Published:Updated:

தாய்க்குலத்தை உயர்த்தப்போகும் கர வருடம்

தாய்க்குலத்தை உயர்த்தப்போகும் கர வருடம்

தாய்க்குலத்தை உயர்த்தப்போகும் கர வருடம்

தாய்க்குலத்தை உயர்த்தப்போகும் கர வருடம்

Published:Updated:
தாய்க்குலத்தை உயர்த்தப்போகும் கர வருடம்
தாய்க்குலத்தை உயர்த்தப்போகும் கர வருடம்


விக்ருதி வருடம் நிறைவடைந்து, கர புத்தாண்டு... 14.4.2011 வியாழக் கிழமை காலை 11:27 மணிக்கு, சுக்லபட்சத்தில் ஏகாதசி திதி, மக நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னத்தில்; நவாம்சத்தில் மீன லக்னம் மிதுன ராசியில், கண்மம் நாமயோகம், பாலவம் நாமகரணம், அமிர்த யோகம் நேத்திரம் நிறைந்த நன்னாளில், பஞ்சபட்சியில் மூன்றாவது சாமத்தில், ஆந்தை நடைபயிலும் நேரத்தில், கேது தசையில், குரு புத்தி, சூரியன் அந்தரத்தில், சந்திரன் ஓரையில் பிறக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாய்க்குலத்தை உயர்த்தப்போகும் கர வருடம்

- உலகெங்கும் கனமழை பொழியும். வெள்ளப்பெருக்கால் அழிவுகள் அதிகரிக்கும். ஆடு- மாடு உள்ளிட்ட விலங்குகள் விசித்திர நோயால் இறக்கும். பால், மோர், தயிர், நெய் உற்பத்தி குறையும். அவற்றின் விலையும் அதிகரிக்கும் என்று இடைக்காடர் சித்தர் பெருமான் சூசகமாகக் கூறியுள்ளார்.

இந்த வருடத்தின் ராஜாவாக சந்திரன் வருவதால், பெண்கள் கை ஓங்கும். பெண் குழந்தை பிறப்பு அதிகரிக்கும். மந்திரியாக குரு வருவதால், ஆட்சியாளர்கள் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டிய சூழல் வரும். எதிர்க்கட்சிகளின் கை ஓங்கும்.

##~##
அர்க்காதிபதி, மேகாதிபதி மற்றும் சேனாதிபதியாக புதன் வருவதால் கல்வித் துறையில் அதிரடி மாற்றங்கள் உண்டாகும். தனியார் பள்ளிகளுக்கும் அரசுக்கும் இடையேயான பனிப்போர் விலகும். நோட்டுப்புத்தகங்களின் விலை உயரும். சுதேசி தொழில்கள் மீண்டும் வளரும். எனினும், சுய தொழில் தொடங்குவோர் நெருக்கடிக்கு ஆளாவார்கள்.

'சில்வர்-கிரே’ நிற மேகங்கள் அதிகம் சூழும். சூறாவளியின் காரணமாக வழக்கத்துக்கு அதிகமாக மழை கொட்டும். வெள்ளச் சேதம் அதிகரிக்கும். அணைக்கட்டுகள் உடையும் அபாயம் உண்டு. விளைநிலங்கள் பாதிக்கப்படலாம். கந்தக பூமியும் பாலைவனமும் செழிக்கும். சேனாதிபதியாகவும் புதன் வருவதால்... இந்தக் கிரகம் புத்த மதத்துக்குரியவர் ஆதலால், சீனா மற்றும் இலங்கையால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். நேபாளம், பாகிஸ்தான் மூலமாகவும் தீவிரவாதிகள் நுழைவார்கள்!

தாய்க்குலத்தை உயர்த்தப்போகும் கர வருடம்

ஸஸ்யாதிபதியாகவும், நீரஸாதிபதியாகவும் சூரியன் வருவதால், வெயிலின் சீற்றம் கடுமையாக இருக்கும். அயல்நாட்டில் இருப்பவர்கள் தாய்நாடு திரும்பவேண்டி வரும். பெட்ரோல், டீசல் விலை உயரும்.

தானியாதிபதியாக சுக்கிரன் வருவதால் மழையால் உணவுப் பொருட்கள் சேதமடையும். தானியக் களஞ்சியங்களில் தீ விபத்து உண்டாகும். அரிசி மற்றும் சர்க்கரையில் விலை உயரும்.

அந்தமான், இந்தோனேஷியா, இந்தியாவில் கடல் சீற்றம் உண்டு. புதிதாக அணு உலை உருவாக்கப்படும். பூமி விலை உயரும்; கட்டடங்கள் விலை சற்றே குறையும். தங்கம் விலை உயரும். ஆடியோ மற்றும் வீடியோ சாதனங்களின் விலை குறையும்.

கர வருடத்தில் கிரகணங்கள்...

தாய்க்குலத்தை உயர்த்தப்போகும் கர வருடம்

கர வருடத்தில் இரண்டு சந்திர கிரகணங்கள் உண்டு!

கர வருடம், வைகாசி மாதம் 32-ஆம் நாள் (15.6.2011) புதன் கிழமை, பௌர்ணமி திதி, கேட்டை நட்சத்திரத்தில் முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இரவு 11:52-மணிக்கு, சந்திரனை கேது பிடிக்கத் துவங்கி, நள்ளிரவு 1:38 மணிக்கு அதிகமாகி, அதிகாலை 3:32 மணிக்கு விடுகிறது.    

இதையட்டி ஆயில்யம், அனுஷம், கேட்டை, மூலம் மற்றும் ரேவதி நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

இரண்டாவது சந்திர கிரகணம்... கர வருடம், கார்த்திகை மாதம், 24-ஆம் நாள் (10.12.2011) சனிக்கிழமையன்று, பௌர்ணமி திதி- ரோகிணி நட்சத்திரத்தில், முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. மாலை 6:14 மணிக்கு, வடகிழக்கு திக்கில், சந்திரனை ராகு பிடிக்கத் துவங்கி, இரவு 7:58 மணிக்கு அதிகமாகி, இரவு 9:47 மணிக்கு வடமேற்கு திசையில் விடுகிறது.

இதையட்டி கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், அஸ்தம் மற்றும் திருவோண நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism