Published:Updated:

நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்!

நல்ல நேரம்... கயிலைமணி வி.ஆர்.கே.சிதம்பரம்

##~##

வக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் நீங்கலாக மற்ற ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஹோரை எனும் நேரம் பார்க்கப்படுகிறது. கிரகங்கள் நாள்தோறும் இரண்டரை நாழிகை அதாவது ஒரு மணி நேரம் ஒவ்வொரு ராசியிலும் தங்கி வலம் வரும். இதை அடிப்படையாகக் கொண்டு ஹோரை நேரம் கணிக்கப்படுகிறது.

காலையில் சூரியன் உதயமாகும்போது அன்றைய தினத்தின் கிழமையே முதல் ஹோரையாகத் துவங்கும். உதாரணத்துக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை எனில், அன்று காலை மணி 6 முதல் 7 வரை (சூரிய உதயம் காலை 6 மணி என்கிறபடிக்கு) சூரிய ஹோரை ஆகும். சூரிய ஹோரை முடிந்து... சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என முடிந்து மீண்டும் சூரியனில் இருந்து துவங்கும். திங்கட்கிழமை எனில் காலை 6 முதல் 7 மணி வரை சந்திர ஹோரை எனத் துவங்கும்.

இந்த ஹோரைகள் சுப, அசுப என இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சந்திரன், புதன், சுக்கிரன், குரு ஆகியன சுபஹோரை; சூரியன், செவ்வாய், சனி ஆகியன அசுப ஹோரை. இவற்றுக்கென தனித்தனியாக பலாபலன்கள் சொல்லப்பட்டுள்ளன.

அதேபோன்று எந்தெந்த ஹோரைகளில் என்னென்ன செய்யலாம்; செய்யக்கூடாது என்பதுகுறித்த அறிவுறுத்தல்களும் உண்டு. அதன்படி செயல்பட்டால் நற்காரியங்களில் ஜெயமும்; நல்ல பலன்களும் கிடைக்கும்.

நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்!

சூரியன்: உத்தியோகத்தில் சேர்தல். பத்திரங்கள் மற்றும் உயில் எழுதுதல், சிபாரிசு செய்தல் போன்றவற்றை சூரிய ஹோரையில் செய்வது சிறப்பு. ஆனால் இந்த ஹோரையில் பயணம் தொடங்குதல், புதுவீடு குடிபுகுதல் கூடாது.

சந்திரன்: வியாபாரம் துவங்குதல், யாத்திரை செல்லுதல், வெளிநாடு புறப்படுதல் ஆகியவற்றை இந்த ஹோரையில் மேற்கொள்ளலாம். தேய்பிறை நாட்களில் இந்த ஹோரையில் சுப காரியங்களை விலக்கவும்.

செவ்வாய்: மருத்துவமனைப் பணிகள், அறுவை சிகிச்சை, மருந்து அருந்துதல் ஆகியவற்றுக்கு உகந்த ஹோரை இது. ஆனால் செவ்வாய் ஹோரையில் சுபகாரியங்களைத் தவிர்க்கவும், பேச்சைக் குறைக்கவும் வேண்டும்.

நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்!

புதன்: வழக்கு தொடர்பாக வழக்கறிஞரை அணுகுதல், கதை- கட்டுரைகள் எழுதுதல், ஜாதகம் பார்த்தல், புதுக்கணக்கு தொடங்குதல், நிலம் வாங்குதல் ஆகியவற்றுக்கு உகந்தது.

குரு: இந்த ஹோரையில் எடுத்த காரியங்கள் அனைத்தும் நன்மை பயக்கும். இந்த ஹோரை வேளையில் முகூர்த்தம் அமைவது உத்தமம். ஆடை- ஆபரணங்கள் வாங்குதல், திருமாங்கல்யத்துக்கு பொன் வாங்க, நகைக் கடை துவக்க, பெரிய தொழில்கள் செய்ய உகந்த ஹோரை இது.

சுக்கிரன்: திருமணம் சம்பந்தமான செயல்கள் தொடங்குதல், சாந்தி முகூர்த்தம், ஆடை- ஆபரணம் அணிதல், அழகு பொருட்கள், ஆடை வியாபாரம் தொடங்குதல், சுப நிகழ்ச்சிகள், விருந்து அளித்தல், புதிய வாகனங்கள் வாங்குதல் ஆகியவற்றுக்கு உகந்தது.

சனி: நிலம், வீடு- மனை வாங்க விற்க முயற்சிக்கலாம். இரும்பு சாமான்கள் வாங்குதலும் நலம் சேர்க்கும். ஆனால், இந்த ஹோரையில் பிரயாணம், மருத்துவமனை செல்லுதலைத் தவிர்க்க வேண்டும்.

சுப ஹோரையில் அஷ்டமி, நவமி, மரண யோகம், பிரபாலாரிஷ்ட யோகம் ஆகியற்றைப் பார்க்க வேண்டாம்.

பெண்களின் ருது கால பலன்கள்

பெண்கள் ருது ஆகும் காலம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த வேளையை வைத்து ஜாதகம் கணிப்பதும் உண்டு. ஆனால், பலர் இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. பெண்கள் ருது ஆகும் கிழமையை அனுசரித்து, உரிய பலாபலன்கள் ஜோதிட நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஞாயிறு: புத்ர தோஷம், உடல் நலம் குறை ஏற்படும்.

தொடர்ந்து 9 வாரங்கள்- ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடுவது நலம்.

நல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்!

திங்கள்: இந்த நாளில் ருதுவாகும் பெண், குணவதியாகவும் தன் கணவனைக் கண்கண்ட தெய்வமாகப் போற்றும் மாதரசியாகவும் திகழ்வாள்.

செவ்வாய்: வாழ்வில் சிரமங்களையும், சவால்களையும் சமாளிக்க வேண்டியது வரும். முருகப்பெருமானுக்கு நெய் விளக்கு ஏற்றிவைத்து வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும்.

புதன்: சௌக்கியமான வாழ்க்கை அமையும்.

வியாழன்: இந்த நாளில் ருதுவாகும் பெண் குணவதியாக இருப்பாள்.

வெள்ளி: புத்ர லாபம் உண்டாகும்.

சனி: ஏழ்மை சூழவும், முன்கோபத்துடனும் வாழும் நிலை ஏற்படலாம். தொடர்ந்து 8 வாரங்கள்... சனிக்கிழமைகளில், ஸ்ரீசனைச்சரருக்கு எள் தீபம் ஏற்றிவைத்து வழிபட சங்கடங்கள் அகலும்.

செல்வம் தரும் கிரக அமைப்புகள்...

ரண்டாம் அதிபதியும் பதினொன்றாம் அதிபதியும் பரிவர்த் தனை பெற்றால் பணம் கொட்டும்; செல்வங்கள் வந்து சேரும். அதேபோன்று அஷ்டவர்க்கத்தில் 12-ஆம் பாவத்தைவிட, 11-ஆம் பாவத்தில் பரல்கள் அதிகமானால் செல்வம் பெருகும்.

லட்சுமிகடாட்சம் பெருக...

வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு குங்குமம் மஞ்சள் கிழங்கு மருதாணி விழுது கொடுத்து உபசரிக்க பாக்கியம், சந்தோஷம், பொருள்வசதி பெருகும்.

திகாலை எழுந்ததும் வலது உள்ளங்கையைப் பார்ப்பதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

வைரம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவருக்கே கிடைக்கும். நம் வீட்டைச் சேர்ந்த இந்தப் பொருட்களை விற்காமல் தவிர்ப்பது சிறப்பு.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கில் தீபமேற்றிவைத்து திருமகளை வழிபட, அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.

- ஆர்.சுப்ரமணியன்

அடுத்த கட்டுரைக்கு