சூரியன் - 6-ந் தேதி வரை சுவாதி நட்சத்திரத்திலும், 7-ந் தேதி முதல் விசாகத்திலும் செவ்வாய் - பூரம் நட்சத்திரத்திலும் புதன் - 11-ந் தேதி வரை சித்திரை நட்சத்திரத்திலும் 12-ந் தேதி முதல் சுவாதி நட்சத்திரத்திலும் குரு - புனர்பூசம் நட்சத்திரத்திலும் சுக்ரன் - 12-ந் தேதி வரை மூலம் நட்சத்திரத்திலும், 13-ந் தேதி முதல் பூராடத்திலும் சனி - சுவாதி நட்சத்திரத்திலும் ராகு - சுவாதி நட்சத்திரத்திலும் கேது - அசுவினி நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர். பரணி, பூசம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாகன வசதி, திடீர் திருப்பங்கள், வீடு, மனை யோகம் உண்டாகும். ரோகிணி, திருவாதிரை, பூரம், சித்திரை, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வேலைச்சுமை, காரியத் தடை, ஓய்வின்மை வரும்.

தொடர்ந்து படியுங்களேன்...

அசுவினி

உங்கள் ராசிநாதன் செவ்வாய் தனத்தாரையில் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். கேது உங்கள் நட்சத்திரத்திலேயே செல்வதால் லேசாக தலைச்சுற்றலும், கோபமும் வந்து போகும். முற்பகுதியில் சூரியன் சாதகமாக இருப்பதால், அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். உங்கள் நட்சத்திரத்திற்கு சாதகமான சாரத்தில் ராகுவும், சனியும் நிற்பதால் வெளிமாநிலத்தைச் சார்ந்தவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடும். உத்தியோகத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும்.

பரணி

உங்கள் நட்சத்திர நாயகனான சுக்ரன் ராசிக்கு 9-ல் நிற்பதுடன் அதிநட்புத் தாரையிலும் செல்வதால் சோர்வு, சலிப்பு நீங்கும். உற்சாகமடைவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். செவ்வாய் உங்களுடைய அனுஜென்மத் தாரையில் செல்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். சனி உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் தூக்கம் குறையும். கணவன்-மனைவிக்குள் விவாதங்களும் வந்து நீங்கும். புதன் 6-ல் மறைந்திருந்தாலும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் பழைய நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் பாராட்டுகள் கிடைக்கும்.

கிருத்திகை

சனியும், ராகுவும் சுகத் தாரையில் செல்வதால், உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணருவார்கள். குரு உங்களுக்கு பகைத்தாரையில் செல்வதால், முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் அவ்வப்போது உங்களுக்கு பிடிக்காமல் போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும்.

ரோகிணி

11-ஆம் தேதி வரை புதன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் உங்கள் ரசனை மாறும். உங்களின் தனித்திறமையை அதிகரித்துக் கொள்வீர்கள். மனைவிவழியில் மதிப்பு கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கு சாதகமாகும். உங்கள் ராசிநாதன் சுக்ரன் பலவீனமாக இருப்பதால் சளித் தொந்தரவு, தொண்டை புகைச்சல், எதிர்பாராத செலவுகள், சோர்வு வந்து நீங்கும். வாகனம் பழுதாகி சரியாகும். சூரியன் பிற்பகுதியில் சாதகமாவதால் தடைப்பட்ட அரசாங்க விஷயங்கள் முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேற்றுமதத்தைச் சேர்ந்தவர்கள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

மிருகசீரிடம்

சுக்ரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். தோற்றப் பொலிவு கூடும். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். முற்பகுதியில் சூரியன் சாதகமாக இருப்பதால் அரசால் அனுகூலம் உண்டு. அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். செவ்வாய் வதைத் தாரையில் செல்வதால் கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். வீடு, மனை வாங்குவது, விற்பது தாமதமாக முடியும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதியவரின் வருகையால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

திருவாதிரை

ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சென்றுகொண்டிருப்பதால் புதிய யோசனைகள் பிறக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வழக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உங்களின் ஜென்மத் தாரையிலேயே சனியும், ராகுவும் தொடர்வதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் முகவாட்டத்துடன் காணப்படுவீர்கள். 6-ந் தேதி வரை சூரியன் சரியில்லாததால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். 7-ந் தேதி முதல் உங்கள் ஜென்மத் தாரையை விட்டு சூரியன் விலகுவதால் கோபம் குறையும். இழுபறியாக இருந்த அரசாங்க வேலைகள் முடியும். வியாபாரத்தில் உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் குறைகளை சுட்டிக் காட்டுவீர்கள்.

புனர்பூசம்

சுக்ரன் சாதகமாக இருப்பதால் வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடனுதவி கிடைக்கும். வேற்று மொழியினரால் உதவிகள் உண்டு. வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. செவ்வாய் பகைத் தாரையில் செல்வதால் ஒருவித பயம், பதற்றம், சகோதர வகையில் அலைச்சல், சொத்துப் பிரச்னைகள் வந்து செல்லும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். 7-ந் தேதி முதல் சூரியன் உங்களின் ஜென்மத் தாரையில் நுழைவதால் முன்கோபம், அடிவயிற்றில் வலி, காரியத் தாமதம் வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள்

பூசம்

செவ்வாய் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த சண்டை, சச்சரவு நீங்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பொதுக் காரியங்கள், சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். ஆடை, ஆபரணம் சேரும். கேது சாதகமாக இல்லாததால் திடீர்ப் பயணங்கள், தூக்கமின்மை, கனவுத் தொல்லை வந்து நீங்கும். கமிஷன், ஷேர் மூலம் லாபம் வரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.

ஆயில்யம்

சனியும், ராகுவும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் தன்னம்பிக்கை அதிகமாகும். புது வேலை கிடைக்கும். புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அடகு வைத்திருந்த பத்திரங்கள், ஆபரணங்களை மீட்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். செவ்வாய் சாதகமாக இல்லாததால் வீண் டென்ஷன், சிறுசிறு விபத்துகள், பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்து போகும். வீடு, மனை வாங்கும்போது தாய்ப்பத்திரத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

மகம்

செவ்வாய் தனத்தாரையில் செல்வதால் பணம் வரும். மனோபலம் அதிகரிக்கும். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். சகோதரர் ஓடி வந்து உதவுவார். முற்பகுதியில் சூரியன் சாதகமாக இருப்பதால் அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் விரைந்து முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். மகனுக்கு வேற்றுமாநிலத்தில் வேலை அமையும். பிற்பகுதியில் முன்கோபத்தை குறையுங்கள். குரு உங்களுக்கு வதைத் தாரையில் செல்வதால் மனைவியுடன் மோதல்கள், அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களால் அன்புத்தொல்லைகள் வந்து செல்லும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள்.

பூரம்

உங்கள் நட்சத்திர நாயகனான சுக்ரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். அழகு, அறிவு கூடும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். மனைவிவழியில் ஆதரவு பெருகும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். லோன் கிடைக்கும். செவ்வாய் உங்கள் நட்சத்திரத்திலேயே தொடர்வதால் சில நேரங்களில் தலைச்சுற்றல், சிறுசிறு அறுவை சிகிச்சைகள், விபத்துகள் வரும். சொத்து பிரச்னைகள் தலைதூக்கும். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களுடைய திறமையை மேலும் அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

உத்திரம்

ராகுவும், சனியும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் உங்களின் செல்வம், செல்வாக்குக் கூடும். சகோதரர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். 11-ந் தேதி வரை புதன் சாதகமாக இல்லாததால் கை, கால் மரத்துப் போகும். சோர்வு, களைப்பு வந்து நீங்கும். கேது சாதகமாக இருப்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். 7-ந் தேதி முதல் சூரியன் பகைத் தாரையில் செல்வதால், மனஇறுக்கம் அதிகமாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கூடுதல் லாபம் வரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

அஸ்தம்

11-ஆம் தேதி வரை புதன் தனத்தாரையில் செல்வதால் சமயோசிதமாக யோசிப்பீர்கள். இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். குரு சுகத்தாரையில் தொடர்வதால் திருமணம் கூடி வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ராகுவும், சனியும் சாதகமாக இல்லாததால் யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். அக்கம்பக்கத்து வீட்டாருடன் சச்சரவு வரும். பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

சித்திரை

கேது உங்களுக்குச் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள், வேற்று மாநிலத்தில் இருப்பவர்களால் உதவிகள் உண்டு. சுக்ரன் சாதகமாக இருப்பதால் ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். செவ்வாய் சாதகமாக இல்லாததால் சகோதர வகையில் பிரச்னைகள் வரும். சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து நீங்கும். வழக்கில் கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது.

சுவாதி

உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் நிற்பதுடன் சாதகமான நட்சத்திரத்திலும் செல்வதால் சகோதரர்கள் ஒத்துழைப்பார்கள். மனைவிவழியில் ஆதரவு பெருகும். பாக்யாதிபதி புதன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த தொகையில் பாதியாவது வந்து சேரும். குரு தனத்தாரையில் செல்வதால் இங்கிதமாகவும், இதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். 7-ந் தேதி முதல் சூரியன் சாதகமாவதால் தடைப்பட்ட அரசு வேலைகள் விரைந்து முடியும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். உங்கள் நட்சத்திரத்திலேயே சனி, ராகு தொடர்வதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவரை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களை போராடித் தக்க வைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

விசாகம்

சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். இழுபறியாக இருந்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா வரும். உங்கள் நட்சத்திர நாயகன் குரு திரிஜென்மத் தாரையில் செல்வதால் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். மகனுடன் வீண் விவாதம் வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வெளிவட்டாரத்தில் மற்றவர்களை தாக்கிப் பேச வேண்டாம். முற்பகுதியில் சூரியன் சாதகமாக இருப்பதால் தந்தையாரின் உடல் நிலை சீராகும். என்றாலும் பூர்வீக சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும். வியாபாரத்தில் கமிஷன், உணவு, கட்டிட வகைகளால் லாபம் கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளவேண்டாம்.

அனுஷம்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ம் வீட்டில் கேந்திர பலம் பெற்றிருப்பதால் உங்களின் ரசனைக்கேற்ற வீடு, மனை அமையும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வழக்கு வெற்றியடையும். பிதுரார்ஜித சொத்துகள் வந்து சேரும். ஆத்மபலம் கூடும். கேது சாதகமாக இல்லாததால் அலைச்சலும், பழைய கடனை நினைத்து பயமும் வந்து நீங்கும். மகளுக்கு வேலை கிடைக்கும். மகனின் பிடிவாத குணம் மாறும். புதன் சாதகமாக இல்லாததால் திடீர்ப் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். ஏழரைச் சனி நடைபெறுவதால், வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். பங்குதாரர்களிடம் மோதல் வந்து நீங்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கேட்டை

உங்கள் ராசிக்கு 8-ல் குரு மறைந்திருந்தாலும் நட்புத் தாரையில் செல்வதால் தாமதமான தொகை கைக்கு வந்து சேரும். நட்பு வட்டம் விரியும். சுக்ரன் தனத்தாரையில் செல்வதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். நேர்முகத் தேர்வு முடிந்து காத்திருப்பவர்களுக்கு புது வேலை அமையும். கேது சாதகமாக இருப்பதால் அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. பழைய சம்பவங்களை தந்தையாரிடம் பேசிக்கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கடின உழைப்பை அதிகாரிகள் புரிந்து கொள்வார்கள்.

மூலம்

உங்கள் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் தனத்தாரையில் செல்வதால் மனஇறுக்கம் விலகும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் நிலவி வந்த நிழல் யுத்தம் நீங்கும். சுக்ரன் உங்கள் நட்சத்திரத்திலேயே செல்வதால் செல்போன், கிரெடிட் கார்டு தொலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெருமைக்காக செலவுகள் செய்து கொண்டிருக்க வேண்டாம். வாகனம் செலவு வைக்கும். சனியும், ராகுவும் சாதகமாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. பழைய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். அனுஜென்மத் தாரையில் கேது செல்வதால் அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். கோபத்தால் சில வாய்ப்புகளை இழப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். எதிர்த்த பங்குதாரர் அடங்குவார். உத்தியோகத்தில் உங்களைப் பற்றிய இமேஜ் ஒருபடி உயரும்.

பூராடம்

உங்களுக்கு அதிநட்புத் தாரையில் சுக்ரன் செல்வதால் பணத்தட்டுப்பாடு குறையும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். சகோதரன் வகையில் அலைச்சல், செலவுகள் அதிகமாகும். கேது சாதகமாக இருப்பதால் ஆன்மிகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், வேலை கிடைக்கும். கண்டும் காணாமல் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். சனியும், ராகுவும் சாதகமாக இல்லாததால் புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். நயமாகப் பேசுகிறார்கள் என்று சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

உத்திராடம்

பாவ கிரகங்கள் சாதகமாக இருப்பதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்கள் உதவுவார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கைப் பெறுவீர்கள். உங்கள் நட்சத்திர நாயகன் சூரியன் பலவீனமாக இருப்பதால் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால் சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் மனம் புண்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். போட்டிகள் அதிகம் இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

திருவோணம்

உங்கள் யோகாதிபதி புதன் தனத்தாரையில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். உறவினர், நண்பர்களில் உண்மையானவர்களை உணர்வீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். குரு 6-ல் மறைந்திருப்பதால் வீண் சந்தேகங்கள் தலைதூக்கும். என்றாலும் உங்கள் நட்சத்திரத்திற்கு சுகத்தாரையில் செல்வதால் குடும்ப ஒற்றுமை பாதிக்காது. ராசிக்கு 8-ல் செவ்வாய் நிற்பதால் முன்கோபத்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சகோதரங்களுடன் சண்டை வரும். என்றாலும் அதிநட்புத் தாரையில் செவ்வாய் செல்வதால் உங்கள் ரசனைக்கேற்ப புறநகரில் இடம் அமையும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். வேலையாட்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்துவீர்கள்.

அவிட்டம்

உங்கள் ராசிநாதன் சனிபகவான் உங்களுக்கு தனத்தாரையில் செல்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த வகையில் தாமதமானலும் எதிர்பாராத வகையில் பணம் வந்து சமாளிப்பீர்கள். சுக்ரன் சாதகமாக செல்வதால், பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். குரு சாதகமாக இல்லை. எனவே மற்றவர்களை எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வங்கிக் காசோலையை பயன்படுத்துவதற்கு முன்பாக சேமிப்புக் கணக்கில் பணம் இருக்கிறதா என பார்த்துக் கொள்வது நல்லது. தங்க நகைகளை கவனமாக கையாளுங்கள். கேது சாதகமாக இருப்பதால் உங்களின் பலவீனத்தை மாற்றிக்கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள்.

சதயம்

சனியும், ராகுவும் உங்களை சங்கடப்படுத்தினாலும் குருவும், செவ்வாயும் நேசக்கரம் நீட்டுவதால் பணம் வரும். ராசிநாதன் பலவீனமாக இருப்பதால் இனந்தெரியாத மனக்கவலைகளும், எதிர்காலம் பற்றிய அச்சமும் வந்து விலகும். பூர்வீகச் சொத்தில் மராமத்து வேலைகள் பார்ப்பீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே... நல்ல பதில் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். கேது பகைத் தாரையில் செல்வதால் மனஉளைச்சல் ஏற்படும். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள். சில நாட்கள் தூக்கம் குறையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

பூரட்டாதி

சுக்ரனும், சனியும் சாதகமாக இருப்பதால் அடிமனதிலிருந்த பயம் விலகும். எதிர்பார்த்த உதவிகள் பிரபலங்களிடமிருந்து கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பழைய கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். ஷேர் மூலம் பணம் வரும். கேது சாதகமாக இருப்பதால் தைரியம் கூடும். வீரியத்தை விட காரியம்தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். எதிர்வீட்டாருடன் இருந்த சச்சரவு ஓயும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வங்கிக் கடன் தாமதமாகக் கிடைக்கும். நீண்ட நாட்களாகச் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி

சூரியன் 8-ல் மறைந்து சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். விண்ணப்பித்து காத்திருந்த பாஸ்போர்ட், ரேஷன் கார்டு வந்து சேரும். செவ்வாய் முழு பலத்துடன் நிற்பதால் உங்கள் ரசனைக்கேற்ப சொத்து அமையும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். சுக்ரன் பலவீனமாக இருப்பதால் கணவன்-மனைவிக்குள் வீண் விவாதங்கள், வாகனப் பழுது வந்து நீங்கும். உங்கள் ராசிக்கு அஷ்டமத்துச் சனி தொடர்வதால் எதிலும் நம்பிக்கையின்மை, மனஅமைதியின்மை வந்து செல்லும். வியாபாரத்தில் அதிகம் உழைக்க வேண்டி வரும். வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள்.

ரேவதி

கேது உங்களுக்கு தனத்தாரையில் செல்வதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். நீண்ட நெடுநாட்களாக தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு அஷ்டமத்துச் சனி தொடர்வதால், சில இடங்களில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. செவ்வாய் சாதகமாக இல்லாததால் சகோதர வகையில் பிணக்குகள், சொத்துப் பிரச்னைகள், தந்தைக்கு மருத்துவச் செலவுகள், வீண் குழப்பங்கள் வந்து செல்லும். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். லாபம் சுமாராக இருக்கும். புதியவர்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள்.