Published:Updated:

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-13

கே.குமார சிவாச்சாரியார்

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-13

கே.குமார சிவாச்சாரியார்

Published:Updated:
வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-13

''இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து நிம்மதியே இல்லாம போச்சு. அடுத்தடுத்து செலவுகள், கடன் தொல்லை, நோய்-நொடின்னு ஒட்டுமொத்த சந்தோஷமும் தொலைஞ்சு போச்சு. வேண்டாதவங்க யாரோ சூன்யம் வெச்சிட்டாங்களோன்னு தோணுது'' இப்படிப் புலம்பும் அன்பர்கள் பலரைப் பார்த்திருப்போம்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதுவுமற்ற வெற்றிடத்தை சூன்யம் என்பார்கள். அதே போன்று நம் வாழ்க்கையையும் ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டு, வெறுமையாக்கிவிடும் தீவினைகளையும், 'சூன்யம்’ என்று முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள் போலும்.

ஜனன ஜாதகத்தில் சனி, ராகு ஆகிய இருவரும் சூரியன் வீட்டில் சேர்ந்தாலும் 6, 8, 10, 12 ஆகிய இடங்களில் இரண்டு பாவர்களுடைய சேர்க்கை இருந்தாலும் தீவினை பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை ஏற்படலாம்.

சூன்யம், ஏவல், கட்டு, கருப்பு, வித்தை என்று நம்மைச் சூழும் தீவினைகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள இறையருள் துணை செய்யும். அதிலும் குறிப்பாக கருட பகவான் வழிபாடும், துதிகளும்... தீவினைகளை நம்மை அண்டவிடாமல் விரட்டும் கவசமாகத் திகழ்கிறது.

ஸ்ரீகருட பூஜை

பஞ்சாங்க சுத்தமுள்ள வார நாட்களில், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த பூஜையைச் செய்யலாம்.

பூஜை தினத்தில் அதிகாலை எழுந்து நீராடி, பூஜையறையை கழுவி சுத்தம் செய்து கருட கோலம் வரைந்துகொள்ள வேண்டும். அதில் ஸ்ரீமகாவிஷ்ணு மூர்த்திக்குச் செய்யக்கூடிய விதிப்படி... சங்கு-

சக்கரமும் கோலமாக போடவேண்டும். பின்னர் கோலத்தின் மீது தலைவாழை இலை போட்டு, அதில் அரிசி இட்டு அதன் மீது கும்பங்கள் வைக்க வேண்டும். அடுத்ததாக மூன்று முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

தீவினைகளால் பாதிப்புக்கு ஆளான நபர்களுக்கு நீல வண்ண ஆடை அணிவித்து, நீல வண்ண நூலால் காப்பும் அணிய வைத்து, சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-13

பின்னர் ஸ்ரீமகாவிஷ்ணு தியான மந்திரம் அல்லது காயத்ரி கூறி வீட்டைச் சுற்றிலும் கலச நீரைத் தெளிக்க வேண்டும். பிறகு கலசத்தை அதே இடத்தில் வைத்துவிட்டு, 108 அரசு மற்றும் புரசங் குச்சிகளால் நெய்யுடன் யக்ஞ ஆவர்த்தி செய்ய வேண்டும். தொடர்ந்து, அக்னியில் இருந்து கரி எடுத்து நெய் மற்றும் ஜவ்வாது கலந்து ரட்சை இட்டுக் கொள்ள வேண்டும். இது பிரயோக முறை. யாக முறை செய்யும்போது பறவைகள் உண்ணும் பட்சணங்கள், பழங்களை அக்னியில் போட்டு, கலசத்துக்கும்  யக்ஞ அக்னிக்கும் கற்பூர ஆரத்தி செய்தல் வேண்டும். இயன்றால், ஒரு

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-13

கருடப்பறவையைத் தேடிச் சென்று அதற்கு பட்சணங்கள் பழங்களைப் போட்டு அது உண்பதைக் காண்பது சிறப்பு. இல்லையெனில் வேறு ஏதேனும் ஒரு பறவைக்கு பட்சணங்கள்- பழங்கள் போட்டு கருடனை மனத்தில் தியானித்து வழிபடலாம். இதுபோன்ற வழிபாடுகள் மட்டுமின்றி, அனுதினமும் ஸ்ரீவிஷ்ணு வாகனனான கருட பகவானுக்கு உரிய எளிய மந்திரங்களைக் கூறி மனத்தில் தியானித்தும் வணங்கலாம்.

அதேபோன்று கருட புராணம் படிப்பதும், கருடனின் கதையைக் கேட்பதும்கூட விசேஷ பலன்களைப் பெற்றுத்தரும். தீயசக்திகளுக்கு சத்ருவாக திகழும் ஸ்ரீகருட பகவானின் புண்ணிய கதையையும், மகிமைவாய்ந்த மந்திரங்களையும் அடுத்த இதழில் பார்ப்போம்.

- வழிபடுவோம்...

ஸ்ரீகருட காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே ஸ்வர்ணபட்சாய தீமஹி
தந்நோ கருட: ப்ரசோதயாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism