ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ராசிபலன்!

ராசிபலன்!

ராசிபலன்!

ஏப்ரல் 19 முதல் மே 2 வரை

ராசிபலன்!

 தன்மானம் மிக்கவர் நீங்கள். கேது வலுவாக இருப்பதால் எதிர்பார்த்த பண வரவு, உதவி கிட்டும். பிரபலங்கள் நெருக்கமாவர். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உங்களை ஏமாற்றியவர்களை இனங்கண்டு ஒதுக்குவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். உங்கள் சுகாதிபதி சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மையப் பகுதியில் எதிலும் வெற்றி உண்டு. தனாதிபதி சுக்கிரன் 12-ல் உச்சம் பெற்றிருப்பதால் புது வாகனம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு.

புதன் 12-ல் மறைந்திருப்பதால் கடனில் ஒருபகுதியை அடைப்பீர்கள். ராசிக்குள் சூரியன் நிற்பதால் கண், பல் வலி, முன்கோபம் வந்து விலகும். பிள்ளைகளின் கல்வி குறித்து டென்ஷன் ஏற்படும். குருவும் செவ்வாயும் 12-ல் மறைந்திருப்பதால் வீண் பழி, தூக்கமின்மை வந்து போகும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காணுங்கள். வழக்கில் அவசரம் வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். அரசியல்வாதிகள் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருக்கவும். 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டமம்; எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டியைச் சமாளிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திறமை வெளிப்படும். சக ஊழியர்களால் பிரச்னை வந்து நீங்கும். கலைத்துறையினரது பாக்கி வந்து சேரும்.

புகழ் கூடும் தருணம் இது.

ராசிபலன்!

வெள்ளை மனசுக்காரர் நீங்கள். ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதால் எதிலும் வெற்றி கிட்டும். பிரபலங்கள் நட்பாவர்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகன வசதி பெருகும். மறைமுக எதிர்ப்பு வந்து நீங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்பர். லாப வீட்டில் குருவும் புதனும் சாதகமாக இருப்பதால் திடீர் யோகம் உண்டு. பாதியில் நின்ற வீடு கட்டும் பணி தொடரும். மதிப்பு உயரும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். செவ்வாய் வலுவாக இருப்பதால் தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.  

##~##
வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சகோதரர்கள் உதவுவர். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வெளிநாட்டில் உள்ளோர் உதவுவர். சனி 5-ல் தொடர்வதால் குழப்பம் வந்து விலகும். 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் நிற்பதால் டென்ஷன், சந்தேகம், சிறு விபத்து வந்து போகும். 12-ல் சூரியன் மறைந்திருப்பதால் கனவுத் தொல்லை, பெற்றோருக்கு மருத்துவச் செலவு வரக்கூடும். அரசியல்வாதிகள், சகாக்களை குறை கூறாதீர்கள். கன்னிப் பெண்களது நெடுநாள் கனவு நனவாகும். 22-ஆம் தேதி காலை 10 முதல் 24-ஆம் தேதி மாலை 4.30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் முன்கோபத்தை தவிர்க்கவும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்வீர்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவர். கலைத்துறையினர், பாக்கியை வசூலிப்பர்.

நினைத்ததை முடிக்கும் நேரம் இது.

ராசிபலன்!

ர்ப்பாட்டமின்றி சாதிப்பவர் நீங்கள். சூரியன் லாப வீட்டில் நிற்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவர். நாடாளுபவர்கள் உதவுவர். அரசு காரியங்கள் விரைந்து முடியும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். இளைய சகோதர வகையிலான பிணக்கு நீங்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 10-ல் மூன்று கிரகங்கள் சாதகமாக இருப்பதால் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். திடீர் பண வரவு உண்டு.

புதியவர்கள் அறிமுகமாவர். வீட்டை விற்று புது இடம் வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ராகு-கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால் வீண் சந்தேகம், கவலை, தலைச்சுற்றல் வந்து நீங்கும். சனியால் தாயாருடன் கருத்து மோதல் வரக்கூடும். குரு 10-ல் தொடர்வதால் எவருக்கும் உறுதிமொழி தரவேண்டாம். அரசியல்வாதிகள், மேலிடத்துக்கு நெருக்கமாவர். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வீர்கள். 24-ஆம் தேதி மாலை 4.30 முதல்  26-ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் நடைபெறுவதால் எதிலும் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நல்ல வேலையாட்கள் அமைவர். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். கலைத்துறையினரது திறமைக்கு வாய்ப்பு வந்துசேரும். உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிட்டும்.

திருப்பம் நிறைந்த காலம் இது.

ராசிபலன்!

டமை தவறாதவர் நீங்கள். உங்களின் தனாதிபதி சூரியன் 10-ல் பலமாக நுழைந்திருப்பதால் திட்டங்கள் அனைத்தும் எளிதில் ஈடேறும். தம்பதிக்குள் நிலவிய பனிப்போர் மறையும். விட்டுக் கொடுத்துப் போவீர்கள். புது வேலை கிடைக்கும். எதிர்பார்த்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். தந்தையின் உடல் நலம் சீராகும். சுக்கிரன் 9-ஆம் வீட்டில் நிற்பதால் பண வரவு அதிகரிக்கும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீடு வாங்க, கடனுதவி கிடைக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள்.

பயணம் மகிழ்ச்சி தரும். நகை வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் நண்பர்கள், உறவினர் உதவுவர். செவ்வாய் 9-ஆம் வீட்டில் நிற்பதால் சகோதரி உங்கள் வேலை களை பகிர்ந்து கொள்வார். சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ராகு வலுவாக அமர்ந்திருப்பதால் வேற்று இனத்தவர் அறிமுகமாவர். அரசியல்வாதிகள், தலைமையிடம் நற்பெயர் எடுப்பார்கள். கன்னிப் பெண்களின் குழப்பம் விலகும். 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் பாக்கியை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவர். கலைத்துறையினருக்கு வாய்ப்பு தேடி வரும்.

சாதித்துக் காட்டும் தருணம் இது.

ராசிபலன்!

வெளிப்படையாகப் பேசுபவர் நீங்கள். புதனும் சுக்கிரனும் 8-ல் மறைந்து நிற்பதால் புகழ் கூடும். திடீர் பண வரவு உண்டு. மகளுக்கு நல்ல வரன் தேடி வரும். தடைபட்ட வீடு கட்டும் பணியைத் துவங்க பணம் கிடைக்கும். குருவால் வீண் செலவு, டென்ஷன், குழப்பம் வந்துபோகும். 8-ல் செவ்வாய் மறைந்திருப்பதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். தாயாருக்கு மருத்துவச் செலவு உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம்.

சனி பகவானின் பார்வையை விட்டு விலகி உங்கள் ராசிநாதன் சூரியன் உச்சமாகி நிற்பதால் உடல்நிலை சீராகும். நிர்வாகத்திறன் கூடும். தடைப்பட்ட அரசு காரியம் விரைந்து முடியும். வழக்கு சாதகமாகும். தந்தையுடன் மனவருத்தம் வந்து நீங்கும். லாப வீட்டில் கேது வலுவாக இருப்பதால் வெளிநாட்டிலிருந்து நல்ல சேதி வரும். வேற்று மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங் களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்து கொள்வார். பெண்களது கல்யாணப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் தரும். 29-ஆம் தேதி மதியம் 1 மணி முதல் மே 1-ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நாவடக்கம் அவசியம்! வியாபாரத்தில் புதுயுக்தியால் லாபம் கூடும். வேலையாட்களிடம்  கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி உங்களைப் புரிந்து கொள்வார். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்பு தேடி வரும்.

சாதுர்யத்தால் வெற்றி பெறும் வேளை இது.

ராசிபலன்!

னிதாபிமானி நீங்கள். ராசி நாதன் புதன் நீசபங்க ராஜயோகம் அடைந்திருப்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் தெளிவு ஏற்படும். பணபலம் உயரும். தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் திறமை வெளிப்படும். ஏளனமாகப் பார்த்த உறவினர்களுக்கு பதிலடி தருவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீடு கட்ட கடனுதவி கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். குரு பகவான் வலுவாக இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். மூத்த சகோதரருக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.

சூரியன் 8-ல் மறைந்ததால் அலைச்சல், டென்ஷன் குறையும். தந்தைவழியிலான மோதல் விலகும். ஜன்மச் சனி தொடர்வதால் மறைமுக விமர்சனம், தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். 4-ல் ராகு தொடர்வதால் வேலைச்சுமை, தாயாருடன் கருத்து மோதல் வரக்கூடும். அரசியல்வாதிகளுக்கு சகாக்களுடனான மோதல் விலகும். கன்னிப் பெண்களுக்கு புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பர். பணியாளர்கள் பொறுப்புடன் நடப்பர். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. சக ஊழியர்கள் மதிப்பர். கலைத்துறையினரது எண்ணம் ஈடேறும்.  

விவேகத்துடன் முடிவு எடுக்கும் நேரம் இது.

ராசிபலன்!

சனையானவர் நீங்கள். ஜீவனா திபதி சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். ராகு வலுவாக இருப்பதால் அரசு அதிகாரிகள்,  வேற்று இனத்தவர் உதவுவர். தம்பதிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஓரளவு பண வரவு உண்டு எனினும், ஏழரைச்சனி நீடிப்பதால் கடன் வாங்க நேரிடும். உங்களால் உதவி பெற்றவர்கள், உங்களுக்கு உதவுவர். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் சாலையைக் கடக்கும்போது நிதானம் தேவை.

புதனின் போக்கு சரியில்லாததால் தந்தைக்கு மருத்துவச் செலவு ஏற்படும். சிலர், உதவி கேட்டு தொந்தரவு செய்வர். செவ்வாயும் 6-ல் மறைந்திருப்பதால் சொத்துப் பிரச்னையில் கவனம் தேவை. வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். சகோதர வகையில் சங்கடம் உண்டு. சூரியன் 7-ல் நிற்பதால் மனைவிக்கு சிறு அறுவை சிகிச்சை, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். அரசியல்வாதிகள் பற்றி  வதந்தி பரவும். கன்னிப் பெண்களது  கவலை நீங்கும். வியாபாரத்தில், புதிய முதலீடுகளில் நிதானம் தேவை. பங்குதாரர்களை அனுசரியுங்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சியைக் கடந்து அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரிப்பர். கலைத்துறையினர், கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துங்கள்.

அனுசரித்துப் போகும் தருணம் இது.

ராசிபலன்!

ன்னம்பிக்கைவாதி நீங்கள். சூரியன் வலுவாக அமர்ந்ததால் தைரியம் கூடும். திடீர் முன்னேற்றம், பதவி மற்றும் அரசால் ஆதாயம் உண்டு. பதவியில் உள்ளோர் அறிமுகமாவர். குடும்பத்தாருடன் ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வருமானம் உயரும். மகனுக்கு எதிர்பார்த்தபடி உயர்கல்வி அமையும். இளைய சகோதர வகையில் உதவி உண்டு. வெளிநாட்டுப் பயணம் தேடி வரும். வழக்கு சாதகமாகும். குரு பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை பைசல் செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும்.

பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஃப்ரிஜ், டிவி வாங்குவீர்கள். அந்தஸ்து உயரும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். ராகுவும் கேதுவும் சரியில்லாததால் மன அழுத்தம், விரக்தி வந்து போகும். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். வியாபாரத்தில் அதிரடிச் சலுகையால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். பிரச்னை தந்த பங்குதாரர் விலகுவார். புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உயரதிகாரி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினர், பிரபலமாவர்.

தடைகள் உடைபடும் தருணம் இது.

ராசிபலன்!

யராமல் போராடுபவர் நீங்கள். புதன் சாதகமாக இருப்பதால் மனத்தெளிவு பிறக்கும். சுறுசுறுப்பு கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். மனதுக்கு இதமான சேதிகள் வரும். சுக்கிரன் 4-ல் அமர்ந்ததால் வாகனப் பழுது நீங்கும். கடனைத் தீர்க்க சிந்திப்பீர்கள். செவ்வாயும் 4-ல் நிற்பதால் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.

சனி பகவான் வலுவாக இருப்பதால் பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். கௌரவம் கூடும். குருவால், எவ்வளவு பணம் வந்தாலும் கரையும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். 5-ல் சூரியன் நிற்பதால் முன்கோபம், ஒற்றைத் தலைவலி வந்து நீங்கும். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால் சோர்வு, கை, கால் வலி வந்து விலகும். அரசியல்வாதிகள் பேச்சைக் குறைத்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். கன்னிப் பெண்களுக்கு சாதிக்கும் குணம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களது திறமையை நிரூபிக்க தக்க வாய்ப்புகள் கிடைக்கும். தொல்லை தந்த மூத்த அதிகாரி இடம் மாறுவார். கலைத்துறையினருக்கு வேற்றுமொழி வாய்ப்பு வரும்.  

குழம்பித் தெளியும் தருணம் இது.

ராசிபலன்!

மென்மையானவர் நீங்கள்.  யோகாதிபதி சுக்கிரன் உச்சமாகி அமர்ந்ததால் திடீர் பண வரவு உண்டு. வாகன வசதி பெருகும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். வீடு கட்ட அல்லது வாங்க, கடனுதவி கிடைக்கும். அடிப்படை வசதிகள் பெருகும். பெற்றோரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். செவ்வாய் வலுவாக இருப்பதால் துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தோர் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

4-ல் சூரியன் நிற்பதால் வேலைச்சுமை, முதுகு வலி, தாயாருடன் கருத்து வேறுபாடு, உறவினர் பகை வரக்கூடும். 3-ல் குரு அமர்ந்திருப்பதால் வி.ஐ.பி-களால் அலைச்சல் இருக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். கேது வலுவாக இருப்பதால் வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். மகான்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் லாபம் வரும். அரசியல்வாதிகள், கட்சிப் பூசலில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டி குறையும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி அலைக் கழித்தாலும் சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைஞர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

எண்ணம் ஈடேறும் காலம் இது.

ராசிபலன்!

னுபவசாலி நீங்கள். சூரியன் 3-ல் வலுவாக அமர்ந்ததால் முயற்சிகள் பலிதமாகும். அரசால் அனுகூலம் உண்டு. நாடாளுவோர் அறிமுகமாவர்.  பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். தம்பதிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குருவும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பயணம் திருப்தி தரும். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவர்.

ராசிக்கு 2-ல் நிற்கும் செவ்வாயால் பேச்சால் பிரச்னை, சிறுசிறு நெருப்பு காயங்கள், வாகனப் பழுது, சகோதர வகையில் மனவருத்தம் ஆகியன வந்து நீங்கும். சொத்து விவகாரத்தில் அலட்சியம் வேண்டாம். ராகு வலுவாக இருப்பதால் வீட்டில் நல்லது நடக்கும். வெளிமாநிலத்தவரால் ஆதாயம் உண்டு. பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் எவரை நம்பியும் முடிவு எடுக்காதீர்கள். அரசியல்வாதிகள், மேலிடத்துக்கு நெருக்கமாவர். வியாபாரத்தில் லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வேலையாட்கள் உதவுவர்.பங்குதாரர்களை அனுசரியுங்கள். உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் இல்லையே என வருந்துவீர்கள். கலைத்துறையினரது படைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவர்.

சிக்கல்கள் தீரும் தருணம் இது.

ராசிபலன்!

ல்மனசையும் கரைப்பவர் நீங்கள். உங்களின் சேவகாதிபதி சுக்கிரன் ராசிக்குள் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் இங்கிதமாகப் பேசி பல காரியங்களை சாதிப்பீர்கள். ஓரளவு பண வரவு உண்டு. குடும்பத் தில் சந்தோஷம் குடிகொள்ளும். மகள் உங்களைப் புரிந்து கொள்வாள். மகனுக்கு வேலை கிடைக்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் கண்டும் காணாமல் இருந்த உறவு வலிய வந்து பேசும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

செவ்வாயும் குருவும் ராசிக்குள் நிற்பதால் எதிர்மறை எண்ணங்கள் வரும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். நகைகளை இரவல் தராதீர்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. ராசிக்கு 2-ல் சூரியன் அமர்ந்ததால் டென்ஷன், கண் வலி, மனஉளைச்சல் வந்து நீங்கும். வழக்கில் வக்கீலின் ஆலோசனையின்றி எதுவும் செய்யாதீர்கள். அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில் இருந்து விலகியே இருங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவு ஏற்படும்.

வியாபாரத்தில் சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். போட்டி அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிகாரிகள் வலிய வந்து உதவுவர். சக ஊழியர்களை உதாசீனப்படுத்தாதீர்கள். கலைத் துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்பு வரும்.

கோபத்தைத் தவிர்க்கும் தருணம் இது.

ராசிபலன்!