ஸ்பெஷல் 1
Published:Updated:

ராசிபலன்கள்

மே 25-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை

'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்கள்

மேஷம்: பிறரை மகிழ்வித்து மகிழ்பவர்களே! குருபகவான் முக்கியமான வீடுகளைப் பார்ப்பதால், பணவரவு திருப்தி தரும். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். கணவர் உங்களுக்காக பரிந்து பேசுவார். ஆடை, ஆபரணம் சேரும். சகோதரர் ஓடி வந்து உதவுவார். ராகு, கேதுவால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். சூரியன் 2-ல் நிற்பதால், உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர, சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். விடாமுயற்சியால் வெற்றி பெறும் நேரமிது.

ராசிபலன்கள்

ரிஷபம்: தடைக்கற்களை படிக்கட்டுகளாக்கி முன்னேறுபவர்களே! உங்கள்

##~##

யோகாதிபதிகளான சூரியனும், புதனும் வலுவாக நிற்பதால், எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பள்ளி, கல்லூரிக் கால தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். குருபகவான் 12-ல் மறைந்திருப்பதால்... திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்... படபடப்பு, உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய தருணமிது.                 

ராசிபலன்கள்

மிதுனம்: எதிர்பார்ப்பு இல்லாமல் உதவும் குணம் கொண்டவர்களே! முக்கிய கிரகங்கள் 11-ல் நிற்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவர் உங்களைப் பாராட்டுவார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ராசிநாதன் புதன் கேதுவுடன் இணைந்திருப்பதால்... அலைச்சல், வீண் விரயம் வந்து போகும். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் வீண் செலவு, உடல் உபாதை வந்து நீங்கும்.. வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும் வேளையிது.  

ராசிபலன்கள்

கடகம்: ஒற்றுமையே உயர்வு தரும் என்பதை உணர்த்துபவர்களே! செவ்வாயும், சுக்கிரனும் வலுவாக இருப்பதால்... வீடு வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். 25-ம் தேதி முதல் 26-ம் தேதி இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், பொறுமையுடன் செயல்படுங்கள். 10-ல் குரு தொடர்வதால், யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். ரகசியங்களைக் காக்க வேண்டிய நேரமிது.    

ராசிபலன்கள்

சிம்மம்: எங்கும் எதிலும் வெற்றியை விரும்புபவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், புது முயற்சிகள் நிறைவேறும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். சூரியனும், புதனும் 10-ல் நிற்பதால், புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். பாதச் சனி தொடர்வதால், பேச்சில் நிதானம் அவசியம். 26-ம் தேதி இரவு 8 மணி முதல் 29-ம் தேதி காலை 8 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால், உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் தேங்கிக் கிடக்கும் சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். பழைய கடன் தீரும் தருணமிது.  

ராசிபலன்கள்

கன்னி: அறிவியல்பூர்வமாக எதையும் யோசிப்பவர்களே! ராகு 3-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். ஆனால், முக்கிய கிரகங்கள் 8-ல் மறைந்து நிற்பதால்... டென்ஷன், செலவுகள் வந்து போகும். 29-ம் தேதி காலை 8 மணி முதல் 31-ம் தேதி இரவு 7 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சில நேரங்களில் மௌனம் தேவைப்படும் நேரமிது.  

ராசிபலன்கள்

துலாம்: பந்த பாசத்துக்கு கட்டுப்பட்டவர்களே! செவ்வாய் வலுவாக இருப்பதால், பணவரவு திருப்தி தரும். சூரியன் 8-ல் மறைந்திருப்பதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவு வார்கள். குருபகவான் சாதகமாக இருப்பதால்... திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும். சர்ப்பகிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால், வீண் டென்ஷன் ஏற்படக்கூடும். 31-ம் தேதி இரவு 7 மணி முதல் 2-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வி.ஐ.பி-க்களால் இனம் காணப்படும் வேளையிது.                

ராசிபலன்கள்

விருச்சிகம்: மனதில் பட்டதை மறைக்காமல் பேசுபவர்களே! சனி பகவான் வலுவாக இருப்பதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், கணவர் சில நேரங்களில் கடிந்து கொள்வார். பணப்பற்றாக்குறை இருக்கும். சூரியனும், புதனும், கேதுவுடன் இணைந்திருப்பதால்... மனக்குழப்பம், உடல் உபாதை வந்து விலகும். 3-ம் தேதி முதல் 5-ம் தேதி காலை 9.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சிக்கனம் தேவைப்படும் காலமிது.    

ராசிபலன்கள்

தனுசு: புரட்சிகரமான சிந்தனை உள்ளவர்களே! 5-ல் முக்கிய கிரகங்கள் அமர்ந்திருப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அழகு, இளமை கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். அரசால் அனுகூலம் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். 5-ம் தேதி காலை 9.30 மணி முதல் 7-ம் தேதி மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்த்த அதிகாரி இடம் மாறுவார். சக ஊழியர்கள் மதிப்பார்கள். நீண்ட நாள் பிரச்னைகள் தீரும் வேளையிது.  

ராசிபலன்கள்

மகரம்: தயவு தாட்சண்யமும், தாராள மனசும் கொண்டவர்களே! யோகாதிபதிகளான சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவருக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டு. ஆனால், 4-ல் குரு இருப்பதால்... அலைச்சல் ஏற்படக்கூடும். 5-ல் சூரியன் நிற்பதால், பிள்ளைகளால் டென்ஷன், செலவுகள் வந்து போகும். 7-ம் தேதி மதியம் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால், எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டிய நேரமிது.              

ராசிபலன்கள்

கும்பம்: நிர்வாகத் திறமை அதிகமுள்ளவர்களே! 3-ல் செவ்வாயும், சுக்கிரனும் சாதமாக இருப்பதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். குருபகவான் 3-ல் நிற்பதால், சில காரியங்கள் இரண்டாவது முயற்சியில் முடியும். உடன்பிறந்தவர்கள் அனுசரணையாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். அஷ்டமத்துச்சனி நீடிப்பதால், யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் தருணமிது.                        

ராசிபலன்கள்

மீனம்: மனசாட்சியை முக்கிய சாட்சியாக நினைப்பவர்களே! 3-ல் சூரியன், புதன், கேது சாதகமாக இருப்பதால், திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். வராது என்றிருந்த பணம் வரும். புது வீடு, மனை வாங்குவீர்கள். கணவர் நீங்கள் சொல்வதை செய்வார். 7-ல் சனி தொடர்வதால், அவ்வப்போது குடும்பத்தில் சலசலப்பு, வீண் டென்ஷன் வந்து போகும். 9-ல் ராகு நிற்பதால் பணப்பற்றாக்குறை, வந்து நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் நினைத்தது நிறைவேறும் நேரமிது.