Published:Updated:

எதிர்காலம் உங்கள் கையில்!

கைரேகை நிபுணர் காஞ்சி எஸ்.சண்முகம்

எதிர்காலம் உங்கள் கையில்!

கைரேகை நிபுணர் காஞ்சி எஸ்.சண்முகம்

Published:Updated:
##~##

காலையில் வீட்டை விட்டுக் கிளம்பினால் வியாபாரம், அலுவலக வேலைகள் என்று அலைந்து திரிந்து, சாயங்காலம் ஆனதும், 'அப்பா... முருகா... ஈஸ்வரா’ன்னு நிம்மதியா வீட்டில் போய்ச் சாயலாம்னா... ஹவுஸ் ஓனர் தொந்தரவு தாங்கமுடியாது.

'உங்க வீட்லதான் தண்ணீரை அதிகமா செலவழிக்கிறீங்க; கரண்ட் பீஸ் இந்த மாசத்துலேர்ந்து யூனிட்டுக்கு ஒரு ரூபாய் கூடுதலா தரணும்; குழந்தைங்க ஓவரா சேட்டை பண்றாங்க, சத்தம் போடாம பார்த்துக்கங்க; விருந்தாளிங்க வந்திருக்காங்களா... ரெண்டு நாளைக்கு மேல தங்க விடாதீங்க’ன்னு என்னென்னவோ சொல்லிப் படுத்தியெடுப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக திடீர் திடீரென வாடகையை வேறு அதிகரித்துவிடுவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அப்பப்பா! எனக்கு எப்பதான் சொந்த வீடு வாய்க்குமோ? வாழ்நாள்ல எனக்கு அப்படி ஒரு யோகம் உண்டா, இல்லையா’ என ஏங்கித் தவிப்பவர்கள் ஏராளம். அவர்களில் நீங்களும் ஒருவரா? உங்களுக்குச் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டா?

எதிர்காலம் உங்கள் கையில்!

உங்கள் உள்ளங்கையைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்களேன்.

எதிர்காலம் உங்கள் கையில்!

படத்தில் நிழலிட்டுக் காட்டப்பட்ட பகுதியை நன்றாகக் கவனியுங்கள். புதன் மேட்டுக்குக் கீழே இருதய ரேகையின் அடிவாரத்தில், சந்திர மேட்டுக்கு மேலே உள்ள இந்த பகுதிதான் பூமித்தாய் வாசம் செய்யும் செவ்வாய் மேடு. இந்த மேடு சிறு வளைவுகளோடு சற்று சதைப்பற்றுடன் பரந்து, விரிந்து காணப்பட வேண்டும்.

எதிர்காலம் உங்கள் கையில்!

 இந்த செவ்வாய்  மேட்டில் அதிகக் குறுக்குக் கோடுகள் இல்லாமல் நேர்த்தியாக அமைந்திருக்க வேண்டும். செவ்வாய்மேட்டில் செங்குத்து ரேகை காணப்படுவது கூடுதல் விசேஷம்!

எதிர்காலம் உங்கள் கையில்!

 புத்தி ரேகை நேராக செவ்வாய் மேட்டைத் தொட்டுக்கொண்டிருக்க, அந்த ரேகையின் மேல் நோக்குக் கிளை ஒன்று செவ்வாய் மேட்டில் காணப்பட்டால், அந்த நபரின் எண்ணமும் பேச்சும் பூமியைக் குறித்தே இருக்கும். இந்த அமைப்பை பெற்ற அன்பர்கள் பூமித்தாயின் அருட்கடாட்சம் பெற்றவர்கள். இவர்களுக்கு வீடு, மனை அமைவதில் அதிகச் சிரமம் இருக்காது. பூமி, சொத்து சேர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பர். இவர்கள் அதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பதால், நேர்த்தியான தன ரேகை துவங்கும் ஒருசில ஆண்டுகளில் மனை வாங்கி, சொந்த வீடு கட்டிவிடுவார்கள்.

எதிர்காலம் உங்கள் கையில்!

 சூரிய ரேகை, ஆயுள் ரேகையில் மேல் நோக்கு ரேகை காணத் துவங்கும் வயது முதல் மேலும் மேலும் நிலங்கள் வாங்கி, பெரும் செல்வந்தர் ஆகிவிடுவார்கள்.

உங்கள் கையில் இந்த அமைப்பு இல்லாவிடினும் கவலை வேண்டாம்; உங்கள் வீட்டில் உங்களுக்கு நெருங்கிய எவரது கையில் மேலே சொன்ன அமைப்பு இருந்தாலும், சொகுசான சொந்த வீடு அமையும் யோகம் நிச்சயம் உங்களுக்கு வாய்க்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism