Published:Updated:

ராகு - கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்

ராகு - கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்

ராகு - கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்

ராகு - கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்

Published:Updated:
ராகு - கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்
ராகு - கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்
ராகு - கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்

நிகழும் கர வருடம் வைகாசி மாதம் 2-ஆம் நாள் (16.5.11) திங்கட்கிழமை, சுக்ல பட்சம் சதுர்த்தசி திதி, சுவாதி நட்சத்திரம், வியதிபாத நாமயோகம், பத்தரை நாமகரணம், நேத்திரம் ஜீவனும் நிறைந்த அமிர்த யோகத்தில், செவ்வாய் ஹோரையும், பஞ்ச பட்சியில் காகம் அரசாட்சி செலுத்தும் நேரத்தில், காலை 9:56 மணிக்கு கேட்டை நட்சத்திரம் 4-ஆம் பாதம் ஸ்திர வீடான விருச்சிக ராசியில் ராகு பகவானும்; மிருகசீரிட நட்சத்திரம் 2-ஆம் பாதம் ஸ்திர வீடான ரிஷப ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறார்கள்.

ராகுவால் ஏற்படப் போகும் பலன்கள்:

ராகு பகவான், குருவின் வீடான தனுசைவிட்டு விலகி விருச்சிகத்தில் அமர்வதால், ஆட்சியாளர்களின் அடக்குமுறையையும் தாண்டி மக்கள் எழுச்சி இருக்கும். நாட்டில் பணப் புழக்கம் அதிகரிக்கும். தடுமாறிய வங்கிகளும் தலை நிமிரும். வாராக் கடன்கள் வசூலாகும். உலகெங்கும் விமானப் போக்குவரத்து சூடுபிடிக்கும். காடுகள் வளம் பெறும். ஆனால் வெள்ளப் பெருக்கு, நிலநடுக்கம், மலைச் சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிப்புகள் அதிகரிக்கும். பூமிக்கடியில் பிளாட்டினம், பெட்ரோல் மற்றும் தங்கம் ஆகிய கனிம-கரிம படுகைகள் கண்டறியப்படும். மருத்துவ உலகில் புரட்சி ஏற்படும். தீராத நோய்களுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படும். புற்று நோய் இருப்பதைக் கண்டறிய, குணப்படுத்த நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமாகும். இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகமாகும்.

##~##
ஷேர் மார்க்கெட் சூடுபிடிக்கும். தங்கம் விலை தாறுமாறாக உயரும். வாகனத் துறை அபிவிருத்தி அடையும். நவீன ரக வாகனங்கள் சந்தைக்கு வரும். சூரிய ஒளி, காற்று, நீரால் இயங்கும் வாகனங்கள் அறிமுகமாகும்.

நாட்டின் பாதுகாப்புக்காக அதிக நிதி ஒதுக்கப் படும். பூமிக்காரகனான செவ்வாய் வீட்டில் ராகு அமர்வதால், நிலத்தின் விலை உயரும். ஆனாலும் ரியல்எஸ்டேட் பாதிப்படையும். நகரத்தின் பழைய அடுக்குமாடிக் கட்டடங்களின் விலை அதிகரிக்கும். கிராமங்கள் நவீனமாகும். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புதிய சாலைகள் அமைக்கப்படும். எனினும், சாலை விபத்துகள் அதிகரிக்கும். மின்சாரத்தின் விலை உயரும். அரசியலில் பழி வாங்கும் போக்கு அதிகரிக்கும். பழைய தவறுகள் வெளிச்சத்துக்கு வரும். சுரங்க விபத்துகள் நிகழும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயரும். சிவப்பு நிறப் பொருட்களும் தானியங்களும் பிரபலமாகும்.  

ராகு - கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்

கேதுவால் ஏற்படப் போகும் பலன்கள்:

கேது பகவான் புதனின் வீடான மிதுனத்தைவிட்டு விலகி ரிஷபத்தில் அமர்வதால், பத்திரிகைத் துறை சூடுபிடிக்கும். எனினும், பத்திரிகையாளர்கள் சிலர் பாதிப்படைவார்கள். புதிய சேனல்கள் உதயமாகும். திரைத் துறையில் சுணக்கங்கள் விலகும். புதிய படங்கள் அதிகமாக வெளியாகும். திருட்டு வி.சி.டி-யைத் தடுக்க கடுமையான சட்டம் வரும். புதுமுகங்கள் மிளிர்வார்கள். பெரிய பட்ஜெட் படங்களைவிட சாதாரண பட்ஜெட் படங்கள் வெற்றி அடையும். கால்நடைகளைப் பாதிக்கும் புதிய நோய்கள் பரவும். வேம்பு, தென்னை, பலா ஆகிய மரங்கள் பாதிப்படையும். ஆன்மிகப் பெரியவர்கள் பழி வாங்கப்படுவார்கள். யோகா மற்றும் பழைய வைத்திய முறைகள் பிரபலமடையும். பால் விலை உயரும். செங்கல், சிமென்ட் விலை மீண்டும் உயரும். குறைப் பிரசவங்கள் அதிகரிக்கும். சளி, மூச்சுத்திணறல், மஞ்சள் காமாலை நோயால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். செயற்கைக் கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். வெள்ளை நிறப் பொருட்கள் பிரபலமாகும். வீடு கட்ட, வணிக வளாகம் அமைக்க வரைபட அனுமதி பெற, அரசு புதிய சட்டங்கள் கொண்டு வரும். ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்கள், கூடுதலாக வரி கட்ட வேண்டியது வரும். பத்திரப் பதிவுத் துறை நவீனமாகும். ஊழலை ஒழிக்கப் புது சட்டம் வரும். பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், வரதட்சணை கொடுமையைத் தடுக்க சட்டங்கள் கடுமையாகும். மழை அதிகமாகும். தானிய உற்பத்தி அதிகரிக்கும். நிலத்தடி நீர்வளம், ஆற்று மணல், மலைகள், காடுகளைப் பாதுகாக்கவும் சட்டம் வரும்.

பரிகாரம்:

இயற்கை வளங்களுக்கு ஆதாரமாக விளங்கும் விருச்சிக ராசியில் ராகு அமர்வதால், வீட்டுக்கொரு மரக்கன்று நடுவோம். உணவில் கீரை, முளைக்கட்டிய தானியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். கலைகளுக்குரிய வீடான ரிஷப ராசியில் கேது அமர்வதால், கோயில்கள் உள்ளிட்ட பாரம்பரியச் சின்னங்களை பேணிக் காப்போம். உலகுக்கு நம்மை அறிமுகப்படுத்திய பெற்றோர் மற்றும் உற்றோரை மதித்து நடப்போம். வெற்றி நிச்சயம்!

ராகு - கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்
ராகு - கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்