Published:Updated:

வாழ்வே வரம் - 6

இனி எல்லாம் சந்தோஷம்!ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ல்லதொரு விஷயம் நல்லவர்களுக்குக் கிடைத்தால், அது பலருக்கு நன்மையாக பல மடங்கு பல்கிப் பெருகும். அதுவே, தீயவர்களிடம் போய்ச் சேர்ந்தால் நல்ல விஷயங்களுக்கு உதவாது; தீய விளைவுகளுக்கே அடிகோலும். பாற்கடலில் தோன்றிய அமிர்தம் அசுரர்களிடம் சேர்ந்துவிடக் கூடாது என முடிவு செய்தது பரம்பொருள்.

மோகினிப் பெண்ணாக அவதரித்து வந்து அமிர்தத்தை அமரர்களுக்குப் பிரித்தளிக்க முற்பட்டார் ஸ்ரீமந் நாராயணன். அப்போது, ஸ்வர்பானு என்ற அசுரன் ஓர் உபாயம் செய்தான். ஒரு தேவனாக தன்னை மாற்றிக் கொண்டு தேவர்களின் வரிசையில் வந்து நின்றான். அமிர்தம் வாங்கிப் பருகினான். அதேநேரம், அவனை அடையாளம் கண்டுகொண்ட சூரிய- சந்திரர், இந்த விஷயத்தை  மோகினிப் பெண்ணுக்கு குறிப்பால் உணர்த்தினார்கள். மோகினிப் பெண், அமிர்தம் அள்ளிக் கொடுத்த கரண்டியாலேயே அவனைத் தாக்கினாள். தலை வேறு உடல் வேறாக ஆனான் அசுரன். ஆனாலும், அமிர்தம் பருகியதால் முற்றிலுமாக அவன் அழியவில்லை. உடலின் ஒரு பாகம் மனிதத் தலையும் பாம்பின் உடலும் பெற்று ராகுவாகவும், மற்றொரு பாகம் பாம்பின் தலையும் மனித உடலுமாக உருப்பெற்று கேதுவாகவும் தோன்றியதாக புராணங்கள் விவரிக்கும்.

வாழ்வே வரம் - 6

பாம்பு கிரகங்கள் என்பதாலேயே ராகு- கேதுவைக் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை. ஒருவரது ஜாதகத்தில் இருக்கும் ராகு கெடுப்பவர் இல்லை, கொடுப்பவர் என்றும், நமது குலம் செழிக்கத் திருவருள் புரிபவர் கேது பகவான் என்றும் அவர்களின் மகிமைகளை ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன.

முதலில் ராகுவின் சிறப்புகளைக் கவனிப்போம்.

வாழ்வே வரம் - 6

 உச்சம் பெற்ற நிலையிலோ அல்லது வேறு வகையில் பலம் பெற்றிருக்கும் யோகாதிபதியுடன் இணைந்திருக்கும் ராகு பகவான், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தியடையச் செய்வார். யாவற்றையும் சமாளித்து ஜெயம் பெறும் நிலை உண்டாகும்.

வாழ்வே வரம் - 6

 லக்னத்தில் ராகுவுக்கு சுப பலம் கூடுதலாக இருந்தால், அந்த ஜாதகர் செல்வந்தனாகத் திகழ்வார். விவாதங்களில் அவருக்கு வெற்றி உண்டாகும். மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகியவற்றில் ஒன்று ஜன்ம லக்னமாக இருந்து அதில் ராகு இருந்தால், அந்த ஜாதகருக்குச் சகல துன்பங்களும், பகையும், பிணிகளும் நீங்கும். அந்த ஜாதகத்துக்கு உரியவர், செல்வச் சீமானாகவும் சுகபோகமாகவும் வாழ்வார்.

வாழ்வே வரம் - 6

 2-ல் உள்ள ராகு பேச்சால் சாதிக்க வைப்பார். இப்படியான ஜாதக அமைப்பு கொண்ட வழக்கறிஞர்கள், தங்களின் வாதிடும் திறனால் பெரிதும் சாதிப்பார்கள். இந்த ஜாதகக் காரர்கள் மேடைப் பேச்சாளர்கள்- பட்டிமன்ற பேச்சாளர்களாகவும் புகழ் பெறுவார்கள்.

வாழ்வே வரம் - 6

 3-ல் ராகு அமையப்பெற்ற ஜாதகக் காரர்கள் துணிவுள்ளவர்களாக இருப்பார்கள். புத்திக்கூர்மை, வியாபார வெற்றி உண்டு. இவர்கள் சுயமாக முடிவெடுப்பவர்களாகவும், தன்னிச்சையாக செயல்படுபவர்களாகவும் திகழ்வர்.

வாழ்வே வரம் - 6
வாழ்வே வரம் - 6

 4-ல் அமையும் ராகு வாய்மையைத் தவறவைப்பார் என்பர். ஆனால் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகியவற்றில் ஒன்று 4-ஆம் இடமாகி அதில் ராகு இருந்தால், தீமைகள் குறைந்து நன்மைகள் உண்டாகும்.

வாழ்வே வரம் - 6

 5-ல் ராகு இருந்தால் கடுமையான முயற்சி மற்றும் உழைப்பால் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு குழந்தைப்பேறு தாமதமானாலும், அறிவும் அழகும் மிக்க குழந்தையைப் பெறுவர்.

வாழ்வே வரம் - 6

 ஆறில் ராகு ஆனை பலம் என்பார்கள். இவர்கள்,  உடல், உள்ளம் இரண்டிலும் வலிமை பெற்றவராகத் திகழ்வார்.

வாழ்வே வரம் - 6

 7-ல் ராகு இருந்தால், அந்த ஜாதகர் சுதந்திரமாகச் செயல்படுவதில் விருப்பம் உள்ளவராக இருப்பார். மனத்தில் எதையும் வைத்துக்கொள்ளாமல், வெளிப்படையாக பேசும் வெள்ளந்தி மனிதராக விளங்குவார்.

வாழ்வே வரம் - 6

 8-ல் ராகு இருந்தால் பெயர், புகழ் சேரும். ஆடம்பரத்தில் விருப்பம், புகழ்ச்சிக்கு மயங்குபவர்களாக இருப்பர்.

வாழ்வே வரம் - 6

 9-ல் ராகு இருந்து அவருக்கு சுபர் பார்வை இருந்தால், உன்னத காரியங்களை நிறைவேற்றும் பாக்கியம் கிடைக்கும். தந்தை வழி மற்றும் பிதுர்வழிச் சொத்துக்களை எதிர்பாராமல், சுயமாக சம்பாதித்து செல்வம் சேர்ப்பார்கள்.

வாழ்வே வரம் - 6

 10-ல் ராகு இருந்தால் சிக்கனம், பெருமையுடன் வாழும் நிலையும், அந்நியர்களால் பொருள் வளமும் உண்டாகும். பொது சங்கங்கள், சமூக அமைப்புகளில் கௌரவ பதவி வாய்க்கும்.

வாழ்வே வரம் - 6

 11-ல் ராகு பகவான் அமையப் பெற்றிருந்தால் நீண்ட ஆயுள், குறைவற்ற செல்வம் உண்டாகும்.

வாழ்வே வரம் - 6

12-ல் ராகு, சயன சுகத்தைக் கெடுக்கும் என்பர்.கோழித் தூக்கம்தான். இவர்கள் பிரயாணப் பிரியர்களாக இருப்பர். உழைப்பால் உயர்வர்.

பொதுவாக ஜாதகத்தில் ராகுவின் நிலைகளால் ஏற்படும் குறைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு அவற்றுக்குப் பரிகாரம் தேடி அலைபவர்களே இன்று அதிகம். ஆனால், ராகுவின் அமைப்பு பல்வேறு சிறப்புகளுக்கும் காரணமாகும் என்பதை மேற்கண்ட விளக்கங்களால் அறிந்தோம். இனி, கேது பகவான் தரும் நன்மைகள் என்னென்ன என்பதை விரிவாகக் காண்போம்.

- சந்தோஷம் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு