Published:Updated:

எதிர்காலம் உங்கள் கையில்!

வெளிநாடு செல்லும் யோகம் உண்டா?உங்கள் கைரேகை என்ன சொல்கிறது?கைரேகை நிபுணர் காஞ்சி எஸ்.சண்முகம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

'சரி, சரி... நீங்க சொன்னபடியே இன்ஜினீயரிங் படிக்கறேன். ஆனா, படிச்சு முடிச்சதும் வெளிநாடு போகணும். அங்கே  நிறையச் சம்பாதித்து, பத்தே வருஷத்தில் கார், பங்களா, கோடிக்கணக்கில பேங்க் பேலன்ஸ், பெயர், புகழ், அந்தஸ்துன்னு உயர்ந்து, பிறகு இந்தியாவில் வந்து செட்டிலாயிடனும். அதற்கு எனக்கு யோகம் இருக்கா? என் கையைப் பார்த்துச் சொல்லுங்க..!’

இன்றைக்குப் பெரும்பாலான இளைஞர்கள் இப்படித்தான்... ரொம்ப ஸ்பீடு! ஆனாலும், அவர்களின் எண்ணமும் செயலும் நிறைவேற ஒரு யோகம் வேண்டும் அல்லவா? அதைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

கடல் மாதாவின் ஆசி இருந்தால், வெளிநாடு செல்லும் யோகம் அமையும். 'உங்கள் தலையெழுத்து உங்களின் உள்ளங்கைகளில்’ என்பார்கள் பெரியோர்கள். ஆமாம்... ஒருவரது கைரேகை அமைப்பைக் கொண்டு அவருக்குக் கடல்மாதாவின் ஆசி உண்டா, படிப்புக்காகவோ வேலை நிமித்தமாகவோ வெளிநாடு செல்லும் யோகம் உண்டா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

எதிர்காலம் உங்கள் கையில்!

கைரேகையைப் பார்க்குமுன், இங்கே தரப்பட்டிருக்கும் படத்தைக் கூர்ந்து கவனிப்பது அவசியம். படத்தில் உள்ளது போன்று...

1. செவ்வாய் மேட்டுக்குக் கீழே கங்கண ரேகைக்கு மேலே நிழலிடப்பட்ட பகுதியே சந்திரமேடு ஆகும். இந்த மேடு உருண்டு திரண்டு இருக்க வேண்டும்.

2. நன்கு அமைந்த புத்திரேகை சந்திரமேட்டின் மேல் பகுதியை வந்தடைய வேண்டும்.

எதிர்காலம் உங்கள் கையில்!

3. சந்திரமேட்டின் மையப்பகுதியில் பயணரேகை தெளிவாக, நேராக, இளம் சிவப்பு நிறத்தில் நன்கு அமைந்திருக்க வேண்டும்.

4. விதி ரேகையும் நன்கு அமைந்து, சந்திர மேட்டில் இருந்து துவங்கி, எவ்வித இடையூறும் இல்லாமல் நேர்த்தியாக புத்தி மற்றும் இருதய ரேகையைக் கடந்து செல்ல வேண்டும்.

5. கட்டை விரல் நல்ல நீளத்தில் அமைந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அமையப்பெற்றவரா நீங்கள்? ஆம், எனில் நீங்கள் கடல்மாதாவின் அருளாசி பெற்றவர்!

உங்களுக்கு நல்ல கற்பனை ஆற்றல், கவி புனையும் ஆர்வம், பயணம் செய்வதில் விருப்பம் இருக்கும். அத்துடன், வெளிநாடு சென்று பொருளீட்டி உயரவேண்டும் எனும் எண்ணமும், உலகைச் சுற்றி வந்து ரசிக்கும் ஆர்வமும் அதிகம் இருக்கும். அதற்கான வாய்ப்பைக் கடல் மாதா வாரி வழங்குவாள். மேற்சொன்ன அமைப்புகளுடன் சுக்கிரன், புதன் மேடுகள் துணைபுரிவதாக நன்கு அமைந்தால் கூடுதல் விசேஷம்!

எதிர்காலம் உங்கள் கையில்!

24 வயது அளவில், உங்களின் ஆயுள் ரேகையில் மேல் நோக்கிய கிளைரேகை காணப்படின், அந்த வயதில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடி வரும். இந்த வயதில் பெயர், புகழ், அந்தஸ்து தரும் சூரிய ரேகையும் காணப்பட்டால், வெளிநாட்டில் வேலை பார்த்து, தமது திறமையை நிர்வாகம் மெச்சும்படி

எதிர்காலம் உங்கள் கையில்!

வெளிப்படுத்தி, பதவி உயர்வு பெற்று, பொருளாதார ரீதியாகவும் உன்னதமான உயர்வை அடைவார்கள்.

புதன் விரல் சராசரி நீளத்தில் அமைந்து, செவ்வாய் ரேகையும் நன்கு அமைந்திருப்பின் உற்சாகத்துடன் பணியாற்றுவார்.

வேலையில் சேர்ந்த வயது முதல் அடுத்து எத்தனை ஆண்டுகளுக்கு விதிரேகை, சூரியரேகை மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஆயுள் ரேகையின் மேல்போக்கு ரேகைகள் எப்படி அமையும் என்பதைப் பொறுத்து, அத்தனை ஆண்டுகள் அந்த கைரேகைக்கு உரியவர் பொருளாதார ரீதியாக உயர்ந்து செல்வந்தர் ஆவார் என்பதை அறியலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு