Published:Updated:

அமிர்த கலச வழிபாடு!

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-9கே.குமார சிவாச்சார்யார்

##~##

 'முன்னேறியவனைக் கண்டு முறைத்துப் பார்க்காதே! அவன் விழித்திருந்த இரவுகளை நினைத்துப் பார்’ என்றொரு சொல்வழக்கு உண்டு. உடன் பழகிய நண்பன் வீடு- வாசல், சொத்து - சுகம் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறான்; அல்லது, அலுவலகத்தில் சக ஊழியர் ஒருவர் பதவி- ஊதிய உயர்வு என விரைவாக முன்னேறுகிறார் எனில், அவர்களைப் பார்த்துப் பொறாமை கொள்வதில் அர்த்தம் இல்லை. கடின உழைப்பு அல்லது புத்திசாலித்தனம் என ஏதோ ஒரு தகுதி நம்மைவிட அவர்களிடம் அதிகம் உள்ளது  என்பதே அதற்குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்டு, நமது தகுதியை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யவேண்டும்.

ஆனால், நம்மில் பெரும்பாலானோர் அப்படி யில்லை. ஒருவர் முன்னேறுகிறார் என்றால், அதைக் கண்டு பொறாமைப்படுவதும், குறுக்குவழியில் அவர்களுக்குத் தடை ஏற்படுத்துவதிலேயே குறியாக இருப்பதும்தான் பலரின் வழக்கமாக இருக்கிறது. பில்லி- சூன்யம், தீவினை ஏவல் செய்வது என்று அவர்கள் இதற்காக மந்திர- மாந்திரீகர்களை நாடுவதும் உண்டு. அந்த வகையில், தங்களுக்குப் பிடிக்காத நபர்களுக்கு 'இடுமருந்து’ வைக்கும் நம்பிக்கையும் ஒன்று. பகைவராகக் கருதும் ஒருவருக்கு 'இடுமருந்தை’ உணவுடன் கலந்துகொடுப்பதன் மூலம் மனரீதி யாகவும் உடல்ரீதியாகவும் அவர்களைச் செயலிழக்கச் செய்துவிடலாம் எனும் விபரீத நம்பிக்கைகளும் நடைமுறையில் உண்டு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அமிர்த கலச வழிபாடு!

இப்படியான தீவினைகளுக்கு ஆளாகும் நிலை, ஜாதகரீதியாக யார் யாருக்கெல்லாம் அமையும்?

அமிர்த கலச வழிபாடு!

ஒருவரது ஜாதகத்தில், லக்னாதிபதி 8-ஆம் இடத்தில் சேர்ந்தால் விஷநோய், மருந்து பீடித்தல், வீண் பழி மற்றும் தொழில் முடக்கத்துக்கு ஆளாவர்.

அமிர்த கலச வழிபாடு!

 லக்னத்துக்கு 4-ஆம் இட செவ்வாய், தன் சொந்த இடம் இல்லாமல் இருந்தால், இடுமருந்தால் மன உளைச்சல், சொத்து பறிபோகுதலுக்கு ஆளாக நேரிடும்.

அமிர்த கலச வழிபாடு!

 ஒருவரது ஜனன ஜாதகத்தில் 6-ஆம் இடத்துச் செவ்வாய் பலவீனமாகி, 8-ல் பாவக் கிரகங்கள் சேர்ந்திருந்தால், எதிரிகளின் சூழ்ச்சி மற்றும் தீவினைகளால் உடல்நலத்தை இழக்க நேரிடும்.

அமிர்த கலச வழிபாடு!

 சந்திரனும் புதனும் கேந்திரத்தில் சேர்ந்திருந்து, அவர்கள் இருக்கும் வீட்டுக்கு உரிய கிரகத்தால் பார்க்கப்படாமலும் மற்ற கிரகங்களுடன் சேராமலும் இருப்பின், அந்த ஜாதகர் மனநல பாதிப்புக்கு ஆளாவார்.

அமிர்த கலச வழிபாடு!

 12-ஆம் இடத்தில் உள்ள செவ்வாய், பெண் கிரகத்துடன் கூடி இருந்தால், பெண்கள் வழியாக மனோவசியத்துக்கு ஆளாகி, சொத்து மற்றும் பொருட்களை இழப்பார்.

அமிர்த கலச வழிபாடு!

 8-ஆம் வீட்டோன் பலவீனமாகி, பாவர்களுடனும் தொடர்பு பெற்றிருந் தால், அவரது தசா காலத்தில் உறவினர் களிடமும் நண்பர்களிடமும் கவனமாக இருத்தல் அவசியம்.

அமிர்த கலச வழிபாடு!

 9-ஆம் வீட்டில் 6-ஆம் இடத்தோன் இருந்தால், தந்தைவழி உறவினரால் பகை, பூர்வீகச் சொத்து நாசம், வில்லங்கம், மருந்து வைத்தலால் உடல் நலக்கேடு உண்டாக வாய்ப்பு உண்டு.

அமிர்த கலச வழிபாடு!

 செவ்வாய் கும்பத்தில் இருக்கப் பெற்றவர்களுக்கு சூதாட்டம், சூன்ய மருந்து கொடுப்பது, பிறரை மனோவசியப்படுத்துதல் ஆகிய செயல்களில் அதிக ஈடுபாடு காணப்படும். இவர்களும் பிறரால் இடுமருந்து பாதிப்புக்கு ஆளாவர்.

அமிர்த கலச வழிபாடு!

 ஆயுள்காரகனாகிய சனி, அஷ்டமச் சனி காலத்தை நடத்தும்போது, மேஷத்தில் சனி இருக்கப் பெற்றவர்கள் தங்களது சயன, கிரஹ சுகபோகங்களை இழக்க நேரிடலாம்.

அமிர்த கலச வழிபாடு!

 8-க்கு உடையவன், 12-ல் சனி, ராகு மற்றும் கேதுவுடன் சேர்ந்து இருப்பவரால் பார்க்கப்பட்டால், மனோவசிய சக்திகளுக்கு பயப்படுபவராக விளங்குவார். உறவினர்களே இவரை தங்கள் வசப்படுத்த முயற்சிப்பார்கள்.

இத்தகைய தீவினை முயற்சிகளின் பாதிப்பில் இருந்து விடுபடவும், அவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் அமிர்த கலச வழிபாடு உதவும்.

அமிர்த கலச வழிபாடு!

அமிர்த கலச வழிபாடு

ஒரு வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் பூஜை அறையில் மணைப் பலகையைப் போட்டு, அதில் ஸ்வஸ்திகம் வரைய வேண்டும். அதன் மீது அரிசி பரப்பி, பூரண கும்ப கலசம் வைக்க வேண்டும். வெட்டிவேர், விளாமிச்ச வேர், இஞ்சி, வேப்பிலை மற்றும் துளசி கலந்த நீரால் கலசத்தை நிரப்ப வேண்டும். பிறகு, சந்தன- குங்குமம் மற்றும் பூக்களால் கலசத்தை அலங்கரிக்க வேண்டும்.

அடுத்து, கலசத்துக்கு முன் அமர்ந்து, வில்வ இலையைக் கையில் வைத்துக்கொண்டு, கீழ்க்காணும் மந்திரத்தை 5 முறை உச்சரித்து ஜபிக்க வேண்டும்.

ஓம் மிருத்யுஞ்சயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே
அமிர்தேசாய சர்வாய மகாதேவாயதே நம:
சம்சார வைத்ய சர்வக்ஞ பிக்ஷஜலம் அபியோ பிஷக்
மிருத்யுஞ்சய: ப்ரசன்னாத்மா தீர்க்கம் ஆயு: ப்ரயச்சது

அடுத்ததாக, பசுந்தயிரில் கடுகு இட்டுத் தாளித்து, வில்வ இலையை அதில் போட்டுக் கலக்கி, கலசத்தின் முன் வைத்து, கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். பின்னர்,

ஓம் அமிர்த மிருத்யுஞ்சயேஸ்வராய நம:
ஸர்வ சூன்ய நிவாரணம் சுபம்

என்ற மந்திரத்தைக் கூறி, தயிரை எடுத்து ஐந்து முறை அருந்த வேண்டும். பின்னர், ஆத்ம பிரதட்சிணம் செய்து பிரசாதம் எடுத்துக் கொள்ளலாம். இந்த எளிய பூஜையை திங்கட்கிழமைகளிலும் செய்து வரலாம். அத்துடன், அனுதினமும் திருநீலகண்ட பதிகம் கூறி, விஷம் உண்ட கண்டனாம் சிவபெருமானை மனத்தில் நினைத்து உள்ளம் உருகப் பிரார்த்திப்பதும் விசேஷம்! இதனால், சகலவிதமான தீவினைகள் மற்றும் தீவினை மருந்துகளின் பாதிப்புகள் நம்மை அண்டாமல் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழலாம்.

- வழிபடுவோம்...

திருநீலகண்ட பதிகத்தில் 2 பாடல்கள்...

காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனிமனத்தால்
ஏவினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்
நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாது செய்து
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அறியீர்
தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம்
சீற்றமதாம் வினை தீண்டப் பெறா திருநீலகண்டம்