Published:Updated:

ராசி பலன்கள்

'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் ஜோதிடம்

ராசி பலன்கள்

'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் ஜோதிடம்

Published:Updated:
##~##

ஜூலை 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை

கனவு கைகூடும்!

மேஷம்: ஆக்கும் சக்தி அதிகமுள்ளவர்களே! ராசிநாதன் செவ்வாய் பலம் பெற்று அமர்ந்திருப்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். உறவினர் வகையில் நிம்மதி உண்டு. சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ராகுவும், சனியும் 7-ல் நிற்பதால், சாதாரணமாக பேசுவது கூட சில

ராசி பலன்கள்

சமயங்களில் சண்டையில் முடிய வாய்ப்பு உண்டு. உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அவ்வப்போது உங்களுக்கு சோர்வு, மன உளைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். நிலுவையிலிருந்த பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும், அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள்.

குடும்பத்தில் அமைதி!

ரிஷபம்: திட்டமிடுதலில் வல்லவர்களே! உங்களின் லாபாதிபதி குருபகவான் வலுவாக தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி உண்டு. உங்களிடம்

ராசி பலன்கள்

கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். சுப நிகழ்ச்சிகளால் உங்கள் வீடு களைகட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர் மத்தியில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். நேர்முகத் தேர்வுக்கு சென்றவர்கள், புது வேலையில் அமர்வீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்லவிதத்தில் முடியும். ஆனால், செவ்வாய் 2-ல் நிற்பதால், பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் உங்கள் நிறுவனத்தை விருப்பத்துடன் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நீங்கள் நடந்துகொள்வீர்கள்.

இரவல்... கடன்... வேண்டவே வேண்டாம்!

மிதுனம்: மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தருபவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எல்லா பிரச்னைகளிலிருந்தும் நீங்கள் நூலிழையில்

ராசி பலன்கள்

காப்பாற்றப்படுவீர்கள். பணத்தட்டுப்பாடு ஓரளவு குறையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். ராசிக்குள் குருவும், செவ்வாயும் நிற்பதால்... சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் ஏதேனும் இருக்கிறதா என பார்த்து வாங்கவும். நகைகளை இரவல் தரவோ, இரவல் வாங்கவோ வேண்டாம். வியாபாரத்தில் கடன் தருவதை தவிர்க்கப் பாருங்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும்.

எதிர்பாராத காரிய வெற்றி!

கடகம்: கடினமான காரியத்தையும் கச்சிதமாக முடித்துக் காட்டுபவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்தவற்றில் சில தாமதமானாலும், எதிர்பாராத ஒரு வேலை

ராசி பலன்கள்

முடியும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும், கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சிலருக்கு புது வேலை கிடைக்கும். வேறு சிலருக்கு வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். ராசிக்குள் சூரியன் நிற்பதால், உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். குருவும், செவ்வாயும் 12-ல் மறைந்திருப்பதால்... வீண் டென்ஷன் ஏற்படக்கூடும். அவ்வப்போது தூக்கம் குறையும். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டி வரும். பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும்.

மகன், மகளுக்கு நல்ல எதிர்காலம்!

சிம்மம்: எதிலும் உடனடித் தீர்வை விரும்புபவர்களே! லாப வீட்டில் குருவும், செவ்வாயும் வலுவாக அமர்ந்திருப்பதால்... உங்களின் புகழ், கௌரவம் கூடும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு

ராசி பலன்கள்

எதிர்பார்த்த சிறந்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை, புது டிசைனில் வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சூரியன் 12-ல் மறைந்திருப்பதால்... வீண் அலைச்சல், செலவுகள் வந்து செல்லும். அரசாங்க விஷயம் தாமதமாக போய் முடியும். உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு மிகவும் அதிகரிக்கும்.

வெற்றிப்பாதை திறக்கும் நேரம்!

கன்னி: 'கற்றது கை மண்ணளவு’ என்பதை அறிந்தவர்களே! உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் சூரியனும், புதனும் நிற்பதால், உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். அரசால் அனுகூலம்

ராசி பலன்கள்

உண்டு. வீட்டை புதுப்பிப்பது, விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். ராகுவும், சனியும் 2-ல் நிற்பதுடன், குருவும் 10-ல் தொடர்வதால்... வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.  

உள்ளம் குளிர்விக்கும் இல்லறம்!

துலாம்: எதையும் கலை நயத்துடன் செய்யக்கூடியவர்களே! 10-ம் வீட்டில் சூரியனும், புதனும் வலுவாக அமர்ந்திருப்பதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பூர்விக

ராசி பலன்கள்

சொத்தால் வருமானம் வரும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார். ராகு, கேது மற்றும் சனியின் போக்கு சரியில்லாததால்... வீண் விரயம், பயம் வந்து போகும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. ஜூலை 31-ம் தேதி மதியம் 1.30 மணி ஆகஸ்ட் 2-ம் தேதி வரை எதிலும் மிகவும் நிதானித்து செயல்படப் பாருங்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்க புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களிடம் சில முக்கிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.  

ஆன்மிக பயணம்!

விருச்சிகம்: கொள்கை, கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காதவர்களே! கேது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் வலுவாக நிற்பதால், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். புகழ் பெற்ற புண்ணிய தலத்துக்கு சென்று வருவீர்கள். 8-ல் குருவும், செவ்வாயும் நிற்பதால், செலவுகள்

ராசி பலன்கள்

அதிகரிக்கும். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி நண்பகல் 12 மணி வரை முன்கோபத்தை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை மன நிறைவடைய வைக்க முடியாமல் போகலாம். உத்யோகத்தில் ஈகோ பிரச்னைகள் வரும்.

உத்யோகத்தில் உழைப்புக்கு பலன்!

தனுசு: அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் வாதாடுபவர்களே! லாப வீட்டில் சனியும், ராகுவும் வலுவாக அமர்ந்திருப்பதால், பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீட்டுமனை வாங்குவீர்கள்.

ராசி பலன்கள்

பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். சமையலறை சாதனங்களை மாற்றுவீர்கள். சூரியன் 8-ல் நிற்பதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். ஆகஸ்ட் 5-ம் தேதி நண்பகல் 12 மணி முதல் 7-ம் தேதி வரை எதிலும் மிகவும் முன் யோசனையுடன் செயல்படப் பாருங்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்யோகத்தில் கடின உழைப்புக்கு பலனாக உங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும்.

பிள்ளைகளால் மதிப்பு!

மகரம்: பிரதிபலன் பாராமல் உதவுபவர்களே! செவ்வாய் வலுவாக 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். பழைய மனையை விற்று,

ராசி பலன்கள்

புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும். சூரியன் 7-ல் இருப்பதால், முன்கோபம் வரும். வாழ்க்கைத் துணைவர் அவ்வப்போது அலுத்துக்கொள்வார். குரு 6-ல் மறைந்து கிடப்பதால், நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடலாம். ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி காலை 7.30 மணி வரை யாரையும், எதற்காகவும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் நீங்கள் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும்.

வசதிகள் பெருகும்!

கும்பம்: எப்போதும் யதார்த்தத்தை விரும்புபவர்களே! குரு 5-ம் வீட்டிலேயே தொடர்வதால் அடிப்படை வசதிகள் பெருகும். வீட்டை இடித்துக் கட்டுவது, கூடுதல் தளம் அமைப்பது போன்ற

ராசி பலன்கள்

முயற்சிகள் பலிதமாகும். 5-ல் செவ்வாய் தொடர்வதால், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வரும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து உட்கொள்ள வேண்டாம். புதன் 6-ல் மறைந்து கிடப்பதால் உடல் உபாதை, உறவினர்களுடன் நெருடல்கள் ஏற்படலாம். ஆகஸ்ட் 10-ம் தேதி காலை 7.30 மணி முதல் 12-ம் தேதி மதியம் 2 மணி வரை வீண் கவலைகள் வந்து செல்லும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.  

வருங்காலத்தை செதுக்கும் நேரம்!

மீனம்: பாரம்பரிய பெருமையைக் காப்பவர்களே! புதன் சாதகமாக இருப்பதால், வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். சிலர் வீடு மாற திட்டமிடுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க

ராசி பலன்கள்

நினைத்த உறவினர்கள், தோழிகளை சந்திப்பீர்கள். ஆகஸ்ட் 11-ம் தேதி வரை சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், உடல் உபாதை, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து செல்லும். சூரியன் 5-ல் நிற்பதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதாலும் 8-ல் ராகுவும் நிற்பதாலும்... படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் சந்தை நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள். சிலரின் தவறான அறிவுரையால் நஷ்டம்  ஏற்படலாம். உத்யோகத்தில் அதிக பேச்சு வேண்டாம்.