ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

குருவே சரணம்!

குருவே சரணம்!

குருவே சரணம்!
##~##
'கு
ரு பார்க்க கோடி நன்மை’ என்பர். கருணைக் கடாட்சம் பொழியும் குருவின் திருவருள் பார்வைக்கு அவ்வளவு சாந்நித்தியம்! ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் நன்கு அமைந்திருந்தால் போதும், வாழ்வில் எல்லாமே ஜெயம்தான்!

அறிவு, மங்கள காரியங்கள், செல்வச் செழிப்பு, உத்தியோகத்தில் மேன்மை ஆகிய யாவற்றையும் வழங்கும் இந்தக் குரு பகவானின் திருவருட்கடாட்சத்தைக் குறைவின்றிப் பெற, அனுதினமும் குருபகவான் ஸ்லோகங்கள் - ஸ்தோத்திரங்களை மனமுருகச் சொல்லி, வழிபடுவது சிறப்பு!

குருவே சரணம்!

பொருள்:

குருவே சரணம்!

பகவான் கூறுகிறார்...

பிரஹஸ்பதியானவர், தேவர்களுக்கு ஆசார்யர்; தயை உள்ளவர்; சுபமான லட்சணங்கள் பெற்றவர்; மூன்று உலகங்களுக்கும் குருவானவர்; சோபையுள்ளவர்; சர்வமும் அறிந்தவர்; எல்லாவற்றிலும் கரை தேர்ந்தவர்; சகலத்துக்கும் ஈஸ்வரர்; எப்போதும் மிக்க இஷ்டமாக இருப்பவர்; எல்லாவற்றையும் வென்றவர்; எல்லோராலும் பூஜிக்கப்பட்டவர்; கோபமற்றவர்; சிறந்த முனிவர்; நீதியைச் செய்தவர்; குரு, தந்தை; உலகின் ஸ்வரூபமாக இருப்பவர்; உலகைச் செய்தவர்; தெய்வீகப் பிறப்பு வாய்ந்தவர். பூ:, புவ:, ஸுவ: ஆகிய மூவுலகங்களுக்கும் பிரபுவாக இருப்பவர்; உடன்பிறந்தவராகவும் திகழ்பவர்; மிக்க பலமுள்ளவர்

- புண்ணியம் மிகுந்த குரு பகவானின் இந்த நாம மகிமைகள், நந்தகோபரின் வீட்டில் வசித்த ஸ்ரீவிஷ்ணுவான கிருஷ்ணரால், ஒருமுகப்பட்ட மனதுடன் கூறப்பட்டதாகும்.

எவரொருவர், அனுதினமும் அதிகாலை எழுந்து, மிக்க முயற்சி எடுத்து, அடங்கிய மனதுடன் இதைப் படிக்கிறாரோ, அவருக்குக் குரு பகவானின் (பிரஹஸ்பதியின்) திருவருள் பரிபூரணமாகக் கிடைக்குமாம்.

இந்த குரு ஸ்தோத்திரத்தைக் கேட்பவர்கள் சிரஞ்ஜீவியாக வாழ்வார்கள். ஸ்ரீவிஷ்ணுவின் வாக்குப்படி, ஆயிரம் கோதானம் செய்த பலனும் கிடைக்கும். விஷ்ணுதர்மோத்திரம் எனும் ஞானநூலில் உள்ள- அற்புதப் பலன் தரும் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் படித்துப் பலன் பெறலாம்!

குருவே சரணம்!

தொகுப்பு: எம்.சக்திவேல்