Published:Updated:

ராசி பலன்கள்

ஜூன் 22-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை

ராசி பலன்கள்

ஜூன் 22-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை

Published:Updated:

'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்

மேஷம் : சொந்த முயற்சியால் முதலிடத்தை பிடிப்பவர்களே! உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 3-ல் வலுவடைந்திருப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அரசியல்வாதிகள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவர் உங்கள் மனம் நோகாமல் நடந்து கொள்வார். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்து புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். தன்னம்பிக்கையால் சாதிக்கும் வேளையிது.

ராசி பலன்கள்

ரிஷபம் : பதவிக்காக ஆசைப்படாமல் தகுதியிருந்தும் தள்ளியிருப்பவர்களே! ராசிநாதன் சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மன இறுக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். கணவருடன் இருந்த ஈகோ பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த அளவுக்கு பணம் வராவிட்டாலும் ஓரளவு வரும். ஆனால், சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும், சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும். சமயோஜித புத்தி தேவைப்படும் தருணமிது.

ராசி பலன்கள்

மிதுனம் : தியாகத்தால் எதையும் சாதிப்பவர்களே! 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை

##~##

நாலாவிதத்திலும் சனிபகவான் சிரமப்படுத்தினாலும், லாப வீட்டில் நிற்கும் குருவால் வெற்றி பெறுவீர்கள். தடைபட்ட வேலைகள் முடியும். கணவர் உங்களை பெருமை யாக பேசுவார். செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால் சகோதரரால் அலைச்சல், வாகனச் செலவு, வீண் டென்ஷன் வந்து விலகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களைத் தேடுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். புதிய பாதையில் பயணிக்கும் தருணமிது.

ராசி பலன்கள்

கடகம் : சுற்றியிருப்பவர்கள் சுகமாய் வாழ பாடுபடுபவர்களே! சனி வலுவாக நிற்பதால் புது முயற்சியில் வெற்றி கிட்டும். ஜூன் 22-ம் தேதி  சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபம், டென்ஷன் அதிகரிக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். கணவரிடம் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைப்பீர்கள். 10-ல் குரு தொடர்வதால் வீண் பழி வந்து விலகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடக்கும் சரக்குகளை, சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் அதிக நேரம் வேலை பார்க்க நேரிடும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் வேளையிது.

ராசி பலன்கள்

சிம்மம் : அடக்குமுறைக்கு அஞ்சாமல் அன்புக்கு அடிமையாகி விடுபவர்களே! குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார். ஜூன் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி மதியம் 3.30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் வீண் விவாதங்கள், உடல்நலக் குறைவு ஏற்படும். உறவினர்களிடம் உங்கள் மதிப்பு கூடும். வியாபார ரகசியங்கள் அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். உத்யோகத்தில் சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். திடீர் திருப்பங்கள் நிறைந்த காலமிது.

ராசி பலன்கள்

கன்னி : உள்ளம் அழுதாலும் உதட்டில் புன்னகையை தவழ விடுபவர்களே! சூரியன் 10-ல் இருப்பதால் உங்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். கணவர் தன் தவறை உணர்ந்து உங்களிடம் நடந்து கொள்வார். ஜூன் 25-ம் தேதி மதியம் 3.30 மணி முதல் 27-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் தொடர்ந்த தொல்லைகள் விலகும். தள்ளிப் போன காரியங்கள் விரைந்து முடியும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம் : அடித்தட்டு மக்களையும் அரும்பாடுபட்டு முன்னேற்ற நினைப்பவர்களே! ராசிநாதன் சுக்ரன் வலுவடைந்திருப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். உங்கள் ராசியைக் குருபகவான் பார்த்துக் கொண்டிருப்பதால் எதிலும் தெளிவு பிறக்கும். ஜூன் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் யாரையும் நம்பி முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் உங்கள் மதிப்பு கூடும். எதிர்ப்புகள், இழப்புகள் நீங்கும் தருணமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம் : பொதுவாக சட்ட திட்டங்களை மதித்தாலும் சில நேரங்களில் நியாயவாதிகளைக் காப்பாற்ற குறுக்கு வழியில் யோசிப்பவர்களே! ராசிநாதன் செவ்வாய், சுக்ரனுடன் சேர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவரின் வேலைச்சுமையை பகிர்ந்து கொள்வீர்கள். ஜூன் 30-ந் தேதி காலை 11 மணி முதல் ஜூலை 2-ம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் காரியத் தடைகள், டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். நீண்டநாள் ஆசை நிறைவேறும் நேரமிது.

ராசி பலன்கள்

தனுசு : மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்களே! சூரியன் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை பெருகும். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஜூலை 2-ந் தேதி மாலை 6 மணி முதல் 4-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் முன்கோபம், வீண் அலைச்சல் வரக்கூடும். கேதுவால் பழைய சிக்கல்கள் தீர்வுக்கு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும் வேளையிது.

ராசி பலன்கள்

மகரம் : படிப்பறிவுடன் பட்டறிவையும் பயன்படுத்திப் பக்குமாகப் பேசுபவர்களே! சூரியன் 6-ல் வலுவாக இருப்பதால் இழுபறியான வேலைகள் முழுமையடையும். கணவருடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் வந்தாலும் ஒற்றுமை குலையாது. 27-ம் தேதி முதல் புதன் சாதகமாக அமைவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். 30-ம் தேதி முதல் சுக்ரன் 6-ல் மறைவதால் சிறுசிறு விபத்து, டென்ஷன் வரக்கூடும். ஜூலை 5-ம் தேதி சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் சோர்வுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பழைய சிக்கல்கள் தீரும் காலமிது.

ராசி பலன்கள்

கும்பம் : மன உறுதி, விடாமுயற்சியுடன் நினைத்ததைச் சாதித்துக் காட்டுபவர்களே! யோகாதிபதி சுக்ரன் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். கணவரின் வேலைச்சுமையை பகிர்ந்து கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். தந்தை வழிச் சொத்துக்கள் கைக்கு வரும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் வீண் கோபம், மன உளைச்சல் வரலாம். உறவினர்கள் சிலர் பொறாமையால் பேசுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. பங்குதாரருடன் கருத்து மோதல் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச் சுமை இருந்தாலும் செல்வாக்கும் உயரும். காத்திருந்து காய் நகர்த்தும் நேரமிது.

ராசி பலன்கள்

மீனம் : தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர்களே ! ராசிக்கு 3-ல் செவ்வாயும், கேதுவும் நிற்பதால் தட்டுத்தடுமாறிய காரியங்கள் கைகூடும். கணவர் உங்களின் பெருந்தன்மையை இப்போது புரிந்து கொள்வார். 4-ல் சூரியன் நிற்பதால் திடீர் பயணங்களால் கையிருப்புக் கரையும். பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கத்து வீட்டாரின் தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுக்கும் வேளையிது.