Published:Updated:

ஆரூடம் அறிவோம்:18

நன்மை செய்யும் நல்ல நாட்கள்! சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமிஜோதிட புராணம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

ந்தக் காரியத்தையும் சரியான நேரத்தில், சரியான முறையில் தொடங்கினால், அது பாதியளவு நல்ல முறையில் முடிந்த மாதிரிதான்! இதை ஆங்கிலத்தில், well begin is half done என்று சொல்வார்கள். அதனால்தான் ஜோதிட சாஸ்திரம் எந்தெந்த காரியங்களை, எந்தெந்த நாட்களில் செய்ய வேண்டும் என்பதை வரையறுத்துக் காட்டியுள்ளது.

பொதுவாக, நல்ல காரியங்கள் செய்வதற்குக் காலமும் நேரமும், நாளும் நட்சத்திரமும் சரியாக இருக்கவேண்டும். பிறப்பு முதல் இறுதிக் காலம் வரை, மனிதனின் வாழ்வில் எத்தனையோ சுப காரியங்கள் நடைபெறுகின்றன. குழந்தையாய் இருக்கும்போது புண்ணியாவஜனம், காப்பு அணிவித்தல், தொட்டிலில் இடுதல், பெயரிடுதல், காது குத்துதல், அக்ஷராப்பியாசம், உபநயனம் (ஆண்களுக்கு), மஞ்சள் நீராட்டு விழா - (பெண்களுக்கு), திருமணம், சீமந்தம்... இப்படி எத்தனையோ!

இவை தவிர, பிறந்த நாட்கள், 60-ம் கல்யாணம் (சஷ்டியப்த பூர்த்தி), 80-ம் பிறந்த நாள்

ஆரூடம் அறிவோம்:18

(சதாபிஷேகம்) ஆகிய சுப காரியங்களையும் நடத்தவேண்டியுள்ளது. மேலும், மனை வாங்க, வீடு கட்ட, கிரகப்பிரவேசம் செய்ய, வாகனங்கள் வாங்க, பயணம் மேற்கொள்ள என சில நல்ல காரியங்கள் செய்யவும் நாளும் நட்சத்திரமும் பார்க்கவேண்டியுள்ளது.

நோய் குணமாவதற்கும் நல்ல நாளும் வேளையும் பார்த்துதான் மருந்துண்ண வேண்டும் என்கிறது சாஸ்திரம். விவசாயம் செய்வோர் ஏர் பூட்டவும், விதை விதைக்கவும், உரம் இடவும், அறுவடை செய்யவும், கால்நடைகள் வாங்கவும் நல்ல நாள் பார்க்கவேண்டும் என்பது நமது சம்பிரதாயம்.

நல்ல நாள் பார்த்துச் செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும், அவற்றைச் சமாளித்து நினைத்ததை முடிக்கும் வாய்ப்பும் வல்லமையும், நல்ல நாள் பார்ப்பதால் நமக்குக் கிடைக்கிறது.

ஆரூடம் அறிவோம்:18

நல்ல நாள், நட்சத்திரம், சுபமுகூர்த்தம் பார்த்துச் செய்யும் காரியங்களிலேயே எத்தனையோ பிரச்னைகள் ஏற்படுகின்றன என்றால், எதுவுமே பார்க்காமல் செய்யும் காரியங்கள் எவ்வாறு நடக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

நாள்- நட்சத்திரம் பார்த்துச் சுபகாரியங்கள் செய்வதற்கு அவரவர் குடும்ப ஜோதிடர்கள், வைதீக காரியங்கள் செய்யும் பெரியவர்கள், குடும்பத்தில் சாஸ்திரம் தெரிந்த பெரியவர்கள் ஆகியோரைக் கலந்தாலோசிக்கலாம். இதுபற்றிய விவரங்களை பஞ்சாங்கங்களில் இருந்தும் அறிந்துகொள்ளலாம்.

ஆரூடம் அறிவோம்:18

நாள்- நட்சத்திரம் பார்க்கும் விவரங்களையும், எந்தெந்த நாட்களில் என்னென்ன சுபகாரியங்களைச் செய்யலாம் என்பது குறித்த விவரங்களையும் இங்கே சுருக்கமாகத் தந்துள்ளோம்.

இந்த அட்டவணைத் தகவல்கள், வாசகர்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமையும். அதேநேரம், சில சம்பவங்கள் எதிர்பாராமல் ஏற்படுவது உண்டு. திடீர்ப் பயணங்கள், எதிர்பாராமல் ஏற்படும் உடற்பிணிகளின் காரணமாக மருத்துவம் பார்க்கவேண்டிய தருணங்களில், சாஸ்திரங்களில் குறிப்பிட்ட நாள்- நட்சத்திரம் பார்த்துச் செய்வதெல்லாம் கடினம். அப்போது, தெய்வங்களை வழிபட்டுப் பிரார்த்தனை செய்வதுடன், கூடியமட்டில் ராகுகாலம் முதலான வேளைகளைத் தவிர்த்துச் செயல்படலாம்.

ஆரூடம் அறிவோம்:18
ஆரூடம் அறிவோம்:18

சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர்கள், சட்டம் ஒழுங்கைக் கண்காணித்து நடத்தும் காவல்துறையினர், சட்ட நிபுணர்கள் போன்றவர்களுக்குச் சட்டப்புத்தகம் மிகவும் அவசியம். அதன் கோட்பாடுகள் மிகவும் முக்கியம். மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு அந்தந்த மொழியின் இலக்கண- இலக்கிய நூல்களும், அகராதியும் மிகவும் அவசியம். அதுபோலவே சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து நல்ல காரியங்களைச் செய்து நல்ல பலன்களை அடைய விரும்புகிறவர்களுக்குப் 'பஞ்சாங்கம்’ மிகவும் அவசியம். அதில் குறிப்பிட்ட நல்ல நாள், நட்சத்திரம் பார்த்து, நல்ல காரியங்களைச் செய்தால், நிச்சயம் பலன் கிடைக்கும்.

ஜோதிடம் கற்றுக் கொண்டு, மற்றவர்களுக்கு நல்ல காரியங்களுக்கு நல்ல நாளைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறவர்கள், இந்த அட்டவணையின் முக்கியமான அம்சங்களை மனப்பாடம் செய்துகொள்ளலாம்; அல்லது, பஞ்சாங்கத்தைப் பார்த்துச் சொல்லலாம்.

பஞ்சாங்கத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டுதான் ஜோதிடர்கள் நல்ல நாள் குறிக்க வேண்டும். நாமாகவே பார்த்துக்கொள்ளவும் பஞ்சாங்கம் உதவும். ஆனால், அந்தந்தக் காரியத்துக்கு உரிய நல்ல நாள், நல்ல நேரம், நல்ல முகூர்த்தம் போன்றவற்றை ஜோதிடர்களைக் கலந்து ஆலோசித்துத் தெரிந்துகொள்வது நல்லது. வைதீக காரியங்களை நடத்தித் தரும் புரோகிதர்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு