Published:Updated:

வாகன யோகத்தை வசமாக்கும் எளிய 5 பரிகாரங்கள்! - அதிகாலை சுபவேளை!வாகன யோகம்
வாகன யோகம் ( விகடன் )

வாகன யோகத்தை வசமாக்கும் எளிய 5 பரிகாரங்கள்!

இன்றைய பஞ்சாங்கம்

13. 5. 21 சித்திரை 30 வியாழக்கிழமை

திதி: துவிதியை

நட்சத்திரம்: ரோகிணி

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: பகல் 1.30 முதல் 3 வரை

எமகண்டம்: காலை 6 முதல் 7.30 வரை

நல்லநேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை

ராகவேந்திரர்
ராகவேந்திரர்

சந்திராஷ்டமம்: சுவாதி

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீராகவேந்திரர்

வாகன யோகத்தை வசமாக்கும் எளிய 5 பரிகாரங்கள்!

வாகனம் ஒருவருக்கு அமைவது என்பது அவரின் ஜாதக யோகத்தைப் பொறுத்ததே. சிலர் ராசிக்கு ஒரு வாகனம் வாங்கினால் ஒன்று பத்தாகி பத்து நூறாகிப் பெருகிவிடும். சிலருக்கோ பத்து வாகனங்கள் இருந்தாலும் காலப்போக்கில் அவை தேய்ந்து ஒன்றாகி விடும். வாகனம் சார்ந்த தொழிலில் இறங்குபவர்கள் தங்களுக்கு வாகன யோகம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். இல்லை என்றால் வாங்கும் வாகனம் பல பிரச்னைகள் உண்டாக்கும். விபத்துகள், தொடர்ந்து கோளாறுகள், நல்ல வாகன ஓட்டி கிடைக்காத நிலை என்று பலவும் ஏற்பட்டு பிரச்னைகள் அதிகமாகும். நம் யோகம் எப்படியிருந்தாலும் அதை நமக்கு சாதகமாக மாற்றும் எளிய வழிபாடுகள் நம் ஆன்மிகத்தில் உள்ளன. இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

இன்றைய சுருக்கமான ராசிபலன்கள்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

13.5.21

மேஷம் : செலவு : புதிய முயற்சிகள் சாதகமாகும். ஆனாலும் உறவினர்களால் சில சங்கடங்களும் வீண்செலவுகளும் ஏற்படலாம். கவனம் தேவை. - சிக்கனம் தேவை இக்கணம்!

ரிஷபம்

பதற்றம் : சொல்லிலும் செயலிலும் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணவரவு அதிகரிக்கும் என்றாலும் பதற்றம் காரணமாகச் செலவுகளும் அதிகரிக்கலாம். - பதறாத காரியம் சிதறாது!

மிதுனம்

உற்சாகம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளைத் துணிந்துமேற்கொள்வீர்கள். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தினர் ஒத்தாசையாக இருப்பார்கள். - ஆல் தி பெஸ்ட்

கடகம்

மகிழ்ச்சி : குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கும் வாய்ப்பு உண்டு. - என்ஜாய் தி டே

சிம்மம்

விவாதம் : அனைத்து வகையிலும் நன்மைகள் நடைபெற்றாலும் தேவையற்ற பிரச்னைகளால் குழப்பம் நிலவும். விவாதம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டிய நாள். - நோ ஆர்கியுமென்ட்ஸ்

கன்னி

கவனம் : எதிர்பார்த்த செய்திகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடுங்கள். இறைவழிபாட்டில் ஈடுபடுங்கள் தெளிவடையும். - எல்லாம் அவன் செயல்!

துலாம்:

நிதானம் : சந்திராஷ்டம நாள் என்பதால் மனதில் தேவையற்ற கவலைகள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

விருச்சிகம்

உதவி : செலவுகள் அதிகரித்தாலும் தேவையான பணவரவும் வாய்க்கும். செயல்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் சாதகமாக முடியும். நண்பர்கள் உதவுவார்கள். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

தனுசு:

தாமதம் : எதிர்பார்த்த செய்திகளும் பணவரவும் தாமதமாகும். சகோதர உறவுகள் வகையில் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தித்துச் செயல்படுவது நல்லது. - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

மகரம்

நன்மை : பிற்பகலுக்கு மேல் உடலிலும் மனதிலும் உற்சாகம் அதிகரிக்கும். முற்பகலில் தடைப்பட்ட பணிகள் பிற்பகலில் முடிந்துவிடும். உறவுகளிடையே பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. - நா காக்க!

கும்பம்

நம்பிக்கை : நம்பிக்கை அதிகரிக்கும் நல்ல நாள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். - நம்பிக்கை அதுதானே எல்லாம்!

மீனம்

பொறுமை : கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் இருக்க வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். செலவுகளும் அதிகரிக்கும். - டேக் கேர் ப்ளீஸ்!

அடுத்த கட்டுரைக்கு