Published:Updated:

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 8

கே.குமார சிவாச்சார்யர்

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 8

கே.குமார சிவாச்சார்யர்

Published:Updated:
வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 8

த்யோகம் புருஷ லட்சணம்னு பெரியவங்க சும்மாவா சொல்லி வெச்சாங்க? கால் காசு சம்பாதித்தால்தான் சமுதாயத்தில் நமக்கு மதிப்பும் மரியாதையும்!

இன்றைய காலகட்டத்தில் சிலருக்கு எளிதில் வேலை கிடைத்துவிடுகிறது. படித்து முடித்ததுமே யு.எஸ், யு.கே, ஆஸ்திரேலியா என வெளிநாடுகளுக்குப் பறந்துவிடுகிறார்கள். ஆனால், அவர்களில் சிலர் மூன்று அல்லது ஆறு மாதங்களிலேயே வேலை இழந்து திரும்பும் அவலமும் நிகழ்கிறது. இன்னும் சிலருக்கு உள் நாட்டிலேயே வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

நல்ல வேலை, கைநிறையச் சம்பளம், உத்யோகத்தில் உயர்வு, அதிகாரிகளிடமும் நிர்வாகத்திடமும் நல்ல பெயரும் புகழும் கிடைக்க ஜாதகத்தில் குருபலம் தேவை. இதற்கெல்லாம் காரகத்துவம் உடையவர் குரு பகவான்தான். 'குரு பார்க்கக் கோடி புண்ணியம்’ என்றும், குரு கொடுப்பதில் வல்லவர் என்றும், வித்தை ஞானம், புகழ், கீர்த்தி, பெருமை, செல்வாக்கு, மேன்மை, செல்வம் ஆகியவற்றை வாரி வழங்குபவர் என்றும் ஜோதிடக் கிரந்தங்கள் கூறுவதைக் காணும்போது, குருவின் திருவருளால் வேலை வாய்ப்பையும் நாம் பெற முடியும் என்று அறியலாம்.

ஜாதக ரீதியாக குரு பகவான் ஒவ்வொருவரது வாழ்விலும் 16 ஆண்டுகள் தன்னுடைய தசையை நடத்திச் செல்கிறார். அவரை வழிபட, நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்கும். குரு பகவான் பணி நிலையை யும், சந்திரன் நல்ல பெயரையும் கொடுக்கும் கிரகங்களாக ஜாதகங்களில் வலம் வருகின்றனர்.

12 ராசிகளுக்கும் குரு பகவான் அளிக்கும் பணி வாய்ப்புகள்...

மேஷத்தில் குரு இருந்தால், தலைமைப் பதவியை ஏற்கும் பணி நிலையைத் தருவார்.

ரிஷபத்தில் குரு அமர்ந்திருந்தால், மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்த நல்லதொரு வேலை கிடைக்கும்.

மிதுனத்தில் குரு அமர்ந்தால், ஞாபக சக்தி அதிகம் உடையவராகத் திகழ்வார்கள். அரசாங்க ஆலோசகராகப் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும்.

கடகத்தில் குரு அமர்ந்தால் வலுவான உடற்கட்டமைப்பும், ஆடை- ஆபரணச் சேர்க்கையும் உண்டாகும். இவர்கள் தனியார் துறையில் ஆலோசனை கூறும் பதவியில் சாதிப்பார்கள்.

சிம்மத்தில் குரு அமர்ந்தால், பொதுத்துறைப் பணியில் உயர்ந்த பதவிகளைக் கொடுத்து, செல் வாக்கோடு வலம் வரச் செய்வார்.

கன்னியில் குரு சேர்ந்தால் கணினித் துறை, ஒளித் தொடர்பு, கப்பல் படை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட வைப்பார்.

துலாத்தில் குரு சேர்ந்தால், கலைத்துறையில் ஈடுபாடு உண்டாகும்; அத்துடன் வெளிநாட்டில் பணிபுரிய வைத்து, செல்வாக்கை உண்டு பண்ணுவார்.

விருச்சிகத்தில் குரு சேர்ந்தால், கடின உழைப்பாளியாக மிளிரச் செய்வார். வங்கி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பதவியைக் கொடுப்பார்.

தனுசில் குரு சேர்ந்தால், நண்பர்கள் மூலம் ஆதரவைத் திரட்டித் தந்து, மக்கள் தொடர்பாளர் மற்றும் ஆசிரியர் பணிகளைப் பெற்றுத் தருவார்.

மகரத்தில் குரு அமர்ந்திருந் தால், வேலை கிடைப்பது எளிதாக இராது. ஆனால், இதற்குப் பரிகாரம் தேடமுடியும்.

கும்பத்தில் குரு அமர்ந்தால், நல்ல வேலை கிடைக்கும். ஆனாலும், சம்பாதித்தவற்றை தீய பழக்கங்களில் இழக்கும் நிலை உண்டாகும்.

மீனத்தில் குரு அமர்ந்தால், தனது பலத்தை முழுமையாகத் தந்து, அரசாங்கத்தில் இயக்குநர், துறைத் தலைவர், அமைச்சர் போன்ற பதவி களைக் கிடைக்கச் செய்வார். உயர்ந்த அந்தஸ்து, அதிகமான செல்வச் சேர்க்கை மற்றும் அதிகார வாழ்வையும் அளிப்பார்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 8

மேலும், குரு சில அம்சங்களில் தனது பலனைத் தராமலும் இருப்பார். அதாவது, ஜீவன ஸ்தானதிபதி 6, 8, 12-ல் மறைந்து பகை- நீசம் பெற்று, சுபர் சேர்க்கை இல்லாமல் பாவ கிரகங்களின்  பார்வை ஏற்பட்டால், பணி நிரந்தரமாக அமையாமல் போகலாம். அதேபோன்று லக்னம், 12 ஆகிய இடங்களில் எது அமைந்தாலும், சூரியனும் செவ்வாயும் கூடி நின்றால், சில காலம் வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு, சுமாரான பணிக்குச் செல்ல நேரிடும்.

10-க்கு உடைய கிரகம் 4-ல் அமர்ந்திருக்க... அந்த ஜாதகர் தன்னுடைய அறிவாலும் ஆற்றலாலும் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருக்கும்போது, திடீரென பதவி பறிபோகும் நிலைக்கு ஆளாவார். இதற்கு, மகரத்தில் பலவீனம் அடைந்த குரு காரணமாகிவிடுவார். இதுபோன்ற தருணங்களில், குரு பகவானை வழிபட்டு, நல்ல பலன்களை அடையலாம்.

எப்படி வழிபடுவது?

மனைப் பலகை ஒன்றைச் சுத்தம் செய்து அதன் மீது, படத்தில் உள்ளது போன்று குரு யந்திரக் கட்டத்தை அரிசி மாவால் வரைந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு கட்டத் திலும் உள்ள எண்களின் மீது நான்கு கொண்டைக்கடலை வைத்து, கட்டத்தின் மையத்தில் நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். குருபகவான் திருவுருவப் படம் இருந்தால், பூ-பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் சமர்ப்பிப்பது விசேஷம்! அதேபோன்று சந்தனம், மலர்கள் சாற்றப்பட்ட குரு யந்திரத்தையும் மனைப் பலகையின் ஓரத்தில் சாய்த்து வைத்துக் கொள்ளவும்.

முதலில், 'ஓம் கம் கணபதயே நம:’ என மூன்று முறை கூறி விநாயகரை வழிபட வேண்டும். பிறகு

'ஓம் நம ப்ரணவார்த்தாய சுத்த ஜ்ஞானைக மூர்த்தயே
நிர்மலாய ப்ரசாந்தாய தட்சிணாமூர்த்தயே நம:’
என்ற ஸ்லோகத்தையும் மூன்று முறை கூறி துதிக்க வேண்டும். பின்னர்...

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 8

ஓம் அறிவுறுவே போற்றி
ஓம் அடைக்கலமே போற்றி
ஓம் அருளாளனே போற்றி
ஓம் ஆதி பகவனே போற்றி
ஓம் ஆதாரனே போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி
ஓம் பணிக்குருவே போற்றி
ஓம் பாதுகாப்பாளனே போற்றி
ஓம் கலைக் குருவே போற்றி
ஓம் மஞ்சள் பிரியனே போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் தியான மூர்த்தியே போற்றி
ஓம் தென் முக நாயகனே போற்றி
ஓம் நான்மறைப் பொருளே போற்றி
ஓம் கங்காதரனே போற்றி
ஓம் காவலாய் இருப்பவனே போற்றி
ஓம் தனுர் நாதனே போற்றி
ஓம் தயை புரிவாய் போற்றி

- என போற்றி நாமாவளிகள் கூறி வணங்கி, மஞ்சள் மலர்களால் புஷ்பாஞ்சலி செய்து, ஆரத்தி காட்டிய பிறகு, உத்தியோக குரு மூல மந்திரத்தை 32 முறை படிக்க வேண்டும். அதன் பிறகு, பிரகஸ்பதி விசேஷ கவசத்தை ஒருமுறை படிப்பது விசேஷம்!

இந்த பூஜையை வியாழக்கிழமை அல்லது பௌர்ணமி தினங்களில் செய்யவும். அத்துடன் மூலமந்திரத்தை யும் தியானத்தையும் தினமும் சொல்லி வர வேண்டும். விரைவில் வேலையில் அமர வேண்டும் என்று கருதுபவர்கள், ஐந்து மஞ்சள் வண்ண மலர்கள் வைத்து வெற்றிலை- பாக்கு, பழம் நிவேதனம் செய்து, 45 தினங்கள் இந்த பூஜையைத் தொடரலாம்.

இந்த பூஜையால் விரைவில் நல்ல வேலை, பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடத்துக்கு இட மாற்றம், அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்திடம் அங்கீகாரம், நல்ல பெயர், பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஓய்வூதியம் முதலானவை தாமதம் இல்லாமல் கிடைத்தல் ஆகிய பலாபலன்களைப் பெறலாம்.

மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் கும் நமோ பகவதே ஸ்ரீத்யான ரூபிணே
சிந்முத்ராங்கித ரூபே உத்யோக குரவே ஸ்ரீம் கும்
மம நட்சத்திர ராசௌ மம ஜென்ம ஸ்திர உத்யோகம்
குரு குரு ஸ்வாஹா

பிரஹஸ்பதி கவசம்

ப்ருஹஸ்பதி சிர:பாது லலாடம் பாதுமே குரு
கர்ணௌ சுரகுரு: பாது:நேத்ரேமே அபீஷ்ட தாயக:
நாசாம்பாது சுராசார்ய ஜிஹ்வாமே வேதபாரக:
முகம் மே பாது ஸர்க்ஞா:புஜவ்பாது சுபப்ரத
கரௌ வஜ்ரதர: பாது பªக்ஷளமே பாதுகிஷ்பதி
ஸ்தனௌமே பாதுவாகீச குஷிம்மே சுபலக்ஷண:
நாபிம்பாது அநீதிக்ஞ கடிம்மே பாதுசர்வத:
ஊரூமே பாது புண்யாத்மா ஜங்கேமே ஜ்ஞாநத ப்ரபு:
பாதௌமே பாதுவிஸ்வாத்மா ஸர்வாங்கம் ஸர்வதா குரு

- வழிபடுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism