Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்

ராசி பலன்கள்

ராசி பலன்கள்

Published:Updated:

 ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை

 'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உள்ளன்று வைத்து புறமொன்று பேசாதவர்களே! ராசிநாதன் செவ்வாய், கேதுவை விட்டு விலகி 24-ம் தேதி முதல் வலுவடைவதால் கோபம் குறையும். வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிட்டும். கணவர் உங்களை புரிந்து கொள்வார். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். வீடு, மனை வாங்குவது - விற்பது சுலபமாக முடியும். உறவினர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் அவமானங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தொடர் முயற்சியால் சாதிக்கும் காலமிது.  

ராசி பலன்கள்

தன்மானமும் தளராத மனதும் கொண்டவர்களே! உங்கள் பூர்வ புண்யாதிபதி புதன், சூரியனுடன் சேர்ந்திருப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு வீடு கட்ட கடன் உதவி கிடைக்கும். கணவரிடம் அன்பாகப் பேசி அவரின் வேண்டாத பழக்க வழக்கங்களை மாற்றுவீர்கள். பிள்ளை களின் பொறுப்புணர்வு அதிகமாகும். உறவினர்கள் உதவுவர். ராசியை விட்டு செவ்வாய் 24-ம் தேதி முதல் விலகுவதால் முன்கோபம், படபடப்பு, தலைசுற்றல் குறையும். சகோதரப் பகை விலகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடக்கும் சரக்குகளை, சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். போராட்டங்களைக் கடந்து முன்னேறும் வேளையிது.

ராசி பலன்கள்

தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றி பெறுபவர்களே ! சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் கேட்ட இடத்தில் பணம் வரும். கௌரவப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். ஷேர் மூலம் லாபம் வரும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். 24-ம் தேதி முதல் செவ்வாய், ராசிக்குள் அமர்வதால் வீண் டென்ஷன், வேலைச்சுமை, சிறு சிறு உடல் உபாதைகள் வந்து நீங்கும். கணவருடன் வீண் விவாதங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்ப்பு களை சமாளிக்கும் தருணமிது.

ராசி பலன்கள்

பிறர் தயவில் வாழ விரும்பாதவர்களே ! கேது சாதகமாக இருப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். கணவர் உங்களுக்கு சாதகமாக பேசுவார். 20-ம் தேதி காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் சோர்வாக இருப்பீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். பழைய உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். 24-ம் தேதி முதல் செவ்வாய், 12-ல் மறைவதால் வீண் செலவு, சிறுசிறு விபத்து, தூக்கமின்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்யுங்கள். உத்யோகத்தில் அதிகாரி களின் அந்தரங்க விஷயங் களை வெளியில் சொல்ல வேண்டாம். நிதானத்தால் நெருக்கடிகளை நீந்திக் கடக்கும் காலமிது.  

ராசி பலன்கள்

தனக்குத்தானே நீதிபதியாக இருப்பவர்களே ! செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் உடனே முடியும். கணவர் பொறுப்பாக நடந்து கொள்வார். 20-ம் தேதி காலை 11 மணி முதல் 22-ம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். உடன்பிறப்புகள் உங்களின் பாசத்தை உணர்வார்கள். 24-ம் தேதி முதல் சுக்ரன் 12-ல் நுழைவதால் சுபச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயர்ந்த அளவில் செல்வாக்கு கூடும். அனைவராலும் மதிக்கப்படும் நேரமிது.

ராசி பலன்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே என நினைப்பவர்களே ! யோகாதிபதி சுக்ரன் 24-ம் தேதி முதல் லாப வீட்டில் அமர்வதால் வராது என்றிருந்த பணம் வரும். கணவர் உங்கள் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார். 23-ம் தேதி முதல் 25-ம் தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. 8-ல் குரு மறைந்திருப்பதால் வீண் செலவு, திடீர் பயணம், அலைச்சல் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். ஓசைபடாமல் வளரும் காலமிது.

ராசி பலன்கள்

படிப்பறிவுடன் பட்டறிவும் உள்ளவர்களே ! சூரியன் வலுவாக அமர்ந்திருப்ப தால் எதிர்த்தவர்கள் நண்பர்களா வார்கள். கணவர் உங்களுக்கு உறுதுணையாக செயல்படுவார். 8-ல் மறைந்து உங்களை நிம்மதியில்லாமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கும் செவ்வாய், 24-ம் தேதி முதல் 9-ல் அமர்வதால் இழுபறியான வேலைகள் விரைந்து முடியும். 25-ம் தேதி காலை 10 மணி முதல் 27-ம் தேதி இரவு 7 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் முடங்கிக் கிடந்த பணிகளை முடிப்பீர்கள். சிக்கல்களில் இருந்து விடுபடும் வேளையிது.  

ராசி பலன்கள்

முடியாது என்பதையும் கடின உழைப்பால் முடித்துக் காட்டுபவர் களே! புதன் சாதகமாக இருப்ப தால் கனத்த மனசு லேசாகும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். ராகு, கேதுவால் கணவர் கோபப்படுவார். கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். 27-ம் தேதி இரவு 7 மணி முதல் 29-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் சுமார்தான். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வளைந்து கொடுத்தால் வெற்றி கிட்டும் தருணமிது.

ராசி பலன்கள்

சமூக அவலங்களைத் தட்டிக் கேட்க தயங்காதவர்களே ! சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால் உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். பணபலம் உயரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவரின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். 30, 31 தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்த்தவை தாமத மாக முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெளிச்சத்தை நோக்கி பயணிக்கும் நேரமிது.      

ராசி பலன்கள்

அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பாதவர் களே !  24-ம் தேதி முதல் சுக்ரன் 7-ல் அமர்வதால் வேலைகளை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். கணவரின் அன்பு கூடுதலாகும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். தூரத்துச் சொந்தங்கள் தேடி வரும். 24-ம் தேதி முதல் செவ்வாய் 6-ல் நுழைவதால் வழக்குகள் சாதகமாகும். உறவினர்கள் வகையில் இருந்த மன வருத்தம் நீங்கும். 1, 2 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் சலுகைத் திட்டங்களை அறிவித்து வெற்றி பெறு வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் களால் சங்கடங்கள் வரும். இங்கிதமான பேச்சால் வெற்றி பெறும் காலமிது.

ராசி பலன்கள்

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று இருப்பவர்களே ! குரு 3-ல் மறைந் திருந்தாலும் சாதகமான நட்சத்திரத் தில் செல்வதால் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும். 24-ம் தேதி முதல் சுக்ரன் 6-ல் மறைவதால் கணவர் ஏதேனும் ஒரு வகையில் குற்றம், குறை கூறுவார். செவ்வாய் சாதகமாக இல்லாததால் சலிப்பு, சோர்வு, சகோதர வகையில் பிரச்னை வந்து நீங்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். மௌனத்தால் சாதிக்கும் வேளையிது.

ராசி பலன்கள்

கலாசாரத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்களே ! புதன் சாதகமாக இருப்பதால் கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். மனதுக்கு இதமான செய்திகள் வரும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். சூரியன் 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். உறவினர்களுடன் இடைவெளி தேவை. வியாபாரத்தில் தயக்கமில்லாமல் புதிய முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் இடம் மாற்றம் சாதகமாக இருக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும் தருணமிது.