ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

ராசி பலன்கள்

டிசம்பர் 22-ம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதி வரை

மேஷம்: கண் கலங்கி  நிற்பவர்களின் துயரம் போக்குபவர்கள் நீங்கள்.

ராசி பலன்கள்

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிதாக வீடு,வாகனம் வாங்குவீர் கள். புதன் சாதகமாக இருப்பதால், விலகிப்போனவர்கள் உங்களைத் தேடி வருவார் கள். செவ்வாய் ராகுவுடன் நிற்பதால்... வீண் அலைச்சல், சோர்வு வந்து நீங்கும். 31-ம் தேதி இரவு 9 மணி முதல் 2-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.

விடாமுயற்சியால் வெற்றி பெறும் வேளையிது.

ரிஷபம்: நேரடியாக பேசும் நீங்கள், எதிலும் நடுநிலை தவறாதவர்கள்.

ராசி பலன்கள்

குரு பகவான் வலுவாக நிற்பதால், வீடு கட்ட லோன் கிடைக்கும். மகளுக்கு புது வேலை அமையும். சுக்கிரனால் சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். சூரியன், செவ்வாய், ராகு 8-ல் நிற்பதால் குடும்பத் தில் சலசலப்பு, உடல் உபாதை வந்து நீங்கும். 3, 4 ஆகிய தேதிகளில் சந்தி ராஷ்டமம் நடைபெறுவதால், முன் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். வியாபாரத் தில் லாபம் கூடும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும்.

அலைச்சலுடன் ஆதாயம் தரும் தருணமிது.

மிதுனம்: சுற்றியிருப்பவர்களின் நன்மைக்காக பாடுபடுபவர்கள் நீங்கள்.

ராசி பலன்கள்

யோகாதிபதி சுக்கிரன் வலுவாக நிற்பதால், எதிர்பார்த்த வகையில் பணம் வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். கணவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், தாய்வழி உறவினர்கள் உதவுவார்கள். நவீன சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய வேளையிது.       

கடகம்: அதிரடியாக முடிவெடுக்கும் நீங்கள், தவறுகளைத் தட்டிக் கேட்பீர்கள்.  

ராசி பலன்கள்

செவ்வாய் வலுவடைந்திருப்பதால், தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத பணவரவு  உண்டு. பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது இடம் வாங்குவீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும்.  உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.  வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் தலைமையால் பாராட்டப்படுவீர்கள்.

தொட்டது துலங்கும் தருணமிது.

சிம்மம்: எதையும் ஆழமாக யோசிக்கும் பழக்கம் உடையவர்கள் நீங்கள்,  

ராசி பலன்கள்

புதன் சாதகமாக இருப்பதால், பூர்விகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்கு வீர்கள். கணவரின் வருமானம் உயரும். சுக்கிரன் சாதகமாக நிற்பதால், கேட்ட இடத் தில் பணம் கிடைக்கும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். ராசிநாதன் சூரி யன், ராகுவுடன் நிற்பதால்... பிள்ளைகளால் செலவுகள், உடல் உபாதை வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில், கமிஷன் வகையில் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.

மௌனத்தால் சாதிக்கும் நேரமிது.

கன்னி: புன்சிரிப்பால் மற்றவர்களைக் கவரும் நீங்கள், கற்பனை வளம் மிக்கவர்கள்.

ராசி பலன்கள்

குரு வலுவாக இருப்பதால், தொட்ட காரியம் துலங்கும். வீடு, மனை, வாகனம் உங்கள் ரசனைக்கேற்ப அமையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் முகப்பொலிவு கூடும். ராகுவும், செவ்வாயும் சரியில்லாததால்... வீண் விரயம், டென்ஷன் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றமும் உண்டு.

தன்னம்பிக்கையால் வெல்லும் தருணமிது.

 துலாம்: மனிதநேயம் அதிகமுடைய நீங்கள், மன்னிக்கும் குணமும் கொண்டவர்கள்.

ராசி பலன்கள்

சூரியன் சாதகமாக இருப்பதால், வர வேண்டிய பணம் கைக்கு வரும்.  புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு, நல்ல பதில் வரும். கணவர் அனுசரணையாக நடந்து கொள்வார். பிள்ளைகளின் தனித் திறமைகளை வளர்ப்பீர்கள். விரயச் சனி நடப்பதால், எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். 6-ல் குரு மறைந்திருப்பதால் மறைமுக எதிர்ப்பு, உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாக இருக்கும். உத்யோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள்.

வெற்றிக் கனியை சுவைக்கும் வேளையிது.

 விருச்சிகம்:  கால ஓட்டத்தை உணர்ந்து காய் நகர்த்தும் திறமை கொண்டவர்கள் நீங்கள்.

ராசி பலன்கள்

புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். சொத்து வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சூரியனால், உடல் உபாதை வந்து போகும். அரசு காரியங்களில் நிதானம் அவசியம். 22-ம் தேதி முதல் 23-ம் தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமான லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டிய நேரமிது.

தனுசு: சொந்த உழைப்பால் வாழ நினைப்பவர்கள் நீங்கள்.  

ராசி பலன்கள்

சுக்கிரன் வலுவாக நிற்பதால், பணம் வந்து சேரும். புதன் சாதகமாக இருப்பதால், சொந்தக்காரர்கள் தேடி வருவார்கள். குருவால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ராசிக்குள் சூரியன் நிற்பதால்... மன இறுக்கம், உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில், கூட்டுத் தொழில் லாபம் தரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

நாவடக்கம் தேவைப்படும் காலமிது.

மகரம்: அடக்குமுறைக்கு அஞ்சாத நீங்கள், அன்புக்கு அடிமையாவீர்கள்.

ராசி பலன்கள்

புதன் சாதகமாக இருப்பதால். வராது என்று நினைத்திருந்த பணம் வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. சுக்கிரன் சாதகமாக இருப்பதால், கடன் பிரச்னை குறையும். என்றாலும் செவ்வாயும், சூரியனும் சரியில்லாததால், சேமிப்புகள் கரையும். 25-ம் தேதி மதியம் 1 மணி முதல் 27-ம் தேதி மாலை 3 மணி வரை சந்திராஷ்டமம் நடைபெறுவதால், மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில், ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை கண்டறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்யோகத்தில் செல்வாக்கு உயரும்.

சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

கும்பம்: அமைதியை விரும்பும் நீங்கள், போட்டி என வந்துவிட்டால் விஸ்வரூபம் எடுப்பீர்கள்.

ராசி பலன்கள்

லாப வீட்டில் முக்கிய கிரகங்கள் நிற்பதால், திடீர் பணவரவு உண்டு.  கணவர் உங்கள் மனம்கோணாமல் நடந்து கொள்வார். மகனுக்கு உங்கள் ரசனைக்கேற்ற மணப் பெண் அமைவார். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.  அஷ்டமத்துசனி தொடர்வதால்... படபடப்பு வந்து நீங்கும். 27-ம் தேதி மாலை 3 மணி முதல் 29-ம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் நடைபெறுவதால், மறதியால் பிரச்னைகள் ஏற்படும். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

நினைத்ததை முடிக்கும் நேரமிது.

மீனம்: ஆடம்பரத்தை  விரும்பும் நீங்கள், சில சமயம் சித்தர்களைப் போல ஒடுங்குவீர்கள்.

ராசி பலன்கள்

யோகாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. சொத்து வாங்குவது, விற்பது சுலபமாக முடியும்.  29-ம் தேதி மாலை 6 மணி முதல் 31-ம் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், சில காரியங்களை போராடி முடிக்க நேரிடும். 7-ல் நிற்கும் சனியாலும், ஜென்ம குருவாலும் கணவருடன் மனத்தாங்கல் வந்து விலகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் வேளையிது.