Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்

ராசி பலன்கள்

ராசி பலன்கள்

Published:Updated:

'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

ஜூலை 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

ராசி பலன்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேஷம்: பரந்த மனசுக்கு சொந்தக்காரர்களே! சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். கணவர், உங்களுடன் அனுசரித்துச் செல்வார். சூரியன் பார்வையால், பதவியில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். 11-ம் தேதி முதல் 13-ம் தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். போராடி இலக்கை எட்டும் வேளையிது.

ராசி பலன்கள்
##~##

ரிஷபம்: எங்கும் எப்போதும் உண்மையை விரும்புபவர்களே! பூர்வ புண்யாதிபதி புதன் சாதகமாக இருப்பதால் பலரின் உதவிகள் கிடைக்கும். 7-ல் ராகு இருப்பதால் கணவர் அவ்வப் போது அலுத்துக் கொண்டாலும் பாசம் குறையாது. 13-ம் தேதி காலை 10 மணி முதல் 15-ம் தேதி மாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். வியா பாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பணிவால் சாதிக்கும் காலமிது.

ராசி பலன்கள்

மிதுனம்: களங்கமில்லாத பேச்சுக்கு சொந்தக்காரர்களே! ராசிக்குள் சுக்ரன் நுழைந்திருப்பதால் புதிய முடிவுகள் எடுப்பீர்கள். சோர்வு, களைப்பு நீங்கும். கணவரின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டி அவரை சரி செய்வீர்கள். 15-ம் தேதி மாலை 4 மணி முதல் 17-ம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். அலுவலகத்தில் பிரச்னை தந்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். தலை நிமிர்ந்து நடக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

கடகம்: பாகுபாடு பார்க்காமல் பழகுபவர்களே! யோகாதிபதி செவ்வாய் தொடர்ந்து லாப வீட்டில் நிற்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். 18, 19 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் இழுபறியாகும். சூரியன் சாதகமாக இல்லாததால் திடீர் செலவுகள், பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். 10-ல் குரு இருப்பதால் உத்யோகத்தில் வீண் பழி வந்து விலகும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். எதிர்பார்த்தவை நிறைவேறும் தருணமிது.

ராசி பலன்கள்

சிம்மம்: சுய கட்டுப்பாடுடையவர்களே! பாதச்சனி உங்களை பாடாய்ப்படுத்தினாலும் குருபகவான் சாதகமாக இருப்பதால் பிரச்னைகளின் வேகம் குறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவரின் நம்பிக்கையை பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் வேலைச்சுமை, மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். அச்சம் விலகி அதிகாரம் பெருகும் வேளையிது.

ராசி பலன்கள்

கன்னி: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்படுபவர்களே! 3-ல் ராகு வலுவாக அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். கௌரவப் பதவிகள் தேடி வரும். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவர் நீங்கள் சொல்வதைச் செய்வார். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். உறவினர்களின் அன்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். செவ்வாயும், கேதுவும் 9-ல் இருப்பதால் சேமிப்புகள் கரையும். தந்தைக்கு அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் சலுகைகள் அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். மதியூகத்தால் வெற்றி பெறும் நேரமிது.

ராசி பலன்கள்

துலாம்: தர்மத்துக்குத் தலை வணங்குபவர்களே! பாக்கியாதிபதி புதன் 10-ல் அமர்ந்திருப்பதால் உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் ஏற்படும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவருக்கு புதிய ஆலோசனைகள் தருவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். 8-ல் செவ்வாய், கேதுவுடன் நிற்பதால் அவ்வப்போது சண்டை, விபத்து, செலவு வந்து விலகும். வீடு, மனை வாங்குவது விற்பதில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை விட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். திட சிந்தனையால் வெல்லும் காலமிது.

ராசி பலன்கள்

விருச்சிகம்: மண்வாசனை மாறாதவர்களே! சுக்ரன் தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் ஓரளவு பணம் வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பேச்சில் கனிவு பிறக்கும். கணவர் சில நேரங்களில் முணுமுணுத்தாலும் கடைசி நேரத்தில் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வார். செவ்வாய், கேதுவுடன் நிற்பதால் முன்கோபம் அதிகரிக்கும். குரு 6-ல் மறைந்திருப்பதால் எதிர்ப்புகள், சலிப்பு, சோர்வு வந்து போகும். ராகுவால் தலைவலி, தூக்கமின்மை வந்து விலகும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் அரவணைப்பு இருக்கும். கடின உழைப்பால் முதலிடம் பிடிக்கும் தருணமிது.

ராசி பலன்கள்

தனுசு: தோல்வியைக் கண்டு துவளாதவர்களே! கேது வலுவாக இருப்பதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பணவரவு அதிகரிக்கும். கணவர் புதிய தொழில் தொடங்குவார். பிள்ளைகள் நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் உங்களின் திறமையைக் கண்டு அதிசயிப்பார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பழைய வேலையாட்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். விஸ்வரூபமெடுக்கும் நேரமிது.

ராசி பலன்கள்

மகரம்: மேதாவித்தனம் அதிகம் உள்ளவர்களே! புதன் ராசியைப் பார்ப்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பூர்விக சொத்தை விற்று பிரச்னைகளிலிருந்து வெளிவருவீர்கள். சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால் கணவருடன் மோதல் வந்து நீங்கும். 6-ம் தேதி சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. 16-ம் தேதி வரை சூரியன் 6-ல் நிற்பதால் அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் யோசித்து முடிவெடுங்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் பிரச்னைகளைத் தீர்க்கும் காலமிது.

ராசி பலன்கள்

கும்பம்: கொள்கைக் கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காதவர்களே! பிரபல யோகாதிபதி சுக்ரன் 5-ல் அமர்ந்ததால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். கணவர் உங்களின் புது முயற்சிகளை ஆதரிப்பார். 4-ல் செவ்வாயும், கேதுவும் நிற்பதால் வேலைச்சுமை, டென்ஷன், மருத்துவச் செலவுகள் வந்து போகும். 7, 8-ம் ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களின்போது கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். கால நேரம் கனிந்து வரும் தருணமிது.

ராசி பலன்கள்

மீனம்: வாடி வருபவர்களுக்கு வாரி வழங்குபவர்களே! குரு வலுவாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 7-ல் சனி நிற்பதால் தூக்கமின்மை, கணவருடன் சிறுசிறு மோதல்கள் வந்து விலகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும். பழைய கடனை பைசல் செய்ய புதிய உதவிகள் கிடைக்கும். 9, 10-ம் ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார். வெற்றியின் விளிம்பைத் தொடும் வேளையிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism