சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ராசிபலன்!

ராசிபலன்!

ராசிபலன்!
ராசிபலன்!
ராசிபலன்!

திமேதாவிதான்; ஆனாலும் அமைதியாக காய் நகர்த்துபவர் நீங்கள். ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி உண்டு. சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றுவீர்கள். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மகளுக்கு வேலை கிடைக்கும். மகனுக்கு நல்ல வரன் அமையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பேச்சில் தெளிவு வெளிப்படும். ஆபரணம் வாங்குவீர்கள்.

##~##
14-ஆம் தேதி வரை சூரியன் 11-ஆம் வீட்டில் நிற்பதால், அரசால் அனுகூலம் உண்டு. 15-ஆம் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால் அலைச்சல், திடீர் பயணம், முன்கோபம் வந்து செல்லும். அரசியல்வாதிகள், மேலிடத்தை பகைத்துக்கொள்ளாதீர்கள். சுகாதிபதி சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால், சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். குரு 12-ல் மறைந்திருப்பதால் எவருக்கும் வாக்குறுதி தராதீர்கள். வியாபாரத்தில், கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். நல்ல வேலையாட்களைத் தேடுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் தைரியமாக முடிவு எடுப்பீர்கள். மேலதிகாரிக்கு  ஆலோசனை வழங்குவீர்கள். கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும்.  

அனைவராலும் மதிக்கப்படும் நேரம் இது.

ராசிபலன்!

னி, மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர் நீங்கள். புதன் சாதகமாக இருப்பதால் நீண்ட நாள் எண்ணம் ஈடேறும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் திறமையை ஊக்குவிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு- வாகன வசதி பெருகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். செவ்வாய் 10-ல் நிற்பதால் பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். ரத்த சொந்தங்கள் வலிய வந்து பேசுவர். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். சுக்கிரன் 9-ஆம் வீட்டில் நிற்பதால் வீடு கட்ட லோன் கிடைக்கும். டி.வி., வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள்.

சனியால் அசதி, சோர்வு வந்து நீங்கும். ராகுவும் கேதுவும் சரியில்லாததால் சிறுசிறு நெருப்பு காயம், விபத்து, பேச்சால் பிரச்னை வரக்கூடும். கன்னிப் பெண்களின் கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்கள் உதவுவர். வியாபாரத்தில் புது யுக்தியால், லாபத்தைப் பெருக்குவீர்கள். வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதியாகும். உதாசீனப்படுத்திய உயரதிகாரிகள் உங்களை மதிப்பார்கள். கலைத் துறையினருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

புதிய பொறுப்பும் வாய்ப்புகளும் கதவைத் தட்டும் தருணம் இது.

ராசிபலன்!

திரிக்கும் நல்லதே செய்பவர் நீங்கள். ராசிநாதன் புதன் நீசபங்க ராஜயோகம் அடைந்திருப்ப தால், பிரச்னையை சமாளிக்கும் சக்தி கூடும். பணப்புழக்கம் ஓரளவு உயரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீடு- வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். கடன் பிரச்னையில் இங்கிதமாகப் பேசி வட்டியைத் தருவீர்கள். செவ்வாய் 9-ஆம் வீட்டில் நிற்பதால், தந்தைக்கு மருத்துவச் செலவு ஏற்படும். வழக்குகள் சாதகமாகும்.

சகோதர வகையில் உதவி உண்டு. நிலப் பிரச்னை தீரும். 15-ஆம் தேதி முதல் சூரியன் 10-ல் நுழைவதால் புதிய பதவி கிடைக்கும். இழந்த செல்வாக்கைப் பெறுவீர்கள். தாய்வழியிலான மனக்கசப்பு நீங்கும். 4-ல் சனி தொடர்வதால், விமர்சனங்களும் தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும். அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவர். பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். புதிய முதலீட்டால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களால் இருந்த பிரச்னை நீங்கும். பங்குதாரர்களுடன் இருந்த மோதல் விலகும். உத்தியோகத்தில் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். கலைத் துறையினருக்கு, கிசுகிசுக்கள் ஓயும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

இழுபறி நிலைமாறி ஏற்றம் பெறும் தருணம் இது.

ராசிபலன்!

ள்ளத்தில் அழுதாலும், உதட்டால் சிரிப்பவர் நீங்கள். குரு வலுவாக இருப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். தடைப்பட்ட வேலைகளை, வி.ஐ.பி-களின் உதவியுடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால் ஆரோக்கியம், தைரியம் கூடும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த சேதி வரும். புதன் சாதகமாக இருப்பதால், நட்பால் ஆதாயம் உண்டு. ராகு வலுவாக இருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாட்டில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டு. செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் வாகன விபத்து, டென்ஷன், பண நஷ்டம் ஏற்படக்கூடும்.

உடன்பிறந்தோரை அனுசரிக்கவும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சூரியன் 9-ஆம் வீட்டில் நிற்பதால் தந்தையுடன் கருத்து மோதல் வந்து நீங்கும். அரசியல்வாதிகளே, சிலர் உங்களைப் பற்றி தலைமையிடம் அவதூறு சொல்வார்கள். கன்னிப் பெண்கள் முடிவு எடுக்க முடியாமல் திணறுவர். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்களுடன் பிரச்னை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர். கலைத் துறையினர், வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் நேரம் இது.

ராசிபலன்!

விழுவது எழுவதற்கே என நினைப்பவர் நீங்கள். 7-ல் செவ்வாயும் சூரியனும் சாதகமாக இருப்பதால் புதிதாகத் திட்டமிடுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பர். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். வழக்கு சாதகமாகும்.சகோதர வகையில் நன்மை உண்டு. ராசியை நெருப்பு கிரகங்கள் பார்ப்பதால் டென்ஷன், முன்கோபம் வந்து செல்லும். 6-ல் சுக்கிரன் மறைந்திருப்பதால் தம்பதிக்குள் பனிப்போர் வந்து நீங்கும். வாகனம் பழுதாகும். வீண் செலவுகளால் சேமிப்பு கரையும். சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சாதுர்யமாக செயல்பட்டு முன்னேறுவீர்கள்.

புதன் 8-ல் நிற்பதால் நட்பு வட்டம் விரியும். உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

கேது வலுவாக இருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். கன்னிப் பெண்களுக்கு, முகப்பரு, தேமல் நீங்கும். பெற்றோர் ஆதரிப்பர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையாட்களால் மறைமுக நெருக்கடி வந்து நீங்கும். பங்குதாரர்கள் அடிக்கடி குடைச்சல் கொடுப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். சக ஊழியர்களுடன் விவாதம் வந்து போகும். கலைத் துறையினர், சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

சகிப்புத் தன்மையால் சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன்!

பிறரது கண்ணீரைத் துடைப்பவர் நீங்கள். 6-ல் செவ்வாய் வலுவாக இருப்பதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். தம்பதிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்பு உடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புதன் நீசபங்க ராஜயோகம் அடைந்திருப்பதால் உறவினர்கள் வலிய வந்து உறவாடுவர். புதிய வாகனம் வாங்குவீர்கள். சுக்கிரன் 5-ல் நிற்பதால் திடீர் பண வரவு உண்டு. ஆபரணங்கள் சேரும்.

14-ஆம் தேதி வரை சூரியன் 6-ஆம் வீட்டில் நிற்பதால் மதிப்பு கூடும். சிலர் உங்களுடைய உதவியை நாடுவார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தாயாரின் உடல் நலம் சீராகும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். 15-ஆம் தேதி முதல் சூரியன் 7-ஆம் வீட்டில் நுழைவதால், மனைவியுடன் கருத்துமோதல் ஏற்படலாம்; உடல் உஷ்ணத்தால் வயிற்று வலி வந்து நீங்கும். 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் 10-ஆம் தேதி இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம்; யோசித்து முடிவெடுங்கள். கன்னிப் பெண்களுக்கு புதிய நட்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு உண்டு. வியாபாரத்தின் சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். வேலையாட்களை அனுசரியுங்கள். உத்தியோகத்தில் சவாலான வேலையைக் கூட முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு வாய்ப்பு கிட்டும்; அதிகம் சம்பாதிப்பீர்கள்.

மனோபலத்தால் வெற்றி பெறும் காலம் இது.

ராசிபலன்!

னிக் கொள்கையுடன் செயல்படுபவர் நீங்கள். ராகு வலுவாக இருப்பதால் பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். கைமாற்றாக வாங்கிய பணத்தைத் தருவீர்கள். பழைய சொந்தம் தேடி வரும். ராசிநாதன் சுக்கிரன் 4-ல் அமர்ந்திருப்பதால் தைரியம் கூடும். புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். 5-ல் செவ்வாய் நிற்பதால் பிள்ளைகளால் செலவு உண்டு. சொத்து வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். எவரிடமும் அந்தரங்கம் பேசாதீர்கள். புதனும் குருவும் 6-ல் மறைந்திருப்பதால் டென்ஷன், தொண்டை வலி வந்து போகும். ஏழரைச் சனி தொடர்வதால் எவருக்கும் ஜாமீன் போடாதீர்கள்.

15-ஆம் தேதி முதல் சூரியன் 6-ஆம் வீட்டில் செல்வதால் திடீர் திருப்பம் உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. 10-ஆம் தேதி இரவு 8 மணி முதல் 12-ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், பொறுமையுடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் நிதானம் தேவை. வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லாதீர்கள். சக ஊழியர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். கலைத் துறையினர், விடாமுயற்சியால் சாதிப்பார்கள்.

மூளைக்கு வேலை தர வேண்டிய வேளை இது.

ராசிபலன்!

ளிவு மறைவின்றிப் பேசுபவர் நீங்கள். ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதால் உங்கள் பலம்- பலவீனத்தை உணர்வீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

வீடு- வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். உடன்பிறந்தோர் உங்களைப் புரிந்துகொள்வர். வழக்கு சாதகமாகும். புதன் சாதகமாக இருப்பதால் சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள் பாராட்டுவர். குரு பகவான் வலுவாக இருப்ப தால் தடைப்பட்ட திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். மழலை பாக்கியம் கிடைக்கும்.

3-ஆம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் நல்ல சேதி உண்டு. 14-ஆம் தேதி வரை 4-ஆம் வீட்டில் சூரியன் நிற்பதால் அரசால் அனுகூலம் உண்டு. 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி காலை 9:30 மணி வரை சந்திராஷ்டமம்; பேச்சில் நிதானம் தேவை. அரசியல்வாதிகளின் கோரிக்கை நிறைவேறும். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால் வீண் சந்தேகம், ஏமாற்றம் வந்து நீங்கும். கன்னிப் பெண்கள், உயர் கல்வியில் வெற்றி பெறுவர். வியாபாரத்தில், வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் நிகழும். உத்தியோகத்தில், அதிகாரிகள் உங்களது திறமையை உணர்வார்கள். கலைத் துறையினர் புகழ் பெறுவார்கள்.

சவாலில் வெற்றி பெறும் தருணம் இது.

ராசிபலன்!

ன்னலம் கருதாதவர் நீங்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாகப் பேசி செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண வரவு உண்டு. வழக்கில் வெற்றி உண்டு. புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். செவ்வாய் வலுவாக இருப்பதால் வீடு- மனை வாங்குவது லாபம் தரும். சகோதரியின் பிரச்னையைத் தீர்ப்பீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் நகை வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வர். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் தேடி வரும். புதிய வேலைவாய்ப்பு குறித்து நல்ல தகவல் வந்துசேரும்.

குரு பகவான் பலவீனமாக இருப்பதால் செலவு, சலிப்பு, சோர்வு வந்து நீங்கும். ராகுவும் கேதுவும் சரியில்லாததால் குழப்பம், தலைச்சுற்றல், திடீர்ப் பயணங்கள் ஏற்படலாம். 15-ஆம் தேதி காலை 9:30 முதல் 17-ஆம் தேதி மதியம் 1:30 மணி வரை சந்திராஷ்டமம்; பயணங்களில் கவனம் தேவை. அரசியல்வாதிகள், ஜெயிக்கும் அணியில் இடம் பிடிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று-வரவு உயரும். புதுத் தொழில் துவங்கும் முயற்சி வெற்றியடையும். சலுகைத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயரும். சம்பளம் கூடும். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். கலைத் துறையினர் பிரபலமாவார்கள்.

அச்சம் விலகி அதிகாரம் பெருகும் வேளை இது.

ராசிபலன்!

நிறை- குறைகளை பளிச்செனச் சொல்பவர் நீங்கள். ராசிக்குள் சுக்கிரன் நிற்பதால் எடுத்த வேலையை முடிப்பீர்கள். கடனுதவி கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தம்பதிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள் உதவுவர். குரு பகவான் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று, முடிந்து வைத்த காணிக்கையைச் செலுத்துவீர்கள். பிரச்னையைச் சமாளிக்க பூர்வீகச் சொத்தை விற்பீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 15-ஆம் தேதி முதல் சூரியன் ராசிக்கு 3-ஆம் வீட்டில் அமர்வதால் திடீர் யோகம் உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். அரசியல்வாதிகள், தலைமையின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள்.

17-ஆம் தேதி மதியம் 1:30 முதல் 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவு எடுக்கவேண்டாம். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியிடம் விவாதம் வேண்டாம். சக ஊழியர்களால் உங்களது பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத் துறையினரது திறமை வெளிப்படும்.

தன்னம்பிக்கையால் தலைநிமிரும் தருணம் இது.

ராசிபலன்!

சூழலுக்கு ஏற்ப செயல்படுபவர் நீங்கள். 2-ல் புதனும் குருவும் சாதகமாக இருப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். கல்வியாளர்கள், அறிஞர்கள் நட்பாவர். எதிர்பார்த்த பணம் வரும். தடைப்பட்ட கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். பிள்ளைகள் நல்ல முறையில் தேர்வு எழுதுவர். உறவினர்கள் தங்களது தவறை உணர்வார்கள். சுக்கிரன் 12-ல் மறைந்திருப்பதால், வீடு கட்டும் பணியைத் தொடங்க பணம் கிடைக்கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். ராசிக்குள் செவ்வாய் இருப்பதால் சேமிப்பு கரையும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் உண்டு. சகோதரரின் வருங்காலம் குறித்த கவலை வந்து நீங்கும்.

சூரியனால் பல் மற்றும் வயிற்று வலி, முன்கோபம் வந்து விலகும். அரசியல்வாதிகள், சகாக்களைப் பற்றிக் குறைகூற வேண்டாம். 19-ஆம் தேதி மாலை 5 முதல் 21-ஆம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப, சில திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். அதிக லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்களிடையே சலசலப்பு வந்து நீங்கும். உத்தியோகத்தில் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகள் மனம் மாறுவர். சக ஊழியர்களின் சம்பள உயர்வுக்குப் போராடுவீர்கள். கலைத் துறையினரது படைப்புக்கு, வேறு சிலர் உரிமை கொண்டாடுவர்.

கடின முயற்சியுடன் வெற்றியை ருசிக்கும் வேளை இது.

ராசிபலன்!

பேச்சு சாதுர்யம் கொண்டவர் நீங்கள். ராசிக்குள் புதன் நிற்பதால் இங்கிதமான பேச்சால் கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவுவர். வசதிகள் நிறைந்த வீட்டுக்கு மாறுவீர்கள். குடும்பத்தாரை அனுசரிக்கவும். சுக்கிரன் 11-ஆம் வீட்டில் நிற்பதால் பண வரவு திருப்தி தரும். ஆடியோ- வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். 12-ல் செவ்வாய் மறைந்திருப்பதால் பணம் வரும்; பற்றாக்குறையும் நீடிக்கும்.

வீடு- மனை வாங்குவது- விற்பதில் அவசரம் வேண்டாம். சூரியனால் மன உளைச்சல், அடிவயிற்றில் வலி, தாயாருடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். வழக்கில் தீர்ப்பு ஒத்திப் போகும். உடன்பிறந்தோருடன் ஈகோ பிரச்னை தலைதூக்கும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஜென்ம குரு நீடிப்பதால் வேலைச் சுமையால் வெறுப்பு, விரக்தி வந்து போகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். 7-ல் சனி இருப்பதால் மனைவிக்கு மருத்துவச் செலவு ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த காரியம் தாமதமாகும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். பங்குதாரர்களுடன் பகை வேண்டாம். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். கலைத் துறையினர், மூத்த கலைஞர்களிடம் இருந்து சில நுணுக்கங்களை கற்றுத் தெரிவீர்கள்.

எதிர்ப்புகள், அவமானங்களைக் கடந்து முன்னேறும் காலம் இது.

ராசிபலன்!
ராசிபலன்!