ஸ்பெஷல் 2
Published:Updated:

ராசிபலன்கள் !

ராசிபலன்கள் !

'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
ஜூன் 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை

ராசிபலன்கள் !

மேஷம்: மூளையை மூலதன மாக்கி முன்னேறுபவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பூர்விக சொத்தால் வருமானம் வரும். 11-ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய், கேதுவுடன் இணைவதால்... வாகனப் பழுது ஏற்படும். பேச்சால் பிரச்னை வந்து நீங்கும். 14, 15 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால், பொறுமையுடன் செயல்படுங்கள். 15-ம் தேதி முதல் சூரியன் 3-ல் நுழைவதால், அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் வரவு உயரும். அலுவலகத்தில் மரியாதை கூடும்.

தொலைநோக்குச் சிந்தனையால் முன்னேறும் நேரமிது.      

ராசிபலன்கள் !

ரிஷபம்: உங்கள் பத்து விரல்களையே சொத்தாக நினைப்பவர்களே! ராசிநாதன் சுக்கிரன் ராசிக்குள் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால்,  குடும்பத்தில் அமைதி நிலவும். ஆடை, ஆபரணம் சேரும். 11-ம் தேதி முதல் செவ்வாய் ராசிக்குள் நிற்கும் கேதுவுடன் இணை வதால்... முன்கோபம் வந்து விலகும். 16, 17 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால், எதிலும் நிதானித்து செயல்படுங்கள். 15-ம் தேதி முதல் சூரியன் ராசியை விட்டு விலகுவதால், மனக்குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சில சூட்சமங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

அனுசரித்துப் போக வேண்டிய வேளையிது.                  

ராசிபலன்கள் !

மிதுனம்: பொது நலத்துக்காக பாடுபடுபவர்களே! குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவருக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டு. 11-ம் தேதி முதல் செவ்வாய் 12-ல் மறைவதால், திடீர் பயணம், வாகனப் பழுது வந்து செல்லும். 18-ம் தேதி முதல் 20-ம் தேதி மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், எதிலும் அவசரப்பட வேண்டாம். 15-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால், வீண் டென்ஷன் வந்து நீங்கும். வியாபாரத்தில் புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத் தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள்.

நினைத்ததை முடிக்கும் தருணமிது.              

ராசிபலன்கள் !

கடகம்: மிதமாக யோசித்து, வேகமாக செயல்படுபவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். 15-ம் தேதி முதல் சூரியன் ராசிக்கு 12-ல் மறைவதால்... வீண் அலைச்சல், செலவு, எதிர்பாராத பயணம் வந்து செல்லும். 20-ம் தேதி மாலை 5 மணி முதல் 21-ம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சலுகைகள் கிடைக்கும்.

எதிர்ப்புகள் நீங்கும் காலமிது.      

ராசிபலன்கள் !

சிம்மம்: அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களே! ராசிநாதன் சூரியன் வலுவாக இருப்பதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள். சொத்துப் பிரச்னை நல்ல விதத்தில் முடியும். பாதச் சனி தொடர்வதால், யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

சாதித்துக் காட்டும் நேரமிது.

ராசிபலன்கள் !

கன்னி: நகைச்சுவையாகவும், நாசூக் காகவும் பேசுபவர்களே! ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால், உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கணவர் உங்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வார். 15-ம் தேதி முதல் சூரியன் 10-ல் நுழைவதால், அரசு வேலைகள் வேகமாக முடியும். தந்தையின் உடல் நலம் சீராகும். 8-ல் குரு மறைந்திருப் பதாலும், ஜென்ம சனி தொடர்வதாலும்... மறைமுக எதிர்ப்பு, வீண் பழி வந்து செல்லும். வியாபாரத்தில் ஏற்றுமதி மூலம் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் மூத்த அதிகாரியின் ஆதரவு கிட்டும்.

தடைகள் உடைபடும் வேளையிது.

ராசிபலன்கள் !

துலாம்: எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே! குருபகவான் வலுவாக நிற்பதால், நீண்ட நாள் பிரச்னை களுக்கு தீர்வு கிட்டும். கணவர் உங்களுக்கு சாதகமாக பேசுவார். அவருக்கு புது வேலை கிடைக்கும். நவீன டிசைனில் தங்க நகை வாங்கு வீர்கள். 11-ம் தேதி முதல் செவ்வாய் 8-ல் மறைவதால்... டென்ஷன், உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். 15-ம் தேதி முதல் சூரியன் 9-ம் வீட்டில் நுழைவதால், தந்தையின் உடல் நலம் பாதிக்கப்படலாம். வியாபாரத்தில் புது வாடிக்கை யாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்.

செல்வாக்கு கூடும் காலமிது.

ராசிபலன்கள் !

விருச்சிகம்: நாடிவருவோருக்கு நல்லதைச் செய்பவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பணத்தட்டுப் பாடு குறையும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய நகையை தந்து விட்டு புதுசு வாங்குவீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. ராகுவும், கேதுவும் சரியில்லாததால்... வீண் விவாதம், கவலைகள் வந்து செல்லும். 15-ம் தேதி முதல் சூரியன் 8-ல் மறைவதால், உடல் உபாதை வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மற்றவர்கள் உங்களைத் தாக்கிப் பேசினாலும் பதற்றப்படாதீர்கள்.

விவாதங்களைத் தவிர்க்க வேண்டிய தருணமிது.

ராசிபலன்கள் !

தனுசு: யாருக்காகவும் தன் குறிக் கோளை மாற்றிக் கொள்ளாதவர்களே! ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், தோழிகளால் நன்மை உண்டு. 15-ம் தேதி முதல் 7-ல் சூரியன் நுழைவதால், கணவருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் நல்ல வாய்ப்புகள் வரும். இடமாற்றம் உண்டு.

தொட்டது துலங்கும் நேரமிது.  

ராசிபலன்கள் !

மகரம்: சோர்ந்து வருபவர்களை உற்சாகப்படுத்துபவர்களே! லாப வீட்டில் ராகுபகவான் நிற்பதால், பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பள்ளி, கல்லூரிக் கால தோழிகளை சந்திப் பீர்கள். 11-ம் தேதி முதல் செவ்வாய் 5-ல் நுழைவதால், பிள்ளைகளால் அலைச்சல் இருக் கும். 8-ம் தேதி முதல் 9-ம் தேதி மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், முன்யோசனை யுடன் செயல்படுங்கள். 15-ம் தேதி முதல் சூரியன் 6-ல் நுழைவதால், அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். உத்யோ கத்தில் உயரதிகாரி சில சூட்சமங்களை சொல்லித் தருவார்.

வேலைச்சுமை அதிகரிக்கும் வேளையிது.  

ராசிபலன்கள் !

கும்பம்: கஞ்சத்தனம் இல்லாமல் வாரி வழங்குபவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், வீடு கட்டும் பணியைத் தொடங்க பணம் கிடைக்கும். 15-ம் தேதி முதல் சூரியன் 5-ல் நுழைவதால்... முன்கோபம், உடல் உபாதை வந்து நீங்கும். 9-ம் தேதி மாலை 5 மணி முதல் 11-ம் தேதி இரவு 7 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. அஷ்டமத்துச் சனி தொடர்வதால், விமர்சனங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும்.

முன்னேற்றம் ஏற்படும் காலமிது.  

ராசிபலன்கள் !

மீனம்: நல்லது, கெட்டதை சமமாக பாவிப்பவர்களே! உங்கள் ராசிநாதன் குருபகவான் வலுவாக அமர்ந்திருப் பதால், பணவரவு உண்டு. 7-ல் சனி தொடர்வதால், குடும்பத்தில் சச்சரவு வரும். 11-ம் தேதி முதல் செவ்வாய் 3-ல் நுழைவதால், சொத்து வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். 11-ம் தேதி இரவு 7 மணி முதல் 13-ம் தேதி வரை ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால், வாக்குவாதங்களைத் தவிருங்கள். 15-ம் தேதி முதல் 4-ல் சூரியன் அமர்வதால், தாயாருக்கு உடல் உபாதை வந்து விலகும். வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மதிப்பார்கள்.

பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நேரமிது.