Published:Updated:

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

சிவ... சிவ... சிவ...

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

சிவ... சிவ... சிவ...

Published:Updated:
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்
##~##

ஸ்ரீஆதிசங்கரர் அருளிய ஒப்பற்ற ஸ்தோத்திரங்களில் குறிப்பிடத்தக்கது, சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம். நான்கு பாதங்கள் கொண்ட ஒவ்வொரு ஸ்லோகத்திலும், வேத மத்தியில் சிறந்து விளங்கும் பஞ்சாக்ஷர மஹாமந்திரத்தை ஒவ்வொரு பாதத்திலும் வைத்து நக்ஷத்ர மாலையெனும் 27 சுலோகங்களாக அருளியுள்ளார் பகவத் பாதாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிகப் பரிசுத்தமான பஞ்சாக்ஷரத்தைச் சொல்பவரும், ஸ்ரீபரமேஸ்வரனை மனத்தில் தியானிப்பவரும் மறுபிறவி அடையமாட்டார்கள் என்பது ஞானநூல்களின் கருத்து. அப்படியான பஞ்சாக்ஷரத்தையே வைத்து ஸ்லோகமாய் தந்திருக்கும் ஸ்ரீஆதிசங்கரரின் இந்தத் துதியைப் படிப்பவர்கள் இம்மைப் பயனையும், பேரின்பத்தையும் நிச்சயம் அடைவார்கள். மேலும், 27 நட்சத்திரங்களில் எதில் பிறந்திருந்தாலும், இந்த ஸ்லோகங்கள் எல்லா நட்சத்திரக்காரர்களும் படித்து, சிவனருள் பெற ஏதுவாக அமைந்திருப்பது சிறப்பம்சம்.

அற்புதமான இந்த ஸ்லோகங்களுக்கு பெரியோர்கள் பலரும் விளக்கவுரை தந்திருக்கிறார்கள். அந்த வகையில், ஸ்ரீசங்கர பக்த ஜன சபாவின் 1966-ம் ஆண்டு ஸ்ரீசங்கர ஜயந்தி மலரில் வெளியான  

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திர  ஸ்லோகங்களும், அதற்கு பி.என்.நாராயண சாஸ்திரி எழுதிய விளக்கங்களும் இங்கே உங்களுக்காக...

 அசுவினி

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

ஸ்ரீமதாத்மநே குணைகஸிந்தவே நம:சிவாய

தாமலேசதூத கோகபந்தவே நம:சிவாய

நாம சேஷி தாநமத் பவாந்தவே நம:சிவாய

பாமரேதர ப்ரதாநபந்தவே நம:சிவாய

கருத்து: ஐஸ்வர்யம் மிகுந்தவரும் குணக்கடலும், தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியைத் தோற்கடிப்பவரும், தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு பந்துவாகவும்,  ஞானிகளுக்கு பிரதான பந்துவாகவும் விளங்கும் சிவபெருமானுக்கு நமஸ்காரம் (இது நான்கு முறை சொல்லப்படுகிறது).

 பரணி

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

காலபீத விப்ரபால பாலதே நம:சிவாய

சூலபின்ன துஷ்டதக்ஷ பாலதே நம:சிவாய

மூலகாரணாய கால காலதே நம:சிவாய

பாலயதுநா தயலவாலதே நம:சிவாய (2)

கருத்து: யமனுக்குப் பயந்திருந்த அந்தணக் குழந்தையான மார்க்கண்டேயனைக் காத்தருளியவரும், வீரபத்திரமூர்த்தியாக அவதரித்து தட்சனைக் கொன்றவரும், அனைத்திற்கும் மூல காரணமானவரும், காலத்துக்கு மேம்பட்டவரும், கருணைக்கு இருப்பிடமுமாக விளங்கும் உமக்கு வணக்கம். இப்போது என்னைக் காப்பாற்றும்.

 கிருத்திகை

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

இஷ்டவஸ்து முக்யதாந ஹேதவே நம:சிவாய

துஷ்டதைத்யவம்ச தூமகேதவே நம:சிவாய

ஸ்ருஷ்டிரக்ஷணாய தர்மஸேதவே நம:சிவாய

அஷ்டமூர்த்தயே வ்ருஷேந்த்ரகேதவே நம:சிவாய (3)

கருத்து: இஷ்டப்பட்ட சிறந்ததான பொருளைக் கொடுப்பதில் காரணமானவரும், முப்புரத்திலுள்ள அரக்கர் வம்சத்துக்கு தூமகேதுவானவரும், படைக்கும் தொழில் நடப்பதற்கான தர்மத்தைக் காப்பவரும், பூமி, ஆகாயம், ஜலம், தேஜஸ், காற்று, சூரியன், சந்திரன், புருஷன் ஆகிய எட்டையும் தன் உருவாய்க் கொண்டவரும், ரிஷபக் கொடியோனும் ஆகிய சிவனுக்கு வணக்கம்.

 ரோகிணி

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

ஆபதத்ரிபேத டங்கஹஸ்த தே நம:சிவாய

பாபஹாரி திவ்யஸிந்து மஸ்த தே நம:சிவாய

பாபஹாரிணே லஸந்நமஸ்த தே நம:சிவாய

சாபதோஷகண்டந ப்ரசஸ்த தே நம:சிவாய (4)

கருத்து: மலை போன்ற ஆபத்துகளைப் போக்கடிக்கும் மழு ஆயுதத்தைக் கையில் வைத்திருப்பவரும், ஜனங்களின் பாவங்களைப் போக்கும் தேவ நதியான கங்கையை முடியில் உடையவரும், பாபங்களைப் போக்குபவரும், சாபத்தினால் ஏற்படும் தோஷங்களைக் கண்டிக்கிற சிவமுமாகிய உமக்கு வணக்கம்.

 மிருகசீரிடம்

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

 வ்யோமகேச திவ்யபவ்ய ரூபதே நம:சிவாய

ஹேமமேதிநீ தரேந்த்ர சாபதே நம:சிவாய

நாமமாத்ர தக்த பாபதே நம:சிவாய

காமநைகதாநஹ்ருத்துராபதே நம:சிவாய

கருத்து: ஆகாயத்தைக் கூந்தலாக உடையவரும், ஒளிரும் மங்கள உருவத்தை உடையவரும், 'சிவ’ எனும் பெயரைச் சொல்வதாலேயே பாபக்கூட்டங்களை எரிப்பவரும், ஆசை நிறைந்த உள்ளம் உடையவருக்கு அடையமுடியாதவருமாகிய சிவபெருமானுக்கு வணக்கம்.

 திருவாதிரை

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

 ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம:சிவாய

ஜிம்ம கேந்த்ரகுண்ட லப்ரஸித்ததே நம:சிவாய

ப்ரம்மணே ப்ரணீத வேதபத்ததே நம:சிவாய

ஜிம்மகால தேஹதத்த பத்ததே நம:சிவாய (6)

கருத்து: ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்கள் கொண்டவரும், பெரிய பாம்பினை குண்டலமாகக் கொண்டவரும், வேதங்களின் முறையை வகுத்துக் கொடுத்த பிரும்ம உருவமானவரும், யமனுக்கு உயிர் கொடுத்தவருமான சிவனுக்கு வணக்கம்.

 புனர்பூசம்

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

காமநாசநாய சுத்தகர்மணே நம:சிவாய

ஸாமகாந ஜாயமாந சர்மணே நம:சிவாய

ஹேமகாந்தி சாகசக்ய வர்மணே நம:சிவாய

ஸாமஜாஸுராங்கலப்த சர்மணே நம:சிவாய

கருத்து: தன்னலம் கருதாது செய்யப்படும் கர்மாவை ஏற்றுக்கொண்டு ஆசையைப் போக்கடிப்பவரும், ஸாம வேதத்தைப் பாடுவதால் சௌக்கியத்தைக் கொடுப்பவரும், பொன்னிறமான கவசத்தை உடையவரும், பார்வதிதேவியின் ஸம்பந்தத்தினால் சௌக்கியமுற்றவருமான சிவனுக்கு வணக்கம்.

 பூசம்

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

ஜந்ம, ம்ருத்ய கோரதுக்க ஹாரிணே நம:சிவாய

சின்மயைகரூப தேஹதாரிணே நம:சிவாய

மன்மநோரதாவ பூர்த்தி காரிணே நம:சிவாய

ஸன் மநோகதாய காம வைரிணே நம:சிவாய

கருத்து: பிறப்பு- இறப்பு எனும் மிகக் கடுமையான பிணியைப் போக்கடிப்பவரும், ஞானத்தையே ஒரே உருவமாயுடையவரும், என் மனத்தின் இஷ்டத்தை நிறைவேற்றுகிறவரும், ஸாதுக்களின் மனத்தில் உள்ளவரும், காமனுக்கு சத்ருவுமான சிவனுக்கு வணக்கம்.

 ஆயில்யம்

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம:சிவாய

தக்ஷபாணி சோபி காஞ்சநாலவே நம:சிவாய

பக்ஷிராஜ வாஹ ஹ்ருச்சயாலவே நம:சிவாய

அக்ஷிபால வேதபூததாலவே நம:சிவாய

கருத்து: யக்ஷர்களின் அரசனான குபேரனுக்கு நெருங்கிய தோழரும், தயையுடையவரும், பொன் மயமான வில்லை வலக் கரத்தில் கொண்டவரும், கருட வாகனம் உள்ள ஸ்ரீமகாவிஷ்ணுவின் இருதய தாபத்தைப் போக்குபவரும், நெற்றிக்கண்ணரும், மறைகளால் போற்றப்பட்ட திருவடிகளை உடையவருமான சிவபெருமானுக்கு வணக்கம்.

 நட்சத்திரத் தேவதைகளின் படங்கள் இங்கே தரிசனத்துக்காகவே தவிர, அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தான் அந்ததந்த ஸ்லோகங்களைப் படிக்கவேண்டும் என்பதில்லை. அனைத்து நட்சத்திரக்காரர்களும் அத்தனை ஸ்லோகங்களையும் படிப்பதே சரி!

 (இன்னும் வரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism