ரெகுலர்
Published:Updated:

ராசிபலன்கள்

ராசிபலன்கள்

மே 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை
'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்கள்

மேஷம்: மென்மையான மனசுள்ளவர்களே! ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். ஆனால், ஜென்ம குரு இருப்பதால் சாதாரண பேச்சு சண்டையில் முடியலாம். 17-ம் தேதி மதியம் 2 மணி முதல் 19-ம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், அவசரம் வேண்டாம். 16-ம் தேதி முதல் கேது 2-ல் நுழைவதால், பேச்சில் நிதானம் அவசியம். ராகு 8-ல் மறைவதால் அலைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் உதவுவார்கள்.

ஆளுமைத்திறன் அதிகரிக்கும் நேரமிது. 

ராசிபலன்கள்

ரிஷபம்: செய்நன்றி மறவாதவர்களே! ராசிநாதன் சுக்கிரன் உள்ளிட்ட முக்கிய கிரகங்கள் 12-ல் மறைந்திருப்பதால்... செலவுகள், வீண் டென்ஷன் வந்து போகும். கேது 16-ம் தேதி முதல் ராசிக்குள் நுழைவதால், உடல் உபாதை வந்து நீங்கும். 15-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் அமர்வதால் முன்கோபம், மறைமுக எதிர்ப்பு வந்து விலகும். 19-ம் தேதி மாலை 6 மணி முதல்  21-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்யோகத்தில் சிறு சிறு அவமானங்கள் வந்து நீங்கும்.

மௌனத்தால் முன்னேறும் வேளையிது.  

ராசிபலன்கள்

மிதுனம்: தொலைநோக்குச் சிந்தனையாளர்களே! லாப வீட்டில் குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். 16-ம் தேதி முதல் ராசியை விட்டு கேது  விலகுவதால், உடல் நலம் சீராகும். ராகு 7-ம் வீட்டை விட்டு விலகுவதால், கணவருடனான மோதல் விலகும். 22-ம் தேதி முதல் 24-ம் தேதி காலை 9.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். 15-ம் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால், தூக்கமின்மை வந்து விலகும். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில், அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

செல்வம், செல்வாக்கு கூடும் காலமிது.  

ராசிபலன்கள்

கடகம்: யதார்த்தத்தை விரும்புபவர்களே! யோகாதிபதி செவ்வாய் 10-ல் ஆட்சி பெற்று நிற்பதால், செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். 16-ம் தேதி முதல் கேது 11-ம் வீட்டில் நுழைவதால், பூர்வீக சொத்து கைக்கு வரும். பழைய கடன் தீரும். 5-ல் ராகு அமர்வதால், பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். 24-ம் தேதி காலை 9.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால், எதிலும் கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

எதிலும் முதல் மரியாதை கிடைக்கும் தருணமிது.              

ராசிபலன்கள்

சிம்மம்: தர்மத்துக்கு தலை வணங்குபவர்களே! பூர்வ புண்யாதிபதி குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். 15-ம் தேதி முதல் சூரியன் 10-ல் அமர்வதால், அரசால் அனுகூலம் உண்டு. 16-ம் தேதி முதல் கேது 10-ல் நுழைவதால்... வீண் டென்ஷன், வேலைச்சுமை வந்து போகும். வியாபாரம் சூடு பிடிக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார்.

முக்கியச் சந்திப்புகளால் முன்னேறும் நேரமிது.

ராசிபலன்கள்

கன்னி: கலகலப்பான குணம் கொண்டவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். 16-ம் தேதி முதல் ராகு 3-ம் வீட்டிலும், கேது 9-ம் வீட்டிலும் அமர்வதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். 8-ல் செவ்வாய், புதன், குரு மறைந்திருப்பதால்... கணவர் கோபப்படலாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். 15-ம் தேதி முதல் சூரியன் 9-ம் வீட்டில் அமர்வதால், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முதலீடு செய்யுங்கள். உத்யோகத்தில் சூட்சமங்களை உணர்வீர்கள்.

எதிர்ப்புகளைத் தாண்டி எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வேளையிது.

ராசிபலன்கள்

துலாம்: எப்போதும் நடுநிலை தவறாதவர்களே! குருபகவான் வலுவாக இருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.  மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். உல்லாசப் பயணம் சென்று வருவீர்கள். 15-ம் தேதி முதல் சூரியன் 8-ல் மறைவதால்... முன்கோபம், உடல் உபாதை வந்து நீங்கும். 16-ம் தேதி முதல் ராகு 2-ல் அமர்வதால், பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். 8-ல் கேது நுழைவதால் கொஞ்சம் அலைச்சலும், செலவுகளும் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் காலமிது.

ராசிபலன்கள்

விருச்சிகம்: உதவும் கரங்கள் உடையவர்களே! ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பூர்விக சொத்தால் வருமானம் வரும். 6-ல் குரு, சுக்கிரன், புதன் மறைந்திருப்பதால்... உடல் நலக் கோளாறு, பயணச் செலவு வந்து போகும். 16-ம் தேதி முதல் ராகு ராசிக்குள் அமர்வதால், படபடப்பு, சோர்வு வந்து நீங்கும். கேது 7-ல் நுழைவதால், கணவருடன் கருத்து மோதல் வரக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது.  

ராசிபலன்கள்

தனுசு: அதிரடியாக செயல்படுபவர்களே! ராசிநாதன் குருபகவான் 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், தொட்ட காரியம் துலங்கும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். தெய்விக ஈடுபாடு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள், புது வண்டி வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். 15-ம் தேதி முதல் சூரியன் 6-ல் அமர்வதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். 16-ம் தேதி முதல் கேது 6-ம் வீட்டில் நுழைவதால், கணவருடன் இருந்த கசப்பு உணர்வு விலகும். ராகு 12-ல் அமர்வதால், நிம்மதி கிட்டும். வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு கூடும்.

புயல் அடங்கி, தென்றல் திரும்பும் வேளையிது.

ராசிபலன்கள்

மகரம்: இதயத்திலிருந்து பேசுபவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவரின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். ஆடை, ஆபரணம் சேரும். 16-ம் தேதி முதல் ராகுபகவான் லாப வீட்டில் அமர்வதால், புதுத் தெம்பு பிறக்கும். கேது 5-ல் நுழைவதால், பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். 11-ம் தேதி முதல் 13-ம் தேதி காலை 8.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், எதிலும் நிதானம் அவசியம். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும்.

இழந்ததை மீட்கும் தருணமிது.  

ராசிபலன்கள்

கும்பம்: பிறர் நலம் பேணுபவர்களே! செவ்வாய் வலுவாக இருப்பதால், புது சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். 16-ம் தேதி முதல் கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-ம் வீட்டிலும் நுழைவதால், வேலைச்சுமை அதிகரிக்கும். 13-ம் தேதி காலை 8.30 மணி முதல் 14-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள்.  

கடின முயற்சியால் காரியத்தை முடிக்கும் காலமிது.

ராசிபலன்கள்

மீனம்: சொன்ன சொல் தவறாதவர்களே! குரு பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், சிக்கல்கள் தீரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். 15-ம் தேதி முதல் சூரியன் 3-ல் அமர்வதால், அரசு காரியங்கள் சாதகமாக முடியும். 16-ம் தேதி முதல் ராகு 9-ல் அமர்வதால், தந்தையுடன் மனக்கசப்பு வரக்கூடும். 3-ம் வீட்டில் கேது நுழைவதால், திடீர் யோகம் உண்டாகும். 15-ம் தேதி முதல்  17-ம் தேதி மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும்.

இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வரும் வேளையிது.