##~## |

எல்லோரையும் கவரும் திறமையும், எதையும் தாங்கும் இதயமும் கொண்டவர் நீங்கள். புதனின் ஆதிக்கத்தில் பிறந்த செயல்வீரர்களான நீங்கள், இனிமையாய் சிரித்துப் பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்களின் பிற குணங்கள் :

பொறுமையுடன் செயல்பட்டு வெற்றிபெறும் சூட்சுமம் தெரிந்தவர்கள். எவருக்கும் உதவும் நல்ல மனம் உள்ளவர்கள். சற்றே பிடிவாத குணமும், சுயநலமும் உண்டு.

பிறரின் மனோபாவத்தைப் புரிந்துகொள்வீர்கள். சுக்கிரன், புதன் ஆகியோர் யோகக்காரர்கள். சந்திரன், குரு, செவ்வாய் ஆகியோர் பாபக் கிரகங்கள்.

உறவுகளால் பெரிதும் விரும்பப்படுவீர்கள். அலங்காரம், ஆடம்பரப் பொருட்களில் உங்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு.

நீங்கள் போஜனப்பிரியரும்கூட! அடிக்கடி விருந்துகள், கேளிக்கைகள் எனக் கலந்துகொள்வீர்கள்.

சுக்கிரன், புதன் கூடி நின்றால் பிரபல யோகம் உண்டாகும். அனைத்துத் துறைகளிலும் ஆர்வம் அதிகம் இருக்கும்.

நாட்டியம், சினிமா, மருத்துவம், ஜோதிடம், கணினித் துறை மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்குவீர்கள்.

பெற்றோர்களின் அன்பைப் பெற்றிருப்பீர்கள். வசீகரமான தோற்றம் கொண்ட நீங்கள் தந்திரங்களும் சூட்சுமமும் தெரிந்து வைத்திருப்பீர்கள்.

உங்களால் முடியாதது என்பதே இல்லை எனும்படி ஆர்வமும் துடிப்புமாக செயல்பட்டு, எல்லா விஷயங்களிலும் தடைகளின்றி வெற்றி காண்பீர்கள்.
லக்னாதிபதி: புதன்
தெய்வம்: மகாவிஷ்ணு
அதிதேவதை: துர்கை, சூரியன், விஸ்வகர்மா
வஸ்திரம்: பச்சை வண்ண ஆடைகள்.
நவரத்தினம்: மரகதப் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23, 32

வழிபாடு: ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீஹயக்கிரீவரை தரிசித்து வழிபடுவதாலும், நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வணங்குவதாலும் வாழ்வில் வளம் பெறலாம்.
'நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்’
- இந்த விஷ்ணு காயத்ரியைத் தினமும் 108 முறை பாராயணம் செய்வது நல்லது.