Published:Updated:

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-15

கே.குமார சிவாச்சாரியார்

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-15

கே.குமார சிவாச்சாரியார்

Published:Updated:
வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-15
##~##

'கல்யாணமாகி நாலஞ்சு வருஷம் ஓடிப்போச்சு. இன்னும் வயித்துல ஒரு புழு-புச்சி தங்கலையே... அந்த சாமி கண்ண திறக்க மாட்டேங்குதே’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கோடி கோடியா சொத்து இருந்து என்ன பிரயோசனம்? வம்சம் தழைக்க ஒரு வாரிசு வேண்டாமா?’

- இப்படி, குழந்தை இல்லாத குறையால் மருகித் தவிக்கும் குடும்பங்கள் நிறைய. பொண்ணும் மாப்பிள்ளையுமாக வெளிநாடுகளில் கை நிறைய சம்பாதிப்பார்கள். ஆனால், அவர்கள் கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இருக்காது. சம்பாதித்ததை சந்தோஷமாக அனுபவிக்கும் கொடுப்பினை இல்லாமல் தவிப்பார்கள். இன்னும் சில தம்பதிகள் குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடுவார்கள். ஆனால், அவர்கள் விரும்பும்போது பிள்ளைக்கனி வாய்க்காமல் போகும் சம்பவங்களும் உண்டு.

இப்படி, குழந்தை இல்லாமல் மருகும் நிலை ஏற்படுவது ஏன்? சந்ததி இல்லாமல் சங்கடப் படும் நிலைக்கு, ஜாதகத்தில் என்னென்ன குறைபாடுகள் காரணமாகின்றன? அந்தக் குறைகளைக் களைவதற்கு என்ன வழி?

அதுபற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

கணினியில் அதிக நேரம் வேலை பார்க்கும் ஆண்களுக்கு உயிரணுக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்றொரு கருத்து சொல்லப்படுகிறது. அதேபோன்று பெண்களுக்கு கருப்பையில் முட்டை வளர்ச்சி தடைப்படும்போது கரு தங்காமல் போய்விடுகிறது. இதற்கான காரணத்தை அறிய அவர்களின் சிலேஷ்டும நாடித்துடிப்பை அறிய வேண்டும். 56 நாடிகள் ஓடினால், கரு தங்கும். குறைந்தால் அதற்குத் தகுந்த மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஆண்களுக்கு உயிரணுக்களின் கவுன்ட்டிங் அதாவது எண்ணிக்கை '74 ஜீவ அணுக்கள்’ என்று இருக்க வேண்டும். குறைந்தால் குழந்தை பாக்கியம் தடைப்பட வாய்ப்பு உண்டு.

மிக முக்கியமாக... குழந்தையின்மைக்கு உணவும் சூழலும்கூட காரணமாகின்றன.

எல்லாப் பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் என்பது கண்டிப்பாக உண்டு. திருமணமாகி 15 வருடங்கள் கழித்து குழந்தை பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஜாதகத்தில் உள்ள குறைபாடுகளை அறிந்து, தகுந்த பரிகார வழிபாடுகளை நம்பிக்கையுடன் செய்து வந்தால், விரைவில் பிள்ளைக்கனி வாய்க்கும்.

பிள்ளை பாக்கியம் தடையாகும் ஜாதக அமைப்புகள்...

* லக்னத்துக்கு 5-ல் குரு அமர்ந்து 5-ஆம் பாவாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்திருந்தால், காலதாமதம் ஆனாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

* 5-ஆம் பாவாதிபதி 3-ல் இருக்க... சந்திரனும், 4-ஆம் பாவாதி பதியும் 6-ல் இருந்தால் தாயாரின் சாப தோஷத்தால் குழந்தை பிறக்காது தடை ஏற்படலாம்.

* லக்னத்துக்கு ஒன்றில் குரு அமர்ந்து, குருவுக்கு ஒன்பதில் சுக்கிரனும், லக்னாதிபதியும் இருந்தால் 40 வயதுக்கு மேல் குழந்தை பாக்கியம் ஏற்படலாம்.

* லக்னாதிபதி, 5-ஆம் பாவாதிபதி, 7-ஆம் பாவாதிபதி, வாரிசுக்கு உரியவரான குரு ஆகிய நால்வரும் வலிமை இல்லாதிருந்தால், வாரிசு பிறக்க தடை உண்டாகும்.

* 5-ஆம் பாவத்தில் செவ்வாயும் சனியும் அமர்ந்திட, லக்னாதிபதி புதன் வீட்டில் இருந்து புதனின் பார்வையோ அல்லது சேர்க்கையோ ஏற்பட்டால், அந்த ஜாதகன் புத்திரன் இல்லாமல் வேறொருவரின் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பார்.

* 5-ஆம் பாவத்தில் ராகு அமர்ந்து செவ்வாயால் பார்க்கப்பட்டால், சர்ப்ப தோஷம் ஏற்பட்டு, பிறக்கும்போது குழந்தை இறந்துபோய்விட வாய்ப்பு உண்டு.

* 7-க்கு உடையவன் 11-ல் அமர்ந்து, 5-க்கு உடையவன் சுபரின்  இணைப்பு பெற்றிருக்க... செவ்வாயும் சனியும் 5-ல் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் தத்து புத்திர யோகம் உண்டாகும் என்று பராசர ஹோராவின் விதிகள் சொல்கின்றன.

* பொதுவாக 5-ஆம் இடமே புத்திரஸ்தானம், லக்ஷ்மி ஸ்தானம் எனப்படுகிறது. 5-ஆம் இடத்துக்கு உரிய கிரகமானது 12, 8, 6-ஆம் இடங்களில் பாவரால் சூழப்பட்டால், 10 ஆண்டுகள் கழித்து தாமதமாக பிள்ளைப்பேறு வாய்க்கும். இப்படியான கிரக அமைப்பு உள்ளவர்கள், தங்களுக்கு வாரிசு இல்லையே என்று முடிவு கட்டிவிடக் கூடாது.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-15

ஜாதக ரீதியான இந்த காரணங்களைத் தவிர, வேறு சில விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.

* வீட்டில் பித்ருக்கள் வழிபாடு முறையாக நடைபெற வேண்டும்.

* கோயில், மடங்கள், குரு பீடங்கள் ஆகியவற்றின் நிலங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு, வாரிசுத் தடை உண்டாகும்.

* திருமணம் ஆகாமலேயே கன்னி ஒருத்தி இறந்திருந்து, அந்த கன்னிக்கு உரிய பூஜை செய்யப்படாமல் இருந்தாலும் வாரிசு தடை ஏற்படும்.

* ஊரில் உள்ள அரசு, ஆல மரம் மற்றுமுள்ள தலவிருட்சங்களை  உங்கள் வீட்டுப் பெரியவர்கள் எவரேனும் வெட்டியிருந்தால், பேரன் பிறக்காத நிலை உருவாகலாம். இதற்கு முறையான விருட்ச பரிகார பூஜை செய்ய வேண்டும்.

* கெமிக்கல் கலப்பில்லாத உணவுப் பழக்கமும், மன அமைதியும்  விரைவில் குழந்தை பாக்கியத்தைப் பெற்றுத்தரும்.

சரி! இனி மேற்கண்ட குறைகளைக் களைந்து பிள்ளைப் பாக்கியம் பெறுவதற்கான வழிபாட்டை அறிவோம்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அனுக்கிரகம் நிறைந்த, அவர் வாசம் செய்கின்ற புன்னை மரத்தை வீட்டில் வளர்ப்பதாலும், அதன் இலையை பூஜை அறையில் வைத்து பூஜிப்பதாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறது விருட்ச சாஸ்திரம்.

சுக்கில சதுர்த்தி, பௌர்ணமி தினங்களில் சந்தான கணபதி ஹோமம், சந்தான கோபால ஹோமம் செய்து ஆல், அரசு, புரசம் சமித்துக் களால் ஹோமம் செய்து, அவரவர் குல சம்பிரதாயப்படி வழிபட புத்திரத் தடை நீங்கும்.

வம்ச விருத்தி பூஜை

பஞ்சாங்க சுத்தி உள்ள ஒரு சுபநாளில், புன்னை மரக் கிளை ஒன்றை எடுத்துவந்து, வீட்டு பூஜையறையில் வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர்ச்சரம் சார்த்துதல் வேண்டும்.

அருகில்... பஞ்சவர்ண நூல் சுற்றிய பித்தளைச் சொம்பில் கலசமும், ஆலிலை கிருஷ்ணர் படமும் வைத்து, நெய்தீபம் ஏற்ற வேண்டும். பின்னர், ஓம் சந்தான கணபதியே நம: என்று மூன்று முறை கூறி நீலோத்பலம் மற்றும் சாமந்திப் பூக்களால் அர்ச்சித்து கணபதியை வழிபட்டுவிட்டு, கிருஷ்ணனை பூஜிக்க வேண்டும்.

'ஓம் ஸ்ரீகிருஷ்ணாய கோவிந்தாய கோபி நேசாய வாசுதேவாய, வம்ச விருத்திகராய ஸ்ரீம் பாலகிருஷ்ணாய நம:’ என்று 12 முறை கூறி, கலசத்துக்கு மலர்கள் சமர்ப்பித்து வணங்க வேண்டும். அடுத்து அவல் பாயசம், பால், கற்கண்டு நிவேதனம் செய்து, ஆரத்தி காட்டி வழிபட வேண்டும்.

மேலும், பூஜையறையில் வைத்திருக்கும் ஆலிலை கிருஷ்ணர் படத்துக்கு... இலையின் காம்புப் பகுதி துவங்கி, தினம் ஒன்றாக 45 தினங்களுக்கு பொட்டு வைத்துவர வேண்டும். தினமும் வம்ச கவசம் படிக்க வேண்டும். இந்த பூஜையின் பலனால், உங்கள் வீட்டில் விரைவில் தொட்டில் சத்தம் கேட்கும்.

தினமும் உணவில் வாழைப்பூ சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன், கிழக்கில் தலைவைத்துப் படுத்து உறங்குவதையும் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

வம்ச பூஜை செய்து வரும் தம்பதிகள், தங்களுடய பெற்றோர்கள் பால் உள்ள நட்சத்திரங்களைச் சேர்ந்துள்ளனரா? ஒரே தசையில் ஆண், பெண் இருவருக்கும் திருமணம் செய்ததால் திசா சந்தி ஏற்பட்டுள்ளதா? ஜாதகங்களைப் பொருத்தியபோது நாடிப் பொருத்தம் பார்க்கப்பட்டதா? புத்திர சந்தான பாவகம் சரியாகப் பார்க்கப்பட்டு ஜாதகங்கள் இணைக்கப்பட்டதா என்று உறுதி செய்து கொண்டு, அதற்கான தெய்வ பரிகாரமும் செய்துவிட வேண்டும்.

அதி சீக்ர சத்சந்தான பிராப்திரஸ்து!

- வழிபடுவோம்...

வம்ச கவசம்!

ஓம் நமோ தேவ்யை மகாதேவ்யை
துர்க்காயை ஸததம் நம:
புத்ரபாக்யம் தேஹி தேஹி
   கர்ப்ப விருத்திம் குருஷ்வந:
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்
ஜம் ஜம் ஜம் மகாகாளீ மகாலக்ஷ்மீ
மகா சரஸ்வதீ ரூபிண்யை நவகோடி மூர்த்யை நம:
ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் துர்கார்த்தி நாசினீ
ஸந்தான சௌக்யம் தேஹி தேஹி
வந்த்யத்வம் ம்ருதவத் ஸத்வம் சார ஹர ஹர
கர்ப்ப ரட்சாம் குரு குரு
குலஜாம் பாஹ்யஜாம் க்ருதாம் க்ருதாம்ஸ
நாஸய நாஸய ஸர்வகாத்ராணி ரக்ஷ: ரக்ஷ:
கர்ப்பம் போஷய போஷய சர்வோ பத்ரவம்
சோஷய சோஷய ஸ்வாஹா
அனேன கலைசேனாங்கம் ஸப்த வாராபி  மந்த்ரிதம்
ருதுஸ்நாதா ஜலம் பீத்வா பவேத கர்ப்பவதீத்ருவம்
கர்ப்ப பாதபயே பீத்வா த்ருட கர்ப்பா ப்ரஜாயதே
அனேன கவசேனாத மார்ஜீதாய  நிசாகமே
ஸர்வ பாதா விநிர்முக்தா கர்ப்பிணி ஸ்யாநீந ஸம்சய:
அனேன கவசேன ஹக்ரந்திதம் ரக்த தோரகம்:

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism