Published:Updated:

ராகு - கேது ஸ்தோத்திரம்

ராகு - கேது ஸ்தோத்திரம்

ராகு - கேது ஸ்தோத்திரம்

ராகு - கேது ஸ்தோத்திரம்

Published:Updated:
ராகு - கேது ஸ்தோத்திரம்

ராகு பகவான் ஸ்தோத்திரம்

ஸ்ரீகணேஸாய நம:

ராஹுர்தானவமந்த்ரீ ச ஸிம்ஹிகாசித்தநந்தன:
அர்த்தகாய: ஸதா க்ரோதீ சந்த்ராதித்யவிமர்தன:

ரௌத்ரோ ருத்ரப்ரியோ தைத்ய: ஸ்வர்பானுர் பானுபீதித:
க்ரஹராஜ: ஸுதாபாயீ ராகாதித்யபிலாஷ§க:

காலத்ருஷ்டி: காலரூப: ஸ்ரீகண்ட ஹ்ருதயாஸ்ரய:
விதுந்துத: ஸைம்ஹிகேயோ கோரரூபோ மஹாபல:

க்ரஹபீடாகரோ தம்ஷ்ட்ரீ ரக்தநேத்ரோ மஹோதர:
பஞ்சவிம்ஸதி நாமானி ஸ்ம்ருத்வா ராஹும் ஸதா நர:

ய: படேன்மஹதீ பீடா தஸ்ய நஸ்யதி கேவலம்
ஆரோக்யம் புத்ரமதுலாம் ஸ்ரியம் தான்யம்பஸ¨ம்ஸ்ததா

ததாதி ராஹுஸ்தஸ்மை ய: படதே ஸ்தோத்ரமுத்தமம்
ஸததம் படதே யஸ்து ஜீவேத் வர்ஷஸதம் நர:

##~##
இது ஸ்ரீஸ்காந்தபுராணே ராஹு ஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்.

பொருள்: ராகு, அசுர மந்திரி, தாயான ஸிம்ஹிகையின் மனதை சந்தோஷப்படுத்துபவன், பாதி உடல் உள்ளவன், கோபம் கொண்டவன், சந்திர- சூரியர்களைப் பிடிப்பவன், பயங்கரன், ருத்திரனிடத்தில் பிரியம் கொண்டவன். திதியின் புத்திரன், சொர்க்கத்தில் பிரகாசிப்பவன், சூரியனுக்கு பீதியைத் தருபவன், கிரகங்களுக்கு அதிபதி, அமிர்தத்தை பானம் செய்பவன், பூர்ணிமா திதியைக் கோருகிறவன், காலத்தைக் கண்ணாகக் கொண்டவன், காலரூபி, சிவனை இதயத்தில் கொண்டவன், சந்திரனைப் பீடிப்பவன், ஸிம்ஹிகையின் புத்திரன், கோர ரூபன், அதிக பலம் படைத்தவன், மற்ற கிரகங்களுக்குப் பீடையைத் தருபவன், கோரைப் பற்களை உடையவன், சிவந்த கண் களை உடையவன், பெரும் வயிறு படைத்தவன்...

ராகு பகவானைத் தியானித்து இந்த 25 நாமங்களையும் படித்து வழிபட்டால், பெரும் துன்பங்களும் அழிந்துவிடும்.

கந்த புராணத்தில் உள்ள- ராகு பகவானின் 25 திருநாமங்களைச் சிறப்பிக்கும் இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்போருக்கு ஆரோக்கியம்,  நல்ல சந்ததி, அதிகச் சம்பத்து, தானியம், பசுக்கள் ஆகிய வளங்களை ராகு பகவான் வாரி வழங்குவாராம். மட்டுமின்றி, இந்த ஸ்தோத்திரத்தை எப்போதும் பாராயணம் செய்துகொண்டிருப்பவர்கள், நூறு வயது வரை வாழ்வார்.

ராகு - கேது ஸ்தோத்திரம்

கேது பஞ்சவிம்சதிநாம ஸ்தோத்திரம்

ஸ்ரீகணேஸாய நம:

கேது: கால: கலயிதா தூம்ரகேதுர்விவர்ணக:
லோககேதுர்மஹாகேது: ஸர்வகேதுர்பகப்ரத:

ரௌத்ரோ ருத்ரப்ரியோ ருத்ர: க்ரூரகர்மா ஸுகந்தத்ருக்
பலாலதூமஸம்காஸ: சித்ரயக்ஞோபவீதத்ருக்

தாராகணவிமர்தீ ச ஜைமினேயோ க்ரஹாதிப:
(கணேஸதேவோ விக்னேஸ: விஷரோகார்தி நாஸன:

ப்ரவ்ராஜ்யதோ க்ஞானதஸ்ச தீர்த்தயாத்ரா ப்ரவர்தக:
பஞ்சவிம்ஸதிநாமானி கேதோர்ய: ஸததம் படேத்)

தஸ்ய நஸ்யதி பாதா ச ஸர்வா கேதுப்ரஸாதத:
தனதான்யபஸ¨னாம் ச பவேத் வ்ருத்திர் ந ஸம்ஸய:

இது ஸ்ரீஸ்காந்தபுராணே கேது பஞ்சவிம்சதி நாம ஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்.

பொருள்: கேது, காலன், எண்ணுபவன், தூம்ரகேது, விவர்ணகன், லோககேது, மஹாகேது, ஸர்வகேது, பாக்கியம் அளிப்பவன், ரௌத்ரன், ருத்ரப்ரியன், ருத்ரன், க்ரூரகர்மா, நறுமணம் அணிந்தவன், வைக்கோல் புகையின் நிறமுள்ளவன், சித்ர யக்ஞோப வீதத்ருக், தாராகணவிமர்தீ, ஜைமினேயன், க்ரஹாதிபன், கணேச தேவன், விக்னேசன், விஷரோகார்த்திகாசனன், ஸன்யாஸ யோகத்தைக் கொடுப்பவன், ஞானம் அளிப்பவன், தீர்த்த யாத்திரையைக் கொடுப்பவன்...

கேதுவின் இந்த 25 திருப்பெயர்களையும் படிப்பவர்கள், கேது பகவானின் அனுக்கிரகத்தால் சகல பீடைகளில் இருந்தும் விடுபடுவார்கள். செல்வம், தானியம், பசுக்கள் ஆகிய வளங்கள் செழிப்படையும். இதில் சந்தேகமே இல்லை.

மகிமைகள் மிகுந்த இந்த ஸ்தோத்திரமும் கந்த புராணத்திலேயே உள்ளது.

தொகுப்பு: எம்.சக்திவேல்