நீலம் மற்றும் வெண்ணிற மலர்கள் சாற்றுவது விசேஷம்!

முதலில், 'ஓம் ஸ்ரீகணேசாய மங்களம்’ என்று சொல்லி பிள்ளையாருக்கு மலர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்து அன்றைய திதி, நாள், நட்சத்திரம் சொல்லி 'மம சத்ரு விசர்ஜனார்த்தம் பாசுபதாஸ்திர பூஜாம் கரிஷ்யே’ என்று சொல்லி, அஸ்திரத்தின் மீது மலர் தூவ வேண்டும். பின்னர்,

'ஓம் பாசுபதாஸ்த்ராய வித்மஹே ருத்ர நேத்ராய தீமஹி
தந்நோ அஸ்திர பிரசோதயாத்’
என்ற காயத்ரி மந்திரத்தை மூன்று முறை சொல்ல வேண்டும். அடுத்து மலர்களால் அர்ச்சனை செய்யவேண்டும்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 6

ஓம் வஜ்ராய நம:
ஓம் சக்தயே நம:
ஓம் தண்டாய நம:
ஓம் கட்காய நம:
ஓம் பாசாய நம:
ஒம் அங்குசாய நம:
ஓம் த்வஜாய நம:
ஓம் கதாய நம:
ஓம் த்ரிசூலாய நம:
ஓம் பத்மாய நம:
- என்று சொல்லி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். பிறகு கல்கண்டு, பால், தாம்பூலம், சிறிதளவு சர்க்கரை, அன்னம் படைத்து, கற்பூர ஆரத்தி செய்து பிரசாதம் எடுத்துக்கொள்ளலாம்.

பிறகு, மணைப்பலகையில் மேற்கு முகமாக அமர்ந்து, மனத்தை ஒருமுகப்படுத்தி, திடசிந்தையுடன் 'எதிரிகள் யாவரும் விலகி, எதிர்க்கும் மனம் உள்ளவர்களும் நண்பர்களாகிவிட வேண்டும்’ என்று வேண்டுதல் செய்யவேண்டும். அதற்கான மூலமந்திரம்:

'ஓம் ஸ்லீம் பம் சும் ஹும் பட் பாசுபதாஸ்த்ராய ஸ்வாஹா’

கீழ்க்காணும் போற்றித் திருஉரு சொல்லியும் பாசுபதாஸ்திர நாயகரை வழிபடலாம்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 6

ஓம் அஸ்திர தேவனே போற்றி!
ஓம் ஆத்ம நாதனே போற்றி!
ஓம் சூல வடிவினரே போற்றி!
ஓம் ஆபத்தில் காப்பவரே போற்றி!
ஓம் ஆனந்த உருவே போற்றி!
ஓம் கபால மாலை அணிந்தவரே போற்றி!
ஓம் கட்கமும் பாணமும் உடையவரே போற்றி!
ஓம் வரம் அருள்பவரே போற்றி!
ஓம் பீமவாகனரே போற்றி!
ஓம் கோடி சூர்ய ப்ரகாசனே போற்றி!
ஓம் பத்து கைகளை உடையவனே போற்றி!
ஓம் பயம் போக்குபவரே போற்றி!
ஓம் உடல் முழுவதும் விபூதி பூசியவரே போற்றி!
ஓம் பலம் பொருந்திய இறைவனே போற்றி!
ஓம் எதிரிகளை நண்பராக்குபவரே போற்றி!
ஓம் எங்கும் நிறைந்திருப்பவரே போற்றி!
ஓம் எளிய பூஜையில் அருள்பவரே போற்றி!
ஓம் பாசுபத மூர்த்தியே போற்றி!
ஓம் சிவன் அளித்த சின்னமே போற்றி!
ஓம் சக்தியின் அம்சமே போற்றி!
ஓம் சாதிக்க அருள்பவரே போற்றி!

நிறைவாக ஆத்மபிரதட்சணம் செய்து விபூதி, குங்குமம் எடுத்துக் கொள்ளவும்.

இந்த பூஜையில் இன்னொரு சிறப்பு அம்சம் அடங்கி உள்ளது. சிவாகமத்தில் அடங்கியுள்ள பாசுபதாஸ்திர தியான மந்திரத்தை மூன்று முறை கூறி, வரைந்து வைக்கப்பட்ட அஸ்திரதேவரது சூல வடிவத்தின் நடுத் தண்டில் அத்தர், புனுகு, ஜவ்வாது, குங்குமப்பூ கலந்து, கரு நிறத்தில் ரட்சை செய்து வைத்து, கைகூப்பி வணங்கிய பின்னர், அதை 48 நாட்கள் நெற்றியில் திலகமாக இட்டுக்கொள்ள வேண்டும். இது சிவாகம பூஜா விதியில் உள்ள எளிய பூஜைமுறை ஆகிறது. இது நன்மையை விளைவிக்கும். அஸ்திர பூஜை என்பது பாதுகாப்பான வாழ்க்கைக்கானது. எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்.

- வழிபடுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு