Published:Updated:

இனி எல்லாம் சந்தோஷம்!

மருத்துவச் செலவு இனி இல்லை!வாழ்வே வரம்-11 ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

இனி எல்லாம் சந்தோஷம்!

மருத்துவச் செலவு இனி இல்லை!வாழ்வே வரம்-11 ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
##~##

19 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.

என்னைப் பார்ப்பதற்காக வந்திருந்தார், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர். போக்குவரத்துத் துறையில் அதிகாரியாகப் பணிபுரியும் தன் மகனுக்குப் பெண் பார்த்துக்கொண்டிருப்பதாகச் சொன்னவர், பொருத்தம் பார்ப்பதற்காகக் கொண்டு வந்திருந்த பத்துக்கும் மேற்பட்ட பெண்களின் ஜாதகங்களை என் முன் வைத்தார். அவரது மகனின் ஜாதகத்தோடு எந்தப் பெண்ணின் ஜாதகம் நன்றாகப் பொருந்திப் போகிறது என்று பார்த்ததில், மூன்று ஜாதகங்கள் மட்டும் மிஞ்சின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இந்த மூன்று ஜாதகங்கள்தான் உங்கள் மகனுக்குப் பொருத்தமாக உள்ளன. இவர்களில் ஒருவரைப் பேசி முடித்துவிடுங்கள்' என்றேன்.

'நீங்கள் தேர்வு செய்த மூன்று பெண்களும் எங்களுக்குச் சமமான அந்தஸ்தில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், நீங்கள் நிராகரித்த ஒரு பெண் வீட்டில் எங்களிடம் வலிய வந்து வரன் பேசுகிறார்கள். அவர்கள் எங்களைவிட அந்தஸ்திலும் செல்வாக்கிலும் உயர்ந்தவர்கள். அந்த வீட்டாரோடு சம்பந்தம் பேசி முடித்தால், என் மகனின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்னு நினைக்கிறேன். தயவுசெய்து, அந்தப் பெண்ணின் ஜாதகத்தை மறுபடியும்

இனி எல்லாம் சந்தோஷம்!

ஒரு தடவை பார்த்து, நல்ல தகவலா சொல்லுங்க..!' என்றார் அவர், விடாப்பிடியாக.

'நீங்கள் குறிப்பிடும் பெண்ணின் ஜாதகத்தையும் ஆராய்ந்துவிட்டேன். நட்சத்திர பொருத்தமும், முக்கியமான பொருத்தங்களும் இல்லை. ஜாதகப்படி கிரக பொருத்தமும் இல்லை. ஒருவேளை, நீங்கள் விரும்பியபடியே அந்தப் பெண்ணை உங்கள் மகனுக்குத் திருமணம் செய்துவைத்தால், அவர்களின் குடும்ப வாழ்க்கை நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்காது. அந்தப் பெண்ணின் ஜாதகப்படி அவருக்கு நிறைய மருத்துவச் செலவுகள் செய்யவேண்டியிருக்கும். வாரிசும் கிடைக்காது'' என்று உண்மையைச் சொன்னேன்.

நான் சொன்னதை சீரியஸாகவே எடுத்துக்கொள்ளாமல், 'இருக்கட்டுமே சார்! அதனால் என்ன..? அவங்க பெரிய பணக்காரக் குடும்பம். அவங்க நினைச்சா லண்டன், அமெரிக்காவுக்கெல்லாம் போய்க்கூட சிறப்பு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கலாம். வேற ஏதாவது தகுதியான காரணம் இருந்தா, சொல்லுங்க!' என்றார் அவர்.

மேற்கொண்டு வளர்த்த விரும்பாமல், 'ஜாதகம் என்ன சொல்லுதுங்கிறதை நான் உங்ககிட்ட சொல்லிட்டேன். அப்புறம் உங்க விருப்பம்!'' என்று சொல்லிவிட்டேன்.

'சரி, நாங்க யோசிச்சு முடிவெடுக்கிறோம்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார் அவர். அதன்பிறகு, அவரை நான் மறந்தே போனேன். சுமார் பத்து ஆண்டுகள் கழிந்திருக்கும்... அதே நபர் மீண்டும் என்னிடம் வந்தார். முதலில் எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. அவரே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார்.

இனி எல்லாம் சந்தோஷம்!

'சார், அன்னிக்கு நான் உங்க பேச்சைக் கேட்காதது தப்பா போச்சு! பணக்கார இடமா இருக்கேன்னு ஆசைப்பட்டு, நீங்க வேண்டாம்னு சொன்ன பெண்ணையே என் மகனுக்குத் திருமணம் செஞ்சு வெச்சேன். ஆரம்பத்துல வாழ்க்கை நல்லாத்தான் போச்சு. பிறகுதான் பிரச்னையே ஆரம்பமானது. அந்தப் பெண் மூலமா என் பையனுக்குக் குழந்தை பாக்கியமே கிடைக்கலை. அந்தப் பெண்ணோட கர்ப்பப்பை சின்னதா இருக்குன்னும், குழந்தையைத் தாங்கக்கூடிய சக்தி அந்த கர்ப்பப் பைக்கு இல்லைன்னும் மருத்துவ சோதனையில தெரிய வந்துச்சு. அதுக்கு அப்புறம் கட்டி இருக்குன்னு சொல்லி, கர்ப்பப்பையையே எடுத்துட்டாங்க.

அதோட, இன்னொரு பிரச்னையும் சேர்ந்திடுச்சு. என் மகன் சென்னை, திருவான்மியூர்ல சில கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு இடத்தை விலைக்கு வாங்கி வீடு கட்ட ஆரம்பிச்சான். அந்த வீட்டைக் கட்டி முடிக்கிற நேரத்துல ஒரு பெரிய பிரச்னை! அந்த இடத்தை எங்களுக்கு வித்த நபர், அதையே இன்னொருத்தனுக்கும் வித்திருக்கான். அதனால கோர்ட், கேஸ்னு ஆகி, கோடிக் கணக்குல நஷ்டம்!' என்று சொல்லிப் புலம்பினார். அவருக்கு ஆறுதல் மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.

ஓர் ஆணின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டுக்கு உரிய கிரகம் மறைந்து பலவீனமாகி இருக்க, அந்தக் கிரகத்துடன் 6, 8-ஆம் வீட்டுக்கு உரிய கிரகங்களும், பாதகாதிபதியும் சேர்ந்திருந்தால், அவருக்குத் திருமணம் ஆன நாளில் இருந்தே மனைவியால் மருத்துவச் செலவுகளும், மற்ற செலவுகளும் வந்துகொண்டே இருக்கும்.

அதேபோல், ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி, ராசிநாதனுடன் 6-க்கு உரிய கிரகமும் சேர்ந்து, இவர்களுடன் 8-ஆம் வீட்டுக்கு உரிய கிரகமும் சேர்ந்து, இந்தக் கூட்டுக் கிரகங்களை சனி பார்த்துவிட்டால், அவருக்கு மருந்தே வாழ்க்கையாகிவிடும். அதாவது, அவர் வாழ்நாள் முழுக்க மருந்து, மாத்திரைகளுடனேயே  வாழ்வார்.

பூர்வபுண்ணியாதிபதியுடன் 6, 8-ஆம் வீட்டுக்கு உரிய கிரகம் சேர்ந்தால் பிள்ளைகளால் மருத்துவச் செலவு ஏற்படும். பொதுவாக, மேஷம் தொடங்கி மீனம் வரையிலான 12 ராசியினருக்குமே நோய்கள் வந்து மருத்துவச் செலவு ஏற்பட்டாலும், மேஷம், ரிஷபம், துலாம், விருச்சிகம் ஆகிய நான்கு ராசியினர் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள்; உடல்ரீதியான பிரச்னைகளைச் சந்திப்பார்கள்.

மேஷ ராசிக்கு ராசிநாதன் செவ்வாய். இவரே அழகு, அறிவு, ஆரோக்கியத்துக்குக் காரணமானவர். இந்தச் செவ்வாயே அலைச்சல், விபத்து, கண்டம், நோய்த் தொற்று ஆகியவற்றைத் தரக்கூடிய 8-ஆம் வீட்டுக்கும் அதிபதியாக இருக்கிறார். இதனால், இந்த ராசியினர் ரத்த அழுத்தம், கால்- கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டுவட பாதிப்புக்கு ஆளாவார்கள். அதே நேரம், தவிர்க்க முடியாத செலவுகளிலும் அடிக்கடி சிக்கிக்கொள்வார்கள். பெரிய அளவில் பட்ஜெட் போட்டு, அதனால் கடனாளி ஆவோரில் இவர்களே முதலிடம்!

ரிஷப ராசியினருக்கு ராசிநாதனான சுக்கிரனே 6-ஆம் வீட்டுக்கும் அதிபதியாக இருக்கிறார். இந்த 6-ஆம் இடம் கடன், நோய், எதிரி ஆகியவற்றுக்கு உரியது. 'வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது’ என்று சொல்வார்கள் இல்லையா? அப்படிப் புலம்புபவர்களில் பெரும்பாலானோர் இந்த ராசியினராகத்தான் இருப்பார்கள். தவிர தொண்டை வலி, கொழுப்புக் கட்டி, தோல் அலர்ஜி, சளித் தொந்தரவு மற்றும் பால்வினை நோய்களால் இவர்கள் அதிகம் அவதியுறுவர்.

துலாம் ராசியினருக்கும் சுக்கிரனே ராசிநாதன். இவரே பயணத்துக்கு உரிய 8-ஆம் வீட்டுக்கு உரியவர். இந்த ராசியினர் அடிக்கடி பயணம் செய்துகொண்டிருந்தால் பிரச்னை இல்லை. இல்லையென்றால், ஏதாவது உடல் பாதிப்புகளில் சிக்கித் தவிப்பர். குறிப்பாக காது, மூக்கு, தொண்டை பிரச்னைகள், பல் நோய்கள், சர்க்கரை நோய்களுக்கு இவர்கள் ஆட்படுவர்.

விருச்சிக ராசியினருக்கு செவ்வாய் ராசிநாதன். இவர் இந்த ராசியினருக்கு தைரியம், நிர்வாகத் திறன், பளிச்சென்ற பேச்சு ஆகிய ப்ளஸ் பாயின்ட்டுகளைத் தந்தாலும், அவரே 6-ஆம் இடத்துக்கும் அதிபதியாக வருவதால், வழக்கால் கடன், சொத்துக் கடன், திடீரென்று பெரிய தொகை 'லாக்’ ஆகிவிடுவது, மன இறுக்கம், வலிப்பு, மூளையில் ரத்தம் உறைதல், முதுகுவலி, இடுப்புவலி ஆகிய பிரச்னைகளில் சிக்கிக்கொள்வர்.

ஏன் இந்த நான்கு ராசியினருக்கு மட்டும் உடல் சார்ந்த பிரச்னைகள் அதிகம் ஏற்பட வேண்டும் என்று கேட்கிறீர்கள்தானே?

நிம்மதி, அழகு, வசதி வாய்ப்பு ஆகியவற்றைத் தரக்கூடிய ராசிநாதனே இந்த நான்கு ராசிகளுக்கும் 6, 8-ஆம் வீட்டுக்கு அதிபதியாக வருவதால், மற்ற ராசியினரைவிட இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். சக்திக்கு மீறி கடன் வாங்கக்கூடாது. வங்கியில் லோன் வாங்கி, மனை வாங்கி, கடைசியில் டியூ கட்டமுடியாமல் அதை விற்றுவிட்டார்கள் என்று நீங்கள் யாரையாவது கேள்விப்பட்டு இருந்தால், அவர்கள் இந்த நான்கு ராசிகளில் ஒருவராகத்தான் இருப்பார். இவர்கள் சொத்து வாங்கும்போது இரட்டிப்பு மடங்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

மற்ற ராசிக்காரர்களுக்கும் கடன் பிரச்னை, நோய்த் தொந்தரவு இருக்கும் என்றாலும், இந்த நான்கு ராசிக்காரர்கள் அவற்றைத் தேடிச் சென்று வாங்கி வருவார்கள் என்பதுதான் விநோதம்.

இவர்கள் சில பரிகாரங்களைச் செய்தால், நோயற்ற நிம்மதியான வாழ்க்கையைப் பெறலாம்.

* மருத்துவச் செலவு தேவைப்படும் நபர்களுக்கு முடிந்த அளவு உதவி செய்வது;

* பழைமையான ஆலயங்களின் தலவிருட்சப் பராமரிப்பில் ஈடுபடுவது;

* மா, அத்தி உள்ளிட்ட பால்மரக்கன்றுகளை பொது இடங்களில் நட்டுப் பராமரிப்பது;

* தெரிந்தோ தெரியாமலோ யாருடைய சொத்தையோ பணத்தையோ அபகரித்து இருந்தால், அவற்றை நாணயமாகத் திருப்பிக் கொடுத்துவிடுவது;

இந்தப் பரிகாரங்களோடு, கும்பகோணம் அருகே உள்ள பட்டுக்குப் பெயர் பெற்ற திருபுவனத்தில் கோயில்கொண்டுள்ள ஸ்ரீசரபேஸ்வரரை வழிபட்டு, அவர்களுடைய வயது எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றி வணங்கினால், நோய், கடன், வழக்கு பிரச்னைகளில் இருந்து நிம்மதி கிடைக்கும்.

- சந்தோஷம் பெருகும்...

தொகுப்பு: எம்.ஜெயமுருகானந்தம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism