ஆறுமுகன் அருள்புரிவான்!

ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம்அ கற்றிவளர்
அந்திபக லற்றநினை வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்திஉனை
அன்பொடுது திக்கமனம் அருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளிக்குவழி அருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்திசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனெ அருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமனம்
உன்றனைநி னைத்தமைய அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ர¬க்ஷபுரி
வந்தணைய புத்தியினை அருள்வாயே
கொங்கில்உயிர் பெற்றுவளர் தென்கரையில் அப்பரருள்
கொண்டுஉட லுற்றபொருள் அருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தன்என வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே

ஆறுமுகன் அருள்புரிவான்!

காங்கேயம் தாராபுரம் வழியில் காங்கேயத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் கொங்கணகிரி. இங்கு வட்டமலை என்ற பெயருடன் திகழும் குன்றின் மீது கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமான் மீது அருணகிரியார் அருளிச் செய்த அற்புதமான திருப்புகழ் பாடல் இது.

செவ்வாய்க்கிழமைகளில், வீட்டில் முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, இந்தப் பாடலைப் பாடி வழிபட, பதவி உயர்வு, தொழிலில் மேன்மை உட்பட சகல சௌபாக்கியங்களும் கைகூடும்.

- தி.செந்தில்நாதன், நெல்லை-2

ஆறுமுகன் அருள்புரிவான்!

இசையும் இயற்கை வெளிச்சமும்!

 * வீட்டின் தலைவாசல் அருகில் வெற்றுப் பாத்திரங்கள் வைக்கக் கூடாது.

* இயற்கை வெளிச்சம் வீட்டுக்குள் கிடைப்பது போன்ற அமைப்பு சிறப்பான யோகத்தைப் பெற்றுத் தரும்.

* அவ்வப்போது மென்மையான இசையை ஒலிக்கச் செய்வதால், வீட்டின் வாஸ்து தோஷங்களால் ஏற்படும் குறைபாடுகள் அகலும்.

* ஜன்னல் மற்றும் வாயிற்கதவுகளுக்குப் புறமுதுகு காட்டி உட்காரக் கூடாது என்பதும் நம்பிக்கை.

ஜோதிடர் கரு. கருப்பையா, திருப்புவனம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு