Published:Updated:

11-வது பொருத்தம்

நந்தி அடிகள்

11-வது பொருத்தம்

நந்தி அடிகள்

Published:Updated:
##~##

பொதுவாக ஜோதிடர்கள் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜு, வேதை ஆகிய 10 பொருத்தங்களை மட்டுமே கணக்கில் கொண்டு திருமணங்களை நிச்சயம் செய்கின்றனர். ஆனால், இவற்றைத் தவிர 11-வதாக இன்னொரு பொருத்தமும் உண்டு. அது, நாடிப் பொருத்தம்.

'தம்பதிகளுக்கு சுபத்தை விரும்பும் ஜோதிடர்கள், நாடிப் பொருத்தத்தில் பார்ச்சுவ நாடியை கவனிப்பது மிக முக்கியம்’ என்று, 'ஜாதக சந்திரிகை’ எனும் நூலில் வலியுறுத்துகிறார் மகாகவி காளிதாசன். எனவே, நாடிப் பொருத்தத்தையும் ஆராய்ந்த பிறகே முடிவெடுக்க வேண்டும்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

11-வது பொருத்தம்

நாட்யைக்யே ம்ருத்யு:
நாடீபேதே அஷ்டௌ குணா:
தஸ்மாத் நாட்யைக்யம் வர்ஜனீயம்

தம்பதியரில் ஆண்- பெண் இருவரது நாடிகளும் ஒன்றானால் அது மரணத்தைத் தரும்; இருவரின் நாடிகளும் ஒன்றாக இருந்தால் நாடிப் பொருத்தம் இல்லை என்றும், திருமணத்தை விலக்க வேண்டும் என்றும் காளிதாசன் வற்புறுத்துகிறார்.

11-வது பொருத்தம்

கார்த்திகை, ரோகிணி, சுவாதி, மகம், ஆயில்யம், ரேவதி, திருவோணம், உத்திராடம், விசாகம் ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் வாம பார்ச்சுவ நாடியாகும்.

பரணி, மிருகசீரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், அவிட்டம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும் மத்திய நாடியுள்ளவை.

அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய ஒன்பதும் வலது பார்ச்சுவ நாடி ஆகும்.

ஆண்- பெண்ணின் நட்சத்திரங்கள் மத்திய நாடி யாக இருந்தால், கணவ னுக்கு ஆகாது; பார்ச்சுவ நாடி எனில் பெண்ணுக்கு ஆகாது; வெவ்வேறு நாடிகளில் இருந்தால் எவ்விதமான தோஷமும் இல்லை என்பது மகாகவி காளிதாசனின் கருத்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism