பிரீமியம் ஸ்டோரி
##~##

கஷ்டங்கள் களையும்  ஸ்ரீமத் பாகவத ஸ்லோகம்

பகவான் ஸ்ரீமந் நாராயணரின் மகிமைகளை விரிவாகச் சொல்லும் ஞானப்பொக்கிஷமே ஸ்ரீமத் பாகவதம்.

மகாபாரதம் எனும் மாபெரும் இதிகாசம் அருளிய பிறகும் மனநிறைவு இல்லாமல் தவித் தார் வேதவியாசர். பிறகு, நாரத மகரிஷியின் அறிவுரைப்படி பகவானின் மகிமைகளை, அவதாரச் சிறப்புகளை முழுமையாகச் சொல்லும் விதமாக, ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றி மனநிறைவும் சந்தோஷமும் அடைந்ததாக புராணங்கள் விவரிக்கின்றன.

இது வியாசரால் அவருடைய புத்திரர் சுக முனிவருக்கு அருளப்பட்டது. சுகர், இதை பரீட்சித்து மகாராஜாவுக்குக் கூறினார். அப்போது உடனிருந்து இதைக் கேட்கும் பாக்கியம் பெற்ற முனிவர்கள் மூலம் உலக மக்களை வந்தடைந்தது. இதன் ஸ்லோகங்கள் உன்னதமான பலன்களை அளிக்கவல்லன.

பிட்ஸ்!

டன், சத்ரு பயம், வியாதி முதலிய கஷ்டங்களைப் போக்கி, பிரிந்த சொந்தங்களைத் திரும்பவும் ஒன்று சேர்க்கவைக்கும் அற்புத ஸ்லோகம் இது...

காயந்தி தே விசதகர்ம க்ருஹேஷ§ தேவ்யோ
ராக்ஞாம் ஸ்வ சத்ருவதமாத்ம விமோக்ஷணம் ச
கோப்யஸ்ச குஞ்சரபதேர் ஜனகாத்மஜாயா:
பித்ரோஸ்ச லப்த சரணா முனயோ வயம் ச

கருத்து: உத்தவர் ஸ்ரீபகவானை வேண்டுவதாக அமைகிறது இந்த ஸ்லோகம்.

சங்கசூடன் என்ற அசுரனிடம் இருந்து காப்பாற்றப்பட்ட கோபிகைகள் தங்களை எப்படி கானம் செய்கின்றனரோ...  

மேலும், கஜேந்திரன் எனும் யானையைத் தாங்கள் காத்தது, ஸ்ரீராமாவதாரத்தில் சீதையைக் காப்பாற்றியது, வசுதேவர்- தேவகியை கம்சனின் கொடுமையில் இருந்து காப்பாற்றியது ஆகியவற்றைச் சொல்லி, தங்களைச் சரணடைந்த நாங்களும் முனிவர் களும் எப்படித் துதிக்கிறோமோ...

அதேபோன்று, ஜராசந்தனால் ஜெயிலில் அடைக்கப்பட்ட அரசர்களின் மனைவிகள் தங்களின் குழந்தைகளை (கண்ணனின் புகழ் பாடி) சீராட்டும்போது, அவர்களின் தந்தையரை ஸ்ரீபகவான் விடுவித்துக் காப்பாற்றுவார்.

- முருகானந்தம், சென்னை-42

மருத்துவராகும்  யோகம் யாருக்கு?

பிட்ஸ்!

யிர் காக்கும் அற்புதமான துறை மருத்துவம்.  அந்தத் துறையில்  புகழ்பெற்ற மருத்துவராக ஒருவர் விரும்புகிறார் எனில், அவருக்கு ஜாதகத்திலோ கைரேகையிலோ சிறப்பான அமைப்பு இருக்க வேண்டும் அல்லவா? அப்படியான கைரேகை அமைப்புகளில் சிலவற்றைக் காண்போம்.

பிட்ஸ்!

ஒருவரது உள்ளங்கையில், ஆள்காட்டி விரலுக்கு கீழுள்ள பகுதி குருமேடு ஆகும். எதிலும் முதன்மையை விரும்புகிற லட்சிய மேடான இந்த குருமேடு நன்கு அமைந்திருக்க வேண்டும்.

பிட்ஸ்!

புத்திரேகை ஆயுள் ரேகையுடன் பின்னிப் பிணையாமல், ஆயுள் ரேகையினை லேசாகத் தொட்டுக்கொண்டோ ஆயுள் ரேகையில் இருந்து ஒரு நூல் அளவுக்கு பிரிந்தோ குருமேட்டில் இருந்து துவங்க வேண்டும்.

பிட்ஸ்!

கல்வியை முழு ஈடுபாட்டுடன் படித்து மாவட்டம் அல்லது மாநில அளவில் முதல் மாணவனாக தேர்ச்சி அடைந்து புகழ் பெற வேண்டும் என்று சாதிக்கத் தூண்டும் அரசு கிரகமான சூரிய மேடு (மோதிர விரலுக்கு அடிபாகத்தில் இருப்பது) பரந்துவிரிந்து நன்கு அமைந்திருக்க வேண்டும். சூரிய ரேகையும் நன்கு அமைந்திருக்க வேண்டும்.

பிட்ஸ்!

கல்விக் கிரகமான புதனுக்கு உரிய (சுண்டு விரலின் அடிபாகத்தில் உள்ள) புதன்மேடு சிறப்புற அமைந்து, அதில் மருத்துவ ஆராய்ச்சி ரேகைகள் தென்பட்டால் மருத்துவராகும் அமைப்பு உண்டு.

- காஞ்சி எஸ்.சண்முகம்

வாடகை வீட்டில் வாஸ்து!

சொந்தமாக வீடு கட்டுபவர்கள் நல்ல வாஸ்து அமைப்புடன் வீட்டைக் கட்டுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், வாடகை வீட்டுக்குச் செல்பவர்கள் என்ன செய்வது? அவர்கள், குறைந்தபட்சம் சில அமைப்புகளை கவனிப்பது அவசியம்.

பிட்ஸ்!

குடியேறும் வீட்டில் வெளிச்சம் நன்றாக வரவேண்டும். அந்த வீடு  தெருக்குத்து வீடாக இருந்தால் தவிர்த்து விடலாம். வேறு வழியே இல்லை; அப்படியான ஒரு வீடுதான் கிடைத்திருக்கிறது எனும் நிலையில்,  வீட்டுக்காரரிடம் சொல்லி, வீட்டு முகப்பில் சிறு விநாயகர் சிலை அல்லது திருவுருவப்படம் அமைப்பது நல்லது.

உள்ளே நுழையும்போது வாசற்படிக்கு இடப்புறம் அதிகம் இடம் அமைந்துள்ள வீடு விசேஷம். இல்லையெனில் இடது வலது இரு புறமும் சம அளவு இடம் அமைந்துள்ள வீடாகப் பார்க்கலாம்.

பிரதான கேட் அல்லது கதவுகள் நிலைப் படிகளில் விரிசல் இருந்தால் உடனடியாக சரிசெய்வது அவசியம். பெரும்பாலும் தரையில் விரிசல் இருப்பதையும் சரிசெய்ய வேண்டும். மற்றபடி எல்லோரும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்... வீட்டை மிகச் சுத்தமாக வைத்துக் கொள்வது. சுத்தமான இல்லத்தில் கிரகலட்சுமியின் கடாட்சம் பொங்கிப் பெருகும்.

- நமசிவாயம், தூத்துக்குடி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு