Published:Updated:

லாபம்

லாபம்

லாபம்

லாபம்

Published:Updated:
லாபம்

ன்ன இது தலைப்பு என்கிறீர்களா? தோட்டம், துறவு, நகை நட்டு எல்லாம் விற்றுக் காசாக்கி, தொழிலில் முதலீடு செய்திருக்கும்  ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது லாபம்தானே? அதனால்தான் பிள்ளையார் சுழியோடு லாபம் என்று எழுதி, வியாபாரக் கணக்கை துவங்குவார்கள்.

 இன்றைக்கு, 'ஆஹோ ஓஹோ என்றில்லாவிட்டாலும், கையைக் கடிக்காத லாபம் வந்தாலும் போதும்’ என்று நினைப்பவர்களே அதிகம். ஆனால், அவர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு லாபம் இரட்டிப்பானால்? ஒரே வருடத்தில் ஒன்றுக்கு மூன்றாக புதிய கிளைகள் துவக்கும் அளவுக்கு வியாபாரம் பெருகினால்... அவர்களின் நிலை எப்படியிருக்கும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அட இதெல்லாம் சாத்தியமா? குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்ததுபோல், சட்டுன்னு ஒருமாதம் உயரும்; அடுத்த மாதமே சட்டுன்னு படுத்துடும்’ என்று நீங்கள் பதில் தந்தால் அது தவறு. விதி கால் பங்கு, மதி முக்கால் பங்கு என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள். பூர்வ ஜென்ம வினைக்கேற்ப இப்பிறவியில் நமக்கு அமைந்திருக்கும் ஜாதக நிலையை ஆராய்ந்து, 'நமக்குத் தொழில் துவங்கும் யோகம் உண்டா? உண்டு எனில் என்ன தொழில் ஆரம்பிக்கலாம்? தனியாகவா, கூட்டுத்தொழிலாகச் செய்யலாமா?’ என்பதையெல்லாம் ஆராய்ந்து தெளிவாகி இறங்கினால், எல்லாமும் ஜெயம்தான். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

லாபம்

நாமும் சற்று ஆராய்வோமா?

உங்கள் வியாபாரம் செழிப்பாக இருக்கிறதா? நீங்களே எதிர்பாராத அளவுக்கு லாபம் பன்மடங்காகி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறதா? எனில், உங்கள் ஜாதகத்தில் வியாபாரகாரகனான புதன் இருக்கும் இடத்துக்கு, தேவகுருவும் தனகாரகனுமான வியாழனின் பார்வை பரிபூரணமாக உள்ளது. குருவருள் இருக்க திருவருளும் சேரும்; உங்கள் வியாபாரம் இன்னும் இன்னும் வளர்ந்தோங்கும்.

சரி! வேறு என்னென்ன கிரக அமைப்புகள் எல்லாம் இப்படியான யோகத்தைத் தரும் என்று தெரிந்துகொள்வோமா?

ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் வியா பாரத்தில் பன்மடங்கு லாபம் பெறுவார்.

ராசியில் புதன் இருக்கும் வீடு கன்னியாகி, நவாம்சத்திலும் கன்னியா ராசியில் புதன் இருப்பார் எனில், அவர் வர்க்கோத்தமம் பெறுவார். இதனாலும், குறிப்பிட்ட ஜாதகர் வியாபாரத்தில் ஈடுபட்டு பன்மடங்கு லாபம் பெற வாய்ப்பு உண்டாகும்.  இந்த புதன் ராசியில் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கதம் ஆகாமல் இருக்கவேண்டும் என்பது விதி.

லாபம்

தனம் மற்றும் லாபாதிபதிகள்  1, 4, 7, 10 அல்லது 5, 9 ஆகிய இடங்களில் உச்சமாகவோ, ஆட்சியாகவோ வலுத்திருக்க, புதன் பலமும் கூடியிருக்குமானால், குறிப்பிட்ட அமைப்புள்ள ஜாதகருக்கு வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் கிடைக்கும். அஷ்ட வர்க்கப்படி புதாஷ்டக வர்க்கத்தில், புதன் இருக்கும் இடத்தில் அதிக பரல்கள் இருக்கும் என்றால், புதன் வலுத்திருக்கிறார் எனச் சொல்லலாம். இப்படி, அதிக பரல்கள் பெற்றிருக்கும் புதன், குறிப்பிட்ட ஜாதகருக்கு வியாபார ரீதியாக அதிக லாபத்தைத் தருவார்.

சர்வாஷ்டக வர்க்கத்தில் 2 மற்றும் 11-ம் இடங்களில் 30-க்கு மேல் பரல்கள் இருக்குமானால், அந்த ஜாதகர் வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் பெறுவார்.

புதனுக்கு மிதுனமும் கன்னியும் பலம் மிகுந்த வீடுகளாகும். இந்த ராசிகளில் ஏதேனும் ஒன்றில்  புதன் இருக்க, புதனுக்குச் சுபக்கிரகச் சேர்க்கையோ பார்வையோ ஏற்படும்போது, ஜாதகருக்கு வியாபார நுணுக்கங்கள் தெரியவரும். அதன்மூலம் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பார்.  லாபமும் பன்மடங்கு உயரும்.

தொழில் ஸ்தானம் என்பது 10-ஆம் இடம் ஆகும்.  லக்னத்துக்கோ, சந்திர ராசிக்கோ, சூரிய ராசிக்கோ 10-ல் புதன் இருந்தால், மனத்தில் வியாபார சிந்தனை உருவாகும். 10-ல் புதன் வலுப்பெற்றிருந்தால், வியாபாரம் பிடித்த தொழிலாக அமையும். அதன் மூலம் அதிக லாபமும் பெறமுடியும்.

இப்படியான கணிப்பில் லக்னத்துக்கே முதலிடம் தரப்பட வேண்டும். அடுத்து சந்திர ராசி. அதன் பிறகு சூரிய ராசி. லக்னம் வலுத்திருந்தால் லக்னப்படி பார்ப்பதே சிறப்பாகும். சில ஜாதகத்தில் லக்னத்தைவிட சந்திர லக்னம் அதிக பலம் பெற்றிருக்கும். அப்போது சந்திர லக்னத்தை வைத்துப் பார்க்கவேண்டும்.

தராசு என்ற துலா லக்னத்தில் பிறந்து, பாக்கியாதிபதி புதன் லக்னத்திலோ, 9 அல்லது 10-ல் பலம் பெற்றிருந்தால், குறிப்பிட்ட ஜாதகர் வியாபாரத்தில் ஈடுபட்டு அதிக லாபம் பெறுவார். தான் பெற்ற லாபத்தை அறப்பணிகளுக்காகவும் செலவிடுவார். காரணம், இங்கு பாக்கியாதிபதியே விரயாதிபதியாகவும் ஆகிறார்.

லாபம்

தனுசு லக்னத்தில் பிறந்து, தொழில் ஸ்தானாதிபதியான புதன் 10-ல் வலுத்திருந்து, லக்னாதிபதி குருவின் பார்வையைப் பெற்றால், வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் பெற வாய்ப்பு உண்டாகும்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதியான புதன் பகவானே தொழில் ஸ்தானாதிபதியும் ஆவார். அவர் அஸ்தங்கதம், நீச நிலை, பாபக் கிரகச் சேர்க்கை பெறாமல், கன்னி அல்லது மிதுனத்தில் இருந்தால், குறிப்பிட்ட ஜாதகர் வியாபாரத்தில் திறம்பட ஈடுபட்டு அதிக லாபம் பெறுவார்.

2 அல்லது 11-ம் வீட்டு அதிபதியுடன் புதன் கூடி, தனகாரகனான குரு பகவான் வலுத்து, புதனைப் பார்க்கும் நிலை அமையுமானால், ஜாதகர் வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவார்.

##~##

புதன் 5-ல் பலம் பெற்றிருக்க, குருவின் தொடர்பும் 10-ம் வீட்டோனின் தொடர்பும் ஏற்படுமானால், அந்த ஜாதகர் பரம்பரை யாகச் செய்து வரும் வியாபாரத்தில் ஈடுபட்டு, பன்மடங்கு லாபம் பெறுவார்.

குறிப்பாக வியாபாரகாரகனான புதனுக்குச் சுப ஆதிபத்தியம் ஏற்பட்டு, சுபக் கிரகங்களின் சேர்க்கை, பார்வை பெற்று,  தொழில் ஸ்தானத்தோடும்

(10-ம் வீடு), தொழில் ஸ்தானாதிபதியோடும் (10-ம் வீட்டோன்) தொடர்பு கொண்டு, பலம் பெற்றிருந்தால், வியாபாரத்தில் ஈடுபட்டு, பன்மடங்கு லாபம் பெற இயற்கையாகவே வாய்ப்பு உண்டாகும்.

புதன் பலம் இல்லாதவர்கள் வியாபாரத்தில் ஈடுபடாமல் இருப்பது அவசியம். அப்படி ஈடுபட்டால் நஷ்டம் அடைய நேரிடும். புதன் பலம் உள்ளவர்கள் புதனுக்கு அதிதேவதையான திருமாலை புதன்கிழமைதோறும் வழிபடுவதன் மூலம் வியாபாரத்தில் அதிவேகமாக முன்னேறலாம். அதிக லாபமும் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism