ஸ்பெஷல் 1
ரெகுலர்
Published:Updated:

ராசிபலன்

மார்ச் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை

'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

மேஷம்

ராசிபலன்

தன்மானச் சிங்கங்களே...

உங்கள் தனாதிபதி சுக்கிரன் லாப வீட்டில் நிற்பதால், ஓரளவு பணவரவு உண்டு. கணவர் சுறுசுறுப்பாக இருப்பார். சமையலறையை நவீனமாக்குவீர்கள். முக்கிய கிரகங்கள் 12-ல் மறைந்திருப்பதால், உடல் உபாதை வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். உறவினர்கள் குறை கூறினால் அதை பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. உத்யோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றி பெறும் வேளையிது.

ரிஷபம்

ராசிபலன்

வெள்ளை மனசுக்காரர்களே...

லாப வீட்டில் மூன்று கிரகங்கள் சாதகமாக இருப்பதால், சவாலான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். சகோதரிக்கு வேலை கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் படபடப்பு, ஏமாற்றம் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோ கத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும்.

தொட்டது துலங்கும் தருணமிது.  

மிதுனம்

ராசிபலன்

நெருக்கடி நேரத்திலும் நேர்மையாக இருப்பவர்களே...

முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால்... புகழ், கௌரவம் பல மடங்கு உயரும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். கணவர் நல்லபடியாக நடந்து கொள்வார். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். சர்ப்பக் கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால்... வீண் கவலை, சோர்வு வந்து செல்லும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

முன்னேற்றப் பாதை நோக்கி பயணிக்கும் நேரமிது.  

 கடகம்

ராசிபலன்

கலையுணர்வு கொண்டவர்களே...

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வராது என்று நினைத்திருந்த பணம் வரும். வெள்ளியிலான பொருட்கள் வாங்குவீர்கள். கணவருக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டு. மார்ச் 30-ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், உணர்ச்சிவசப்பட வேண்டாம். சூரியனால் தந்தையுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார்.

சிக்கனம் தேவைப்படும் வேளையிது.

சிம்மம்

ராசிபலன்

முன் வைத்த காலை பின் வைக்காதவர்களே....

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் சலிப்பு நீங்கி, உற்சாகமாக உழைப்பீர்கள். பிள்ளைகளால்

அந்தஸ்து உயரும். 8-ல் சூரியனும், செவ்வாயும் மறைந்திருப்பதால்... உடல் உபாதை, காரிய தாமதம் வந்து செல்லும். 2-ம் தேதி முதல் 4-ம் தேதி மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டி வரும்.

விட்டுக் கொடுக்க வேண்டிய தருணமிது.

கன்னி

ராசிபலன்

மனிதநேயம் அதிகம் கொண்டவர்களே...

குரு பகவான் வலுவாக இருப்பதால், எதிர் பார்த்த பணம் வரும். வீடு கட்டும் பணி முழுமை அடையும். சூரியனும், செவ்வாயும் 7-ல் நிற்பதால், கணவரின் உடல் நிலை பாதிக்கப்படலாம். ஜென்மச் சனி தொடர்வதால் இழப்பு, ஏமாற்றம் வந்து செல்லும். 4-ம் தேதி மாலை 5 மணி முதல் 6-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர்கள்.

உத்யோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.

முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டிய தருணமிது.  

துலாம்

பாரபட்சம் பார்க்காமல் பழகுபவர்களே...

ராசிபலன்

ராசிநாதன் சுக்கிரன் 5-ல் நிற்பதால்... வீடு, வாகன வசதி பெருகும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு

நல்ல பதில் வரும். புது வாகனம் வாங்குவீர்கள். 7-ம் தேதி முதல் 9-ம் தேதி நண்பகல் வரை சந்திராஷ்டமம் இருப்பதால், முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. 6-ல் குருவும், 12-ல் சனியும் மறைந்திருப்பதால் உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

 விருச்சிகம்

ராசிபலன்

சமாதானத்தை விரும்புபவர்களே...

புதன் சாதகமாக இருப்பதால், தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்களின் உதவியால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். சூரியனும், செவ்வாயும் 5-ல் நிற்பதால், மருத்துவச் செலவுகள் வந்து போகும். 9-ம் தேதி நண்பகல் முதல் 11-ம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.

அலுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டிய தருணமிது.          

 தனுசு:

ராசிபலன்

எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே...

நான்காம் வீட்டில் கிரகங்கள் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளை

களின் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பீர்கள். ராகுவும், கேதுவும் சரியில்லாததால்... உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்தினாலும், மீண்டு வெளியே வருவீர்கள். 11-ம் தேதி மாலை 6 மணி முதல் 12-ம் தேதி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால், எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் வேளையிது.  

மகரம்

ராசிபலன்

பிறர் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாதவர்களே...  

3-ல் முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால், திடீர் யோகம் உண்டு.  உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். கணவரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள்.  புது சொத்து வாங்குவீர்கள். விலகிச் சென்ற தோழிகள் விரும்பி வருவார்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சில சூட்சமங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறும் நேரமிது.  

கும்பம்

ராசிபலன்

கொடுத்து உதவும் குணம் கொண்டவர்களே...

குருவும், புதனும் 2-ல் நிற்பதால் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். சுக்கிரனால், சோர்ந்திருந்த கணவர் சுறுசுறுப்பாவார். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். சூரியனும், செவ்வாயும் 2-ல் இருப்பதால், உடல் உபாதை, டென்ஷன், வரக்கூடும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள்.

உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். மூத்த அதிகாரி மனம் விட்டுப் பேசுவார்.

காத்திருந்து காய் நகர்த்தும் தருணமிது.    

மீனம்

ராசிபலன்

கற்பனாவாதிகளே...

சுக்கிரன், ராசிக்கு பின் வீட்டில் அரணாக நிற்பதால் பிரச்னைகளைத் தாங்கும் சக்தி அதிகரிக்கும். ராசிக்குள் நான்கு கிரகங்கள் அமர்ந்திருப்பதால், உடல் உபாதை வந்து நீங்கும். கணவர் கோபப்படலாம். நாத்தனார், மச்சினர் சொந்த விஷயத்தில் அத்துமீறி நுழைய வேண்டாம். நெருங்கிய சொந்தங்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம்.

தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நேரமிது.