Published:Updated:

ராஜயோகம் தேடி வரும்!

உங்கள் லக்னம் லக்கியா?லக்கி லக்னம் தனுசு ஜோதிடமணி வசந்தா சுரேஷ்குமார்

ராஜயோகம் தேடி வரும்!

உங்கள் லக்னம் லக்கியா?லக்கி லக்னம் தனுசு ஜோதிடமணி வசந்தா சுரேஷ்குமார்

Published:Updated:
##~##

 வரையும் எளிதில் எடைபோடும் திறனும், பிரச்னைகளைக் கண்டு சிறிதும் மனம் தளராமல் உறுதியாய் நின்று போராடி வெற்றி காணும் துணிச்சலான குணமும் கொண்டவர் நீங்கள். சுய காரியத்தில் எப்போதும் கண்ணாக இருப்பீர்கள். வில்லில் பிறந்த உங்களின் சொல்லாற்றல் எங்கும் வெற்றிபெறும்.

உங்களின் பிற குணங்கள்:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜயோகம் தேடி வரும்!

தியாக மனப்பான்மை, பொறுமை இவற்றுடன் விவேகமாகவும் செயல்பட்டுப் பாராட்டு பெறுவீர்கள். நண்பர்கள் அதிகம் உண்டு. திட்டமிட்டுச் செயல்படுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே!

ராஜயோகம் தேடி வரும்!
ராஜயோகம் தேடி வரும்!

 கல்வியை நல்ல ஊக்கத்துடன் கற்பீர்கள். முதல்நிலையில் தேர்ச்சி பெறும் வாய்ப்பும் சிலருக்கு உண்டு. மனஉறுதியும், சவாலைச் சந்திக்கும் திறனும் பெற்றிருப்பீர்கள். சூரியன், செவ்வாய் சுபர்கள்.

ராஜயோகம் தேடி வரும்!

 பொறுப்பான பதவிகள் உங்களைத் தேடி வரும். மதியூகம் நிறைந்தவர் நீங்கள்.

ராஜயோகம் தேடி வரும்!

தெய்வ அனுக்கிரகம் அதிகம் உண்டு. வாழ்வில் உயர்நிலையை அடைவீர்கள்.

லக்னாதிபதி: குரு

தெய்வம்: சிவபெருமான்

அதிதேவதை: வருணன்

வஸ்திரம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23, 3, 12, 21, 30

ராஜயோகம் தேடி வரும்!

வழிபாடு: சிவபுராணம், ஸ்ரீநவக்கிரக துதிகள் பாராயணம் செய்துவர, மனத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மேலும், வியாழக்கிழமைதோறும் ஸ்ரீகுருபகவானை வழிபடுவதும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியைத் தரிசிப்பதும், ஸ்ரீசெந்திலாண்டவரை வழிபடுவதும் நன்று. வியாழக்கிழமைகளில்...

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்கமுதல் கற்ற கேள்வி
ல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப்பாலாய்
எல்லாமாய் அல்லவுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டி
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து
பவத்தொடக்கை வெல்வாம்  

- எனும், பரஞ்சோதி முனிவர் அருளிய இந்தப் பாடலைப் பாடி ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபடுவது விசேஷம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism