Published:Updated:

பகை நீக்கும் தர்மராஜர் வழிபாடு

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-18 கே.குமார சிவாச்சாரியார்

பகை நீக்கும் தர்மராஜர் வழிபாடு

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-18 கே.குமார சிவாச்சாரியார்

Published:Updated:

வாழ்க்கையில் பலவிதமான ஏமாற்றங்களுக்கும் பகைவர்களின்  சூழ்ச்சிக்கும் ஆளாகும் அன்பர்கள், தங்களுடைய ஜாதகத்தில் 6-ம் பாவத்தில் பாவக்கிரகங்கள் உள்ளனவா என்று பார்த்து, அதற்கேற்ப இறைவழிபாடு செய்வது அவசியம். மறைமுகச் சத்ரு, நேரடிச் சத்ரு, திடீரென உருவாகும் சத்ரு என மூன்று வகையாகப் பகைவர்களை விவரிக்கிறது தந்திர சாஸ்திரம்.

எவருக்கெல்லாம் எதிரிகளால் தொல்லை வரும் என்பது குறித்து ஜோதிட நூல்கள் விளக்குகின்றன.

* 6-வது இடத்தில் குரு வக்ரகதியாகி, லக்னத்தில் சுபக்கிரஹங்கள் இருந்தால், தொழில் கூட்டணியில் எதிரிகள் உருவாவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* 12-ல் சனி அமர்ந்திருந்து, 6-ம் இடத்தில் ராகுவோ, கேதுவோ இருந்தால், கோர்ட்- வக்கீல் செலவும், எதிர்பாராத அவமானங்களும், எதிரிகள் தொல்லைகளும் ஏற்படும்.

பகை நீக்கும் தர்மராஜர் வழிபாடு

* 12-ல் செவ்வாய் அமர்ந்திருக்க, அவருடன் ஒரு பெண் கிரகம் கூடியிருந்தால், பெற்றவர்களுக்கு அவர்களின் மகள்களே எதிரிகளாக மாறும் நிலை உண்டாகும்.

* ஒருவரது ஜாதகத்தில் புதன் நீசமாகிவிட்டால், உறவினர்களே எதிரிகள் ஆவர்.

* ராகு 7-ல் அமர்ந்திருக்க, 6-ல் சுபர்கள் இருந்தால், கூட்டுத் தொழிலில் பிரச்னை ஏற்பட்டு, எதிரிகளால் பொருட்சேதம் ஏற்படலாம்.

* லக்னாதிபதி பலவீனமாகி அவரது தசை நடக்கும் காலங்களில், அரசுப் பணியில் இருக்கும் நண்பர்- உறவினர் மற்றும் திடீரென முளைக்கும் எதிரிகளால் மேற்படி ஜாதகர் வழக்குகளில் சிக்கித் தவிக்க நேரிடும்.

* 10-ம் வீட்டோன் 6, 8, 12-ம் வீடுகளில் குடியிருந்து, அங்கே பாவர் ஒருவர் பார்த்தால், பொது மக்களோடு விரோதம் ஏற்பட்டு, வெளிநாட்டில் தங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

* லாபாதிபன் 12-லும், பன்னிரண்டாம் அதிபதி 2-லும், இரண்டுக்கு உடையவன் பலம் குன்றியும் காணப்பட்டால் நட்பு வட்டத்தாலும், தொழில் கூட்டாளி வகையிலும் எதிரிகள் ஏற்பட்டு, சொத்துக்கள் சேதமாகும். எதிரிகளைப் பற்றி அறிய 6-ம் இடமே சொல்லப்பட்டாலும், லாபஸ்தானமும் ஆராயப்பட வேண்டும் என்கின்றன ஜோதிட விதிகள்.

* 4-ல் குரு அமர்ந்திருக்க, 6-ல் ஒரு பாவக் கிரகம் நீசமாகிவிட்டால், ஜாதகர் நல்ல மனிதராக வாழ்வார். இடையில் திடீரென்று எதிரிகள் வந்து நிம்மதியைக் கெடுத்துவிடுவர்.

பகை நீக்கும் தர்மராஜர் வழிபாடு

இதுபோன்ற குறைபாடுகளை நீக்கி, பகைவர் பயம் விலக்கி, நன்மை அளிக்கும் வழிபாடுதான் தர்மராஜர் தந்திர பூஜை.

தர்மராஜர் என்றால் யமதர்மன். அவர் தர்மத்தின் வழி நடப்பவர். தினமும் சந்தியாவந்தனம் செய்பவர்கள், தென்திசைக் கடவுளாக யமனை வழிபட்டு அர்க்கியம் விடுகின்றனர். யாகங்களின்போது, திக்பாலகர் என்ற முறையில் அவருக்கும் அவிர்பாகம் வழங்கி மரியாதை செய்கின்றனர். சக்தி வழிபாட்டைச் செய்து வரும் ஸ்ரீவித்யா உபாசகர்கள், யாகங்கள் நடத்தும்போது சித்ரகுப்தனுக்கும் யமனுக்கும் தனியாக அவிர்பாகத்தை இடுவதிலிருந்து தர்மராஜன் வழிபாடு எல்லா காலங்களிலும் நடைபெற்றதை அறியமுடிகிறது.

எதிரிகளை விலக்குதல், சனி கிரக தோஷநிவர்த்தி போன்றவற்றுக்குச் சமய சஞ்ஜீவியாகத் திகழ்கிறது தர்மராஜா மந்திரங்கள். மேலும் மரண பயம், நரக வாசம், பித்ரு சாபம் ஆகியவற்றை விலக்கவும் இந்த பூஜை பயன்படுகிறது.

'வலது கையில் தண்டம் தாங்கி இருப்பவரும், மேகத்தின் நிறத்தை உடையவரும், ஆபரணங்களை உடலில் தரித்தவரும், பெரிய உடற்கட்டு உடையவரும், எருமை வாகனத்தில் ஏறுபவரும், ஆயிரக்கணக்கான குதிரைகளின் தலைவரும் ஆகிய தர்மராஜரை வணங்குவோம்’ என்கிறது யமதர்மனுக்கான தியான துதி. அவர் பெயரால் அஸ்திர மந்திரமும் உண்டு. யமதர்ம மந்திரத்தைத் தனியாக ஜபிப்பது கூடாது; சித்ரகுப்த மந்திரத்துடன் சேர்த்தே ஜபித்தல் வேண்டும்.

பிரயோக முறை: சனிக்கிழமை அன்று மாலையில், கறுப்பு எள்ளை கறுப்புத் துணியில் (எலுமிச்சைப் பழம் அளவுக்கு) சிறு முடிப்பாகக் கட்டி, மூன்று அகல் விளக்குகளில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றிவைக்கவும். அடுத்து, கீழ்க்காணும் சித்ரகுப்த மந்திரத்தை 32 முறை ஜபிக்க வேண்டும்.

ஓம் நமோ விசித்ராய தர்ம லோகாய

        யமவாசிகா அதிகாரிணே

யமலவர-யூம் ஜன்ம ஸம்பத்

        ப்ரளயம் சுதயகதய நம:

பிறகு, யமதர்மருக்கும் 32 முறை அஸ்திர மந்திரம் ஜபிக்கவும்,

பகை நீக்கும் தர்மராஜர் வழிபாடு

யமதர்மராஜர் அஸ்திர மந்திரம்:

ஓம் பரம் ம்ருத்யோ அனுபரேஹி

          பந்தாம் யஸ்தே

ஸ்வ இதரோ தேவயானாத்

        சக்ஷிரஸ்மதே ச்ருண்வதே

தே ப்ரவீமிமா ந ப்ரஜா ரீரிக்ஷே£

            மோத வீரான்:

மந்திரம் ஜபித்து முடித்ததும், சங்கு மலர்களால் புஷ்பாஞ்சலி செய்து, எள் அன்னம் படைத்து ஆரத்தி செய்தல் வேண்டும்.

- வழிபடுவோம்...

ஏற்றங்கள் தரும் யமாஷ்டகம்

பகை நீக்கும் தர்மராஜர் வழிபாடு

சனி பகவான் வழிபாட்டில், யமதர்மன் வழிபாடும் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஒருவரது வாழ்நாளில் சனி தசை நடக்கும்போதும், ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி பிடித்து வாட்டும்போதும், யம தீபம் ஏற்றி வைத்து யமாஷ்டகம் படித்து வழிபட, கெடுதல்கள் குறைந்து நன்மைகள் பெருகும். சனி பகவானின் அதிதேவதையான யமதர்மன், தடைகளையும் எதிரிகளையும் விலக்கி, நலம் விளைவிப்பார்.

தன் கணவன் சத்தியவானைக் கவர்ந்து சென்ற யமதர்மராஜனிடம் வாதம் செய்த சாவித்திரிதேவி அருளியதே இந்த யமாஷ்டகம்.

தபஸா தர்ம மாராத்ய புஷ்கரே பாஸ்கர; புரா;

தர்மம் சூர்யா சுதம் ப்ராப தர்மராஜம் நமாம்யஹம்

ஸமதா ஸர்வ பூதேஷூ யஸ்ய சர்வஸ்ய சாக்ஷிண:

அதோயந்நாம சமகம் இதிதம் ப்ரணமாம்யஹம்

யேநாங்தங்ச க்ருதோ விஸ்வே சர்வேஷாம் ஜுலினாம்

கர்மாதி ரூபம் காலேன தம் க்ருதாந்தம் நமாம்யஹம்

பிபர்த்தி தண்டாய பாபினாம் சுத்தி ஹேதவே

நமாமி தம் தண்டதரம் யச்சாஸ்தா சர்வஜுவினாம்

விச்வம் ஸகலயத்யேவ யஸ்சர்வேஷீச சந்ததம்

அதீவ துர்ணீ வார்யம்ச தம் காலம் ப்ரணமாம்யஹம்

ஸ்வாத மாராம்ச சர்வக்கோ மித்ரம்

புண்ய க்ருதோம் பவேத்

பாபிணாம் க்லேசதோ யஸ்தம்

புண்ய மித்ரம் நமாம்யஹம்

யஜ்ஜன்ம ப்ரஹ்மணம் சேந ஜ்வலந்தம் ப்ரஹ்ம தேஜஸா

யோத்யாய தீபரம் ப்ரும்ம தமீசம் ப்ரணமாம்யஹம்

யமாஷ்டக மிதம் நித்யம் ப்ராத: உத்தாய ய:படேத்

யமாத் தஸ்ய பயம் நாஸ்தி சர்வபாபாத் விமுச்யதே

யமாஷ்டகம் சம்பூர்ணம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism