Published:Updated:

ராசி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன், ஓவியங்கள்: பிரின்ஸஸ்அக்டோபர் 23 முதல் நவம்பர் 5 வரை

ராசி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன், ஓவியங்கள்: பிரின்ஸஸ்அக்டோபர் 23 முதல் நவம்பர் 5 வரை

Published:Updated:
ராசி பலன்கள்

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்!

மேஷம்: முற்போக்குச் சிந்தனையாளர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சூரியன் நீசமாகி நிற்பதால், தூக்கம் குறையும். பிள்ளைகளால் அலைச்சல், செலவினங்கள் அதிகமாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிக முதலீடுகள் வேண்டாம். கூட்டுத்தொழிலில் பங்குதாரருடன் கருத்து மோதல் வரும். உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராசி பலன்கள்

அழகு, ஆரோக்கியம்... அருமை!

ரிஷபம்: மனசாட்சியை மதித்து நடப்பவர்களே! சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால், அழகு, ஆரோக்கியம் கூடும். தடைபட்ட காரியங்கள் விரைந்து முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். சுகாதிபதி சூரியன் வலுவிழந்திருப்பதால், வேலைச்சுமை அதிகமாகும். பெற்றோருடன் மனத்தாங்கல் ஏற்படலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப்பிடியுங்கள். ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் லாபம் உண்டு. உத்யோகத்தில் சிறுசிறு அவமானங்களைச் சந்திக்க வேண்டி வரும்.

ராசி பலன்கள்

செலவுகள் துரத்தும்!

மிதுனம்: விவாதம் என வந்துவிட்டால் வெளுத்து வாங்குபவர்களே! அக்டோபர் 30-ம் தேதி வரை சுக்கிரன் மறைந்து நிற்பதால், செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போகும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். 31-ம் தேதி முதல் சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்ப்பதால் அலைச்சல், டென்ஷன் குறையும். புதன் வக்ரமாகி இருப்பதால், குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் 'எவ்வளவு உழைத்தும் நல்ல பெயர் இல்லையே’ என்று ஆதங்கப்படுவீர்கள்.

ராசி பலன்கள்

பிள்ளைகள் பிரகாசிக்கும் நேரம்!

கடகம்: நகைச்சுவை பேச்சால் பிறர் மனதில் இடம் பிடிப்பவர்களே! ராசிநாதன் சந்திரன் சாதகமாக இருப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். 2-ல் நிற்கும் செவ்வாய், சேமிப்புகளை கரைப்பார். உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதைத் தவிர்க்கப் பாருங்கள். பள்ளிப் பருவ தோழியைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். உத்யோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம்.

ராசி பலன்கள்

உழைப்பு உயரத்தில் வைக்கும்!

சிம்மம்: தொடங்கியதை முடிக்கும் வரை துவளாதவர்களே! உங்கள் ராசிநாதன் சூரியன் பலவீனமாக இருப்பதால்... உடல் உபாதை, களைப்பு வந்து நீங்கும். விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். எடைமிகுந்த பொருட்களைத் தூக்குவதைத் தவிருங்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தடைபட்ட காரியங்கள் விரைந்து முடியும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் நெருக்கடி வந்து நீங்கும். உத்யோகத்தில் கடின உழைப்பால் உயரதிகாரிகள் மனதில் நீங்கள் இடம் பிடிப்பீர்கள்.

ராசி பலன்கள்

புதிய நகையால் புன்னகை!

கன்னி: வாழ்க்கையின் நெளிவு சுளிவு அறிந்தவர்களே! யோகாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், வாழ்க்கைத் துணைவர் உதவிகரமாக இருப்பார். பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். உறவினர்களுடன் இருந்த மோதல் விலகும். செவ்வாய் மறைந்திருப்பதால், பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளைப் பற்றி சக ஊழியர்களிடம் விமர்சிக்க வேண்டாம்.

ராசி பலன்கள்

குருவின் பார்வை சக்தி தரும்!

துலாம்: கலாரசனை அதிகமுள்ளவர்களே! குருவின் பார்வையால், பிரச்னைகளை எதிர்கொள்ளும் சக்தி கிடைக்கும். பேச்சைக் குறைப்பீர்கள். சகோதரர் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். அக்டோபர் 23-ம் தேதி கூடுதல் கவனத்துடன் செயல்படப் பாருங்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். பூர்விக சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களால் தொந்தரவுகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள்.

ராசி பலன்கள்

பணவரவு பிரமாதம்!

விருச்சிகம்: பிறர் பொருளுக்கு ஆசைப்படாதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், பணவரவு அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு கூடும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பிள்ளைகளிடமிருந்த பிடிவாத குணம் மாறும். சகோதரி உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார். அக்டோபர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி காலை 9 மணி வரை முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாளுவது பலன் தரும். உத்யோகத்தில் வீண் பழி வந்து நீங்கும்.

ராசி பலன்கள்

பாசப்பிணைப்பு பரவசத்தில் ஆழ்த்தும்!

தனுசு: சீர்திருத்த சிந்தனை அதிகமுள்ளவர்களே! ராசிநாதன் குரு வலுவாக இருப்பதால், தொட்டது துலங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உடன்பிறந்தவர்களுடன் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புக்கு ஏற்ற வேலை அமையும். அக்டோபர் 26-ம் தேதி காலை 9 மணி முதல் 28-ம் தேதி வரை திட்டமிட்டவை தாமதமாக முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார்.

ராசி பலன்கள்

சுக்கிரன் தருவார் காரிய வெற்றி!

மகரம்: பெற்ற தாயையும், பிறந்த மண்ணையும் அதிகம் நேசிப்பவர்களே! சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், விடாப்பிடியாக செயல்பட்டு முக்கியமான வேலைகளை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறை ஏற்படலாம். சூரியன் 10-ல் நின்றாலும்... ராகு, சனியுடன் நீசமாகி அமர்ந்திருப்பதால், மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். செவ்வாயும் 8-ல் தொடர்வதால், வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்தாதீர்கள்.

ராசி பலன்கள்

இல்லக் கனவு நனவாகும்!

கும்பம்: நட்பு வட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்களே! 5-ல் நிற்கும் குருவும், 3-ல் இருக்கும் கேதுவும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சலை தருவார்கள். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் வரும். புதன் வக்கிரமாகி 8-ல் மறைந்திருப்பதால், ஆடம்பரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உறவினர், தோழிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

ராசி பலன்கள்

வலுவான செவ்வாய்... தெளிவான மனநிலை!

மீனம்: கொள்கை கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காதவர்களே! செவ்வாய் வலுவாக இருப்பதால், தெளிவாக முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சுமுகமாக முடியும். என்றாலும், புதன் நீசமாகி 7-ல் நிற்பதால், வாழ்க்கைத் துணைவர் சில நேரங்களில் முணுமுணுப்பார். 8-ல் ராகுவும், சனியும் தொடர்வதால், 'காரியம் ஆகும் வரை மற்றவர்கள் உங்களைப் பயன்படுத்திக் கொண்டு விலகுகிறார்கள்’ என்று ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.