Published:Updated:

ராசிபலன்கள்

ராசிபலன்கள்

ராசிபலன்கள்

ராசிபலன்கள்

Published:Updated:

'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை

ராசிபலன்கள்

மேஷம்: பிரச்னைகளை அலசி ஆராய்பவர்களே ! உங்கள் சுக ஸ்தானத்தில் முக்கிய கிரகங்கள் நிற்பதால், நினைத்தது நிறைவேறும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். ராசிநாதன் செவ்வாய் 3-ல் அமர்ந்திருப்பதால், பணவரவு அதிகரிக்கும். ஆனால், சனி பார்ப்பதால், வேலைச்சுமை இருக்கும். 7-ம் தேதி மதியம் 2 மணி முதல் 9-ம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், பயணங்களின்போது கவனம் தேவை. சர்ப்பக் கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால், சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில், மேலதிகாரி ஆதரிப்பார். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது.

ராசிபலன்கள்

ரிஷபம்: மென்மையாக பேசுபவர்களே ! யோகாதிபதிகளான சூரியன், புதன், சுக்கிரன் 3-ல்

##~##

நிற்பதால், தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். எதிர்பார்த்த பணத்தில் ஒரு பகுதி கிடைக்கும். ராசிக்கு 2-ல் சனியின் பார்வை பெற்ற செவ்வாய் நிற்பதால், பேச்சில் நிதானம் அவசியம். 9-ம் தேதி மாலை 6 மணி முதல் 11-ம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், பொறுமையுடன் செயல்படுங்கள். வியா பாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிக மானாலும், தலைமையின் நம்பிக்கை யைப் பெறுவீர்கள். சமயோஜித புத்தி யால் முன்னேறும் வேளையிது.  

ராசிபலன்கள்

மிதுனம்: மற்றவர்களின் நிறை, குறைகளை மதிப்பிடுவதில் வல்லவர்களே ! ராசிநாதன் புதன் பூர்வ புண்யாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்திருப்பதால், திடீர் பணவரவு உண்டு. கணவர் அனுசரணையாக இருப்பார். 12, 13 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால், எதிலும் அவசரப்பட வேண்டாம். இதுவரை 12-ல் மறைந்திருந்த செவ்வாய், ராசிக்குள் நுழைந்திருப்பதால் தூக்கமின்மை நீங்கும். ஆனால், சகோதர வகையில் மனவருத்தம் வந்து விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். உறவினர்களால் ஆதாயமடையும் தருணமிது.            

ராசிபலன்கள்

கடகம்: சோகங்களைப் பகிர்ந்து கொள்ளாதவர்களே !  ராசிக்குள் சுக்கிரனும், புதனும் இருப்பதால், உற்சாகமாக பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. சூரியனும், செவ்வாயும் சரியில்லாததால்... வீண் டென்ஷன், திடீர் பயணம் வந்து செல்லும். 14-ம் தேதி முதல் 16-ம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், யாரிடமும் கடுமையாகப் பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் நிலையற்ற சூழல் நிலவும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்ல வேண்டிய காலமிது.  

ராசிபலன்கள்

சிம்மம்: போராடி வெற்றி பெறுவதில் வல்லவர்களே ! குருபகவான் வலுவாக இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக அமையும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். ராசிநாதன் சூரியன் 12-ல் மறைந்திருப்பதால், வேலைச்சுமையால் அவதிப்படுவீர்கள். 16-ம் தேதி மாலை 6 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால், முன்எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். மதிப்பு, மரியாதை கூடும் வேளையிது.    

ராசிபலன்கள்

கன்னி: களங்கமில்லாத மனம் கொண்டவர்களே ! ராசிநாதன் புதன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். அரசு வேலைகள் வேகமாக முடியும். ஜென்மச் சனி தொடர்வதால் மறைமுக விமர்சனம், தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். நய மாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வரவு உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அறிமுகம் கிட்டும் நேரமிது.

ராசிபலன்கள்

துலாம்: கடந்த காலத்தை மறக்காதவர்களே ! செவ்வாய் வலுவாக இருப்பதால், உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள்.  சொந்தக்காரர்கள் உங்களைத் தேடி வருவார்கள். சர்ப்பக் கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால்... பேச்சால் பிரச்னை, இனம் தெரியாத கவலைகள் வந்து செல்லும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட உயரதிகாரி மாற்றப்படுவார். வசதி, வாய்ப்புகள் பெருகும் தருணமிது.    

ராசிபலன்கள்

விருச்சிகம்: நாட்டுப்பற்று அதிகம் உள்ளவர்களே ! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், திடீர் யோகம் உண்டாகும். புது வாகனம் வாங்குவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. கணவர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார். ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால், முன்கோபம், அலைச்சல் வந்து நீங்கும். 9-ல் சூரியன் நிற்பதால், அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள்.  உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் தவறுகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். சிக்கனம் தேவைப்படும் காலமிது.  

ராசிபலன்கள்

தனுசு: சிந்தனைவாதிகளே !  யோகாதிபதி செவ்வாய் 7-ல் அமர்ந்திருப்பதால், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். வராது என்றிருந்த பணம் வரும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். வீட்டை அழகுபடுத்துவீர்கள். ஆலயங்களை புதுப்பிக்க உதவுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் அலைச்சல், உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியடையும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறைந்த வேளையிது.

ராசிபலன்கள்

மகரம்: மதித்தால் மதிப்பவர்களே ! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், உங்களின் செல்வாக்கு உயரும். அழகு, இளமை கூடும். கனிவாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வாகன வசதி பெருகும். 3-ம் தேதி காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், கவனத்துடன் செயல்படுங்கள். 7-ல் சூரியன் நிற்பதால்... வீண் டென்ஷன், மனக்குழப்பம் வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்று முடிப்பீர்கள். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். தெய்வ பலத்தால் சாதிக்கும் தருணமிது.  

ராசிபலன்கள்

கும்பம்: மனக்கணக்கு போடுபவர்களே ! 10-ல் ராகு தொடர்வதால் பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள்.  6-ல் சுக்கிரனும், புதனும் மறைந்திருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள், தோழிகளுடன் விரிசல்கள் வரக்கூடும். 3-ம் தேதி காலை 9 மணி முதல் 5-ம் தேதி நண்பகல் வரை சந்திராஷ்டமம் இருப்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் தேடி வரும். உத்யோகத்தில் கடின உழைப்பு தேவைப்படும். விட்டுக் கொடுக்க வேண்டிய வேளையிது.          

ராசிபலன்கள்

மீனம்: 'எல்லோரும் நல்லவர்கள்’ என்று நினைப்பவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால்... வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். கணவர் உங்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வார். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். 5-ம் தேதி நண்பகல் முதல் 7-ம் தேதி மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால், அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. 5-ல் சூரியன் நிற்பதால்... உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயர்அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கனவுகள் நனவாகும் காலமிது.