Published:Updated:

மகம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட ஆன்மிக நடைமுறைகள் பரிகாரங்கள்! #Astrology

மகம் நட்சத்திரக்காரர்கள்
மகம் நட்சத்திரக்காரர்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள்

 27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் தொடர்ந்து  வரிசையாக வெளியாகி வருகின்றன. ஆயில்யம் நட்சத்திரத்தைத் தொடர்ந்து மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

மகம் நட்சத்திரக்காரர்கள் திட ஆன்மிக நடைமுறைகள் பரிகாரங்கள்!

ட்சத்திர தேவதை :  பித்ரு தேவதைகள்.
வடிவம்  :    ஊஞ்சல் அல்லது நுகத்தடி போன்ற அமைப்புடைய ஐந்து நட்சத்திரக் கூட்டமைப்பு
எழுத்துகள்  :  ம, மி, மு, மே

மகம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பொதுவான பலன்கள் :

இந்த நட்சத்திரத்தின் ஆதிக்க நாயகன், வேத, ஆகமங்களில் கரைகண்ட கேது கிரகம். இந்த நட்சத்திரத்துக்கு உரிய ராசி சூரியனின் சிம்ம ராசி. இதனால்தான், ‘மகம்  ஜகம் ஆளும்’ என்ற பழமொழி நடைமுறைக்கு வந்தது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களைப் பற்றி, ஜாதக அலங்காரம்,  இசைத் தமிழில் வல்லவர்களாகவும், நீரில் மூழ்கிக் குளிப்பதை விரும்புபவர்களாகவும், செல்வம் உள்ளவர்களாகவும், வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள் என்று கூறுகிறது. 

நட்சத்திர மாலை,  பெரும் பணம் சம்பாதிப்பவர்களாக, வசதியாக வாழ்பவர்களாக, கற்பனையில் மூழ்குபவர்களாக, நினைத்ததை முடிப்பவர்களாக இருப்பார்கள் என்று கூறுகிறது. பிருகத் ஜாதகம், மாதா, பிதா, குரு, தெய்வத்தை வணங்கி வாழ்பவர்கள் என்று கூறுகிறது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், எதையாவது சாதிக்க வேண்டும் என்று சதா சர்வகாலமும் சிந்தனையில் மூழ்கி இருப்பார்கள். உறுதியான தெய்வபக்தி உடையவர்கள் ஆதலால், சாஸ்திரம் சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பரந்த ஞானமுடையவர்கள். நிர்வாகத் திறமை உடையவர்களாகவும் கல்வி கற்பதில் ஆர்வம் உள்ளவர்களாகவும் உண்மையே பேசுபவர்களாகவும் திகழ்வார்கள்.

கோபமிருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பதற்கு ஏற்ப, இவர்களிடம் நியாயமான கோபமும், குணமும் ஒருங்கே இருக்கும். கோபப்பட்டாலும் அடுத்த சில நிமிடங்களில் மறந்துவிடுவார்கள். சுறுசுறுப்புடன் இருப்பார்கள். குறைவாகத் தூங்குவார்கள்.

எதிரிகளை ஓட ஓட விரட்டக் கூடியவர்கள். கவர்ச்சியான மெலிந்த உடலழகைப் பெற்றிருப்பார்கள். சிற்றின்ப வேட்கை மிக்கவர்கள். குரு நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். இளமையிலேயே சுக்கிர தசை வருவதால், சிறுவயதிலேயே சுகபோகங்களை அனுபவிப்பார்கள். அனுபவ அறிவு அதிகம். சிலருக்குக் கலை ஆர்வத்தாலோ கூடா நட்பாலோ உயர்

கல்வியில் தடை ஏற்படும்.

பிறரிடம் கைகட்டி வேலை செய்வதை விரும்ப மாட்டார்கள். ஆகவே சுயதொழில் செய்வார்கள். இருந்தாலும், மக நட்சத்திரக்காரர்களில் பலர் பேராசிரியர், நடிகர், நடிகை, ஆடை வடிவமைப்பாளர், விளம்பர மாடல் ஆகிய தொழில் புரிவார்கள்.

மருந்து, மாந்திரீகம், ஜோதிடம், சரித்திரம், தர்க்க சாஸ்திரம், புராண, இதிகாசம் ஆகியவற்றில் அதீத ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். சிலர் பழம்பெரும் கலைகளை ஆராய்ச்சி செய்வார்கள். வாழ்க்கை செல்வ வளங்களுடன் அமைந்திருந்தாலும் அவ்வப்போது ஆன்மிகத்துக்கும் லௌகீகத்துக்கும் இடையே சிக்கி, மன நிம்மதி இல்லாமல் தவிப்பார்கள். 
 வெளிப்படையாகப் பேசுபவர்கள்.

எதிலும் தனித்தன்மை பெற்று காணப்படுவார்கள். தங்கள் விஷயத்தில் அடுத்தவர்கள் தலையிடுவதை விரும்ப மாட்டார்கள். தன்னம்பிக்கை கொண்டவர்கள். காதலித்துத் திருமணம் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். வாகனத்தை தாங்களே ஓட்டுவதில் அதிக விருப்பம் உள்ளவர்கள்இருக்கும். 26 வயதிலிருந்து 33 வயதுக்குள் வீடு, மனை, வாகனம் எல்லாம் வாங்கக்கூடிய யோகம்  அமையும். 

மகம் நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்: 

மகம் நட்சத்திரக்காரர்கள் முதல் பாதம் பரிகாரம்:
விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீவிருத்தாம்பிகை உடனுறை ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரையும் ஸ்ரீவிபசித்து முனிவரையும் வணங்குதல் நலம்.

மகம் நட்சத்திரக்காரர்கள் இரண்டாம் பாதம் பரிகாரம்:
கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ஆடுதுறையில் அருள்பாலிக்கும்  ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். 

மகம் நட்சத்திரக்காரர்கள் மூன்றாம் பாதம் பரிகாரம்:
கன்னியாகுமரிக்கும் நாகர்கோவிலுக்கும் இடையே உள்ள சுசீந்திரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதாணுமாலயனை வணங்குதல் நலம்.

மகம் நட்சத்திரக்காரர்கள் நான்காம் பாதம் பரிகாரம்:
புதுக்கோட்டை : பொன்னமராவதி வழித் தடத்தில் உள்ள பேரையூரில் எழுந்தருளியிருக்கும் நாகராஜன் வணங்கி பூஜித்த ஸ்ரீபிரகதாம்பாள் உடனுறை ஸ்ரீநாகநாத சுவாமியை வணங்குவது நல்லது.

அடுத்த கட்டுரைக்கு