Published:Updated:

ராசிபலன்!

ராசிபலன்!

ராசிபலன்!

ராசிபலன்!

Published:Updated:
ராசிபலன்!


மார்ச் 22 முதல் ஏப்ரல் 4 வரை

ராசிபலன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புரட்சிகரமான சிந்தனையாளர் நீங்கள். தனாதிபதி சுக்கிரன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு. 24-ஆம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவதால் அலைச்சல், சுபச் செலவு வந்து போகும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். உடன்பிறந்தோரை அனுசரிக்கவும். சொத்து வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். புதனும் 12-ல் மறைந்திருப்பதால் பழைய நண்பர்கள் வீடு தேடி வருவர். உறவினர்களால் அனுகூலம் உண்டு. குருவும் சூரியனும் 12-ல் நிற்பதால் தூக்கமின்மை, டென்ஷன், தந்தைக்கு மருத்துவச் செலவு, தாயாருடன் கருத்து மோதல் ஆகியன வந்து நீங்கும்.

23-ஆம் தேதி இரவு 9.30 மணி முதல் 25-ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். அரசியல்வாதிகள், சகாக்களை குறை கூறாதீர்கள். கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் உண்டு. வாடிக்கையாளர்களை மனம்கோணாமல் நடத்துங்கள். பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னை வந்து நீங்கும். உத்தியோகத்தில் அனுசரித்துப் போவது நல்லது. சக ஊழியர்களிடம் கனிவாகப் பழகவும். கலைத்துறையினர், திறமையை வெளிப்படுத்தப் போராடுவர்.

திட்டமிடுதல் மூலம் சாதிக்கும் காலம் இது.

ராசிபலன்!

ணத்துக்கு அடிமையாகாதவர் நீங்கள். சப்தமாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களது தொடர்பு கிடைக்கும். தம்பதிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்பர். சகோதரர்களால் பயன் உண்டு. நிலம், வீடு வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.  உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். புதனும் சூரியனும் 11-ஆம் வீட்டில் நிற்பதால் சுப நிகழ்ச்சிகளில் மதிப்பு உயரும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். பெற்றோர் உங்களைப் புரிந்து கொள்வர். புதியவர்கள் நண்பர்களாவர். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும்.

சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால் வீண் சந்தேகம், ஏமாற்றம், மன இறுக்கம் வரக்கூடும். 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் முக்கிய முடிவைத் தவிர்க்கவும். அரசியல்வாதிகள், தலைமையின் அன்புக்குப் பாத்திரமாவர். கன்னிப் பெண்கள், பெற்றோருடன் கலந்து முக்கிய முடிவு எடுப்பர். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மூத்த அதிகாரி உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். கலைத்துறையினருக்கு பாராட்டு குவியும்.  

மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நேரம் இது.

ராசிபலன்!

ல்லோரிடமும் இதயத்திலிருந்து பேசுபவர் நீங்கள். சூரியனும் புதனும் வலுவாக இருப்பதால் சவாலான விஷயங்களை சாமர்த்தியமாக முடிப்பீர்கள்.  எதிர்பார்த்த பணம் வந்துசேரும். நாடாளுபவர் கள் நட்பாவர். புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் மதிப்பு கூடும். மகனை, நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். சேமிக்கத் துவங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவர். 24-ஆம் தேதி முதல் செவ்வாய் 10-ஆம் வீட்டில் நுழைவதால் சொத்துகள் வாங்குவது விற்பது லாபகரமாக இருக்கும். உடன்பிறந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். யோகாதிபதி சுக்கிரன் 9-ல் செல்வதால் புகழ் கூடும். பழுதான ஆடியோ, வீடியோ சாதனங்களை மாற்றுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

28-ஆம் தேதி காலை 9 முதல் 30-ஆம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தால் பகை உண்டாகும். அரசியல்வாதிகள், தலைமைக்கு ஆலோசனை வழங்குவர். கன்னிப் பெண்கள் உற்சாகத்துடன் இருப்பர். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். சக ஊழியர்கள் ஆதரிப்பர். கலைத்துறையினருக்கு, மூத்த கலைஞர்கள் உதவுவர்.

எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் தருணம் இது.

ராசிபலன்!

வாழ்க்கை வாழ்வதற்கே என அறிந்தவர் நீங்கள். புதன் சாதகமாக இருப்பதால் புதிய பாதையில் பயணிப்பீர்கள். வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சுக்கிரன் 8-ல் மறைந்திருப்பதால் திடீர் பண வரவு உண்டு. திருமணம், கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு வாங்க கடனுதவி கிடைக்கும். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். இதுவரை 8-ல் அமர்ந்து அலைச்சல் மற்றும் செலவுகளைத் தந்த செவ்வாய் 24-ஆம் தேதி முதல் 9-ஆம் வீட்டில் நுழைவதால் சகோதர வகையிலான மனக்கசப்பு நீங்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.  9-ஆம் வீட்டில் சூரியனும் நிற்பதால் தந்தைக்கு கை, கால் வலி வந்து போகும். குருவும் 9-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் ஓரளவு நன்மை உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

30-ஆம் தேதி மாலை 6 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். கூடுதல் லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழில் செழிக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் அறிவுரை தருவர். சக ஊழியர்களுடனான மோதல் விலகும். கலைத்துறையினர், வதந்தியிலிருந்து விடுபடுவர்.

தன்னம்பிக்கையால் வெல்லும் வேளை இது.

ராசிபலன்!

தர்ம சிந்தனையுடன் செயல்படுபவர் நீங்கள். இதுவரை 6-ல் நின்று அவஸ்தை, வாகன விபத்து ஆகியவற்றைத் தந்த சுக்கிரன், இப்போது 7-ல் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். குடும்பத்தில் அமைதி திரும்பும். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். நல்ல சேதி வந்து சேரும். நண்பர்கள் ஆதரிப்பர். வாகனத்தைச் சரி செய்வீர்கள். 8-ல் குரு, சூரியன் மற்றும் புதனும் மறைந்திருப்பதால் திடீர் பண வரவு உண்டு. பயணம் ஆதாயம் தரும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். 24-ஆம் தேதி முதல் 8-ல் செவ்வாய் செல்வதால் ஏமாற்றம், பணப்பற்றாக்குறை, முன்கோபம் ஆகியன வந்து செல்லும். வக்கீல் ஆலோசனையின்றி வழக்கில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். பழைய கடனைத் தீர்க்க யோசிப்பீர்கள். பாதச் சனி தொடர்வதால் பேச்சைக் குறையுங்கள். சாதுக்கள் உதவுவர்.

ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நாவடக்கத்துடன் செயல்படுங்கள். அரசியல்வாதிகள் சகாக்களை பகைக்க வேண்டாம். கன்னிப் பெண்கள் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைக் கடந்து லாபம் உண்டு. வேலையாட்களை விட்டுப் பிடியுங்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சியைக் கடந்து முன்னேறுவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். கலைத்துறையினருக்கு வாய்ப்பு தேடி வரும்.

கடின உழைப்பால் சாதிக்கும் தருணம் இது.

ராசிபலன்!

மைதியை விரும்புபவர் நீங்கள். குரு பகவானின் அனுக்கிரகம் தொடர்வதால் தொட்ட காரியங்கள் துலங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைப்பட்ட திருமண முயற்சி பலிதமாகும். உறவினர்கள் வீடு தேடி வருவர். ராசிநாதன் புதன் நீசபங்க ராஜயோகம் அடைந்திருப்பதால் அரசால் அனுகூலம் உண்டு. பணப்புழக்கம் கணிசமாக உயரும். வி.ஐ.பி-களால் ஆதாயம் உண்டு. செவ்வாய், 24-ஆம் தேதி முதல் 7-ல் அமர்வதால் முன்கோபம், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உடன்பிறந்தோர் உதவுவர். பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். எதிர்பாராத உதவி கிடைக்கும். யோகாதிபதி சுக்கிரன் 6-ஆம் வீட்டில் நுழைந்திருப்பதால் செலவு, ஏமாற்றம், தொண்டை வலி, காய்ச்சல் வந்து நீங்கும். மனைவியுடன் வாக்குவாதம் வரக்கூடும். சாலையில் செல்லும் போது, கவனம் தேவை.

ஜன்மச் சனி தொடர்வதால் பிறருக்கு உதவும்போது கவனம் தேவை. அரசியல்வாதிகள், வெற்றிக் கனியைச் சுவைப்பீர்கள். கன்னிப் பெண்களை பெற்றோர் ஆதரிப்பர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பாக்கியை நயமாகப் பேசி வசூலியுங்கள். பங்குதாரர்களுடன் மோதல் வந்து விலகும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சக ஊழியர்களை அனுசரிக்கவும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தள்ளிப் போகும்.

வேலைச்சுமை அதிகரிக்கும் தருணம் இது.

ராசிபலன்!

சனையானவர் நீங்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பூர்வ புண்ணிய வீடான 5-ல் நுழைந்து இருப்பதால் மன அமைதி நிலவும். வீடு கட்ட கடனுதவி கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். சூரியன் 6-ஆம் வீட்டில் வலுவாக இருப்பதால் எதிர்ப்பு அடங்கும். அரசு காரியம் உடனே முடியும். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. 24-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் நிற்பதால் மனைவிக்கு ரத்த நோய் மற்றும் சொத்துப் பிரச்னை ஆகியன தீரும். வழக்கு சாதகமாகும். உறவுகளுடனான மனவருத்தம் நீங்கும். புதன் 6-ல் மறைந்திருப்பதால் தந்தைக்கு நெஞ்சு வலி, பணப்பற்றாக்குறை, நண்பர்களுடன் பகை ஆகியன வந்து செல்லும்.

ராகு வலுவாக இருப்பதால் வேற்று இனத்தவர் உதவுவர். ஏழரைச் சனி நடப்பதால் கவலை, விரக்தி வந்து செல்லும். எவரையும் விமர்சிக்காதீர்கள். குருவின் போக்கு சரியில்லாததால் ஓய்வின்றி உழைப்பீர்கள். அரசியல்வாதிகள், பெரிய பதவியில் அமர்வர். பெண்கள், தடைப்பட்ட உயர்கல்வியைத் தொடர்வர். வியாபாரத்தில் அலைச்சல் உண்டு. வேலையாட்கள் ஓரளவு ஒத்துழைப்பர். பங்குதாரர்களை அனுசரியுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆலோசனைப் படி செயல்படுங்கள். சக ஊழியர்கள் மதிப்பர். கலைத்துறையினருக்கு போட்டி இருக்கும்.

கோபம் தவிர்த்து, மகிழ்ச்சி பொங்கும் காலம் இது.

ராசிபலன்!

நியாயத்துக்குக் கட்டுப்படுபவர் நீங்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய், பூர்வபுண்யாதிபதியான குருவுடன் 24-ஆம் தேதி முதல் சேர்வதால் நினைத்தது நிறைவேறும். எதிர்பாராத பண வரவு உண்டு. அறிஞர்கள், கல்வியாளர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபம் தரும். பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேர்வீர்கள். சுக்கிரன் 4-ல் அமர்ந்திருப்பதால் நல்ல வரன் அமையும். தாய்வழி உறவு மதிக்கும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

5-ல் சூரியன் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவு வந்து போகும். ராகுவும் கேதுவும் சரியில்லாததால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். அசதி, சோம்பல் வந்து நீங்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ஹிந்தி பேசுபவர்களால் நன்மை உண்டு. பழைய கடன் பிரச்னை தீரும். அரசியல்வாதிகளை, கட்சி மேலிடம் மதிக்கும். கன்னிப் பெண்கள், பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். புதிய ஒப்பந்தம் லாபம் தரும். ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர் உங்களின் கருத்துக்களை கேட்பார். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதிய பொறுப்பு தேடி வரும். கலைத்துறையினருக்கு மதிப்பு கூடும்.

சமயோஜித புத்தியால் சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன்!

ரந்த மனம் கொண்டவர் நீங்கள். சுக்கிரன் 3-ஆம் வீட்டில் நிற்பதால் தைரியம் பிறக்கும். தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். வருங்காலம் குறித்து திட்டமிடுவீர்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வராது என்றிருந்த பணம் வரும். தம்பதிக்குள் அந்நியோன்யம் ஏற்படும். 24-ஆம் தேதி முதல் யோகாதிபதி செவ்வாய் குருவுடன் சேர்வதால் மதிப்பு கூடும். தடைப்பட்ட சுப காரியங்கள் ஏற்பாடாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். புதன் 4-ல் நிற்பதால் தொழிலதிபர்கள் அறிமுகமாவர். பூர்வீகச் சொத்தை மாற்றுவீர்கள். சூரியன் 4-ஆம் வீட்டில் நிற்பதால் அரசு காரியம் உடனே முடியும்.

தந்தையின் உடல் நலம் சீராகும். வெளிநாட்டிலிருந்து நல்ல சேதி வரும். சனி பகவான் 10-ல் தொடர்வதால் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். கடன் பிரச்னை முடிவுக்கு வரும். 4-ல் நீடிக்கும் குருவால் அலைச்சல், தாயாருக்கு மருத்துவச் செலவு, சிறு விபத்து வந்து போகும். ராகுவும் கேதுவும் சரியில்லாததால் ஏமாற்றம், சந்தேகம், மனைவிக்கு வயிற்று வலி, கர்ப்பப்பை வலி வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். கடையை ரசனைக்கேற்ப மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறன் கூடும். மேலதிகாரி பாராட்டுவார். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வாய்ப்பு கிட்டும்.

வெற்றிக் கனியை பறிக்கும் வேளை இது.

ராசிபலன்!

புரட்சியை விரும்புபவர் நீங்கள். சூரியனும் புதனும் சாதகமாக இருப்பதால் பெரிய பதவியில் இருப்பவர்கள் நட்பாவர். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பு தருவீர்கள். வீடு கட்ட கடனுதவி கிடைக்கும்.  வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். நட்பு வட்டம் விரியும். புதிய வேலை கிடைக்கும். கௌரவம் உயரும். 24-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் அமர்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். உடன்பிறந்தோர் உங்களைப் புரிந்து கொள்வர். தாயாருடன் இருந்த மோதல் போக்கு விலகும்.

யோகாதிபதி சுக்கிரன் 2-ல் அமர்வதால் முகச் சுருக்கம் நீங்கி தேஜஸ் கூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். கேது வலுவாக இருப்பதால் உங்களை ஏமாற்றியவர்களைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகள், கட்சித் தலைமைக்குப் பாத்திரமாவர். கன்னிப் பெண்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வேலையாட்கள் ஒத்துழைப்பர். உத்தியோகத்தில் பழைய பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். எதிராகச் செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களால் ஆதாயம் பெறுவர்.

முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் தருணம் இது.

ராசிபலன்!

டமை தவறாதவர்கள். ராசிக்குள் சுக்கிரன் நுழைந்திருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கும். திடீர் யோகம் உண்டாகும். எதிர்பாராத பண வரவு உண்டு. வீடு, மனை அமையும். பழுதான வாகனம் சரியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. ஆபரணம் வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் நயமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவர். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். ஆனால் சூரியன் தொடர்வதால் சில நேரங்களில் கடுமையான பேச்சு, கண் மற்றும் ஒற்றைத் தலைவலி ஆகியன வந்து நீங்கும்.

அஷ்டமத்துச்சனி தொடர்வதால் பிறர் விவகாரத்தில் தலையிட்டு, வீண் பழிக்கு ஆளாவீர்கள். குரு வலுவாக இருப்பதால் எதிலும் தெளிவு பிறக்கும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடனை பாதியளவு அடைப்பீர்கள். அரசியல்வாதிகள், பேச்சைத் தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். 5-ல் கேது தொடர்வதால் பயம், கவலை, செலவு வந்து போகும். வியாபாரம் சூடு பிடிக்கும். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முதலீடு செய்வீர்கள். புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவர். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமை கிடைக்கும். மேலதிகாரிகளிடம் உஷாராக இருங்கள். கலைத்துறையினரது வசதி, வாய்ப்புகள் உயரும்.

தன்னடக்கத்தால் தடைகளைக் கடக்கும் தருணம் இது.

ராசிபலன்!

ளிமையானவர் நீங்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு நிம்மதி உண்டு. குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுங்கள். பாக்கியை போராடி வசூலிப்பீர்கள். ராசிக்குள் குருவும் சூரியனும் நிற்பதால் முன்கோபம், வாக்குவாதம், சிறு நெருப்புக் காயம் வரக்கூடும். வீண்செலவைத் தவிர்க்கவும். நண்பர்கள், உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து போகும். 24-ஆம் தேதி முதல் செவ்வாய் ராசிக்குள் நுழைவதால் கோபத்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தாயாருக்கு நெஞ்சு வலி வரக்கூடும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காணுங்கள். வழக்கில் வக்கீலின் ஆலோசனையின்றி முடிவு எடுக்காதீர்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். 7-ல் சனி தொடர்வதால் மனைவியுடன் பனிப்போர் வந்து நீங்கும். 22 மற்றும் 23-ந் தேதி இரவு 9:30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எவருக்கும் ஜாமீன் போடாதீர்கள். அரசியல்வாதிகள், மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் எதிர்ப்பைக் கடந்து லாபம் சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள், வேலையாட்களால் நிம்மதி இழப்பீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் மற்றும் வேலைச்சுமை இருக்கும். பொறுப்புகள் தேடி வரும். கலைஞர்கள், வாய்ப்பைப் பயன்படுத்துவது நல்லது.

அமைதி காக்க வேண்டிய வேளை இது.

ராசிபலன்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism