Published:Updated:

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

பிரீமியம் ஸ்டோரி

ப்புயர்வு இல்லாத, அனைத்து நட்சத்திரக்காரர்களும் படித்து வழிபடுவதற்கு உகந்த சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரத்தின் முதல் ஒன்பது ஸ்லோகங்களையும், அதற்கான விளக்கங்களையும் சென்ற இதழில் பார்த்தோம். இந்த இதழில், அடுத்த ஒன்பது ஸ்லோகங்களும், அவற்றுக்கான விளக்கங்களும்.

மாத சிவராத்திரி, பிரதோஷ காலம் உட்பட சிவ வழிபாட்டுக்கு உகந்த புண்ணியமிகு தருணங்களில், ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரை வழிபட, நல்லன யாவும் கைகூடும்.

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

மகம்

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

தக்ஷஹஸ்த நிஷ்ட  ஜாதவேதஸே நம:சிவாய

அக்ஷராத்மநே நமத் பிடௌஜஸே நம:சிவாய

தீக்ஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம:சிவாய

உக்ஷராஜவாஹதே ஸதாம் கதே நம:சிவாய

பொருள்: வலது கையில் அக்னியை வைத்திருப்பவரும், 'அக்ஷரம்’ எனும் பரமாத்மாவைக் குறிக்கும் சொல்லுக்கு உரித்தானவரும், இந்திரனால் வணங்கப்பட்டவரும், சிவ பஞ்சாக்ஷர தீ¬க்ஷ பெற்றவர்களுக்கு ஆத்ம ஒளியைக் காட்டுபவரும், தர்ம ரூபமான காளையை வாகனமாக உடையவரும், சாதுக்களுக்கு நல்வழியை அருள்பவருமான சிவபெருமானுக்கு வணக்கம்.

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

பூரம்

ராஜதாசலேந்த்ரஸாநு வாஸிநே நம:சிவாய

ராஜமாநநித்யமந்த ஹாஸி நே நம:சிவாய

ராஜகோரகா வதம்ஸபாஸிநே நம:சிவாய

ராஜராஜமித்ரதா பரகாசிநே நம:சிவாய

பொருள்: வெள்ளி மலை என்று பெயர்பெற்ற கயிலையங்கிரியில் வசிப்பவரும், புன்சிரிப்புடன் கூடியவரும், ராஜஹம்ஸம் எனும் பட்சி மாதிரி சிறந்து விளங்குபவரும், குபேரனின் தோழன் என்பதை வெளிப்படுத்துபவருமான சிவனுக்கு வணக்கம்.

உத்திரம்

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

தீநமாநவாலி காமதேநவே நம:சிவாய

ஸ¨நபாண தாஹக்ருத் க்ருசாநவே நம:சிவாய

ஸ்வாநுராக பக்த ரத்நஸாநவே நம:சிவாய

தாநவாந்தகார சண்டபாநவே நம:சிவாய

பொருள்: ஏழைகளுக்குக் 'காமதேனு’ எனும் தேவலோகத்துப் பசுவை போன்றவரும், புஷ்பங்களை அம்பாக உடைய மன்மதனை எரித்த அக்னியானவரும், தன்னுடைய பக்தர்களுக்கு மேரு மலை போன்றவரும், அரக்கர் கூட்டமாகிய இருளுக்குக் கடுமையான கதிரவன் போன்றவருமான சிவபெருமானுக்கு வணக்கம்.

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

அஸ்தம்

ஸர்வமங்களாகுசாக்ர சாயிநே நம:சிவாய

ஸர்வதேவதாகணா திசாயிநே நம:சிவாய

பூர்வதேவ நாசஸம் விதாயிநே நம:சிவாய

ஸர்வமந்மநோஜபங்க தாயிநே நம:சிவாய

பொருள்: ஸர்வமங்களை எனப் பெயர் பெற்ற அம்பிகையுடன் இருப்பவரும், எல்லா தேவ கூட்டத்துக்கும் மேற்பட்டவரும், அரக்கர் குலத்தை வேரறுப்பவரும், எல்லோருடைய மனத்திலும் உண்டாகும் ஆசையை அகற்றுபவருமான சிவனுக்கு வணக்கம்.

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

சித்திரை

ஸ்தோப பக்திதோபி பக்த போஷிணே நம:சிவாய

மாகரந்தஸாரவர்ஷி பாஷிணே நம:சிவாய

ஏகபில்வ தாநதோபி தோஷிணே நம:சிவாய

நைகஜந்ம பாபஜால சோஷிணே நம:சிவாய

பொருள்: குறைந்த அளவு பக்தி செய்யும் பக்தர்களையும் வளர்ப்பவரும், குயில் மாதிரி பேச்சு உடையவரும், ஒரு வில்வத்தைக் கொடுத்தாலே மகிழ்ச்சி அடைபவரும், பல பிறவிகளில் செய்த பாபங்களை எரிப்பவருமான சிவனுக்கு வணக்கம்.

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

சுவாதி

ஸர்வஜீவரக்ஷணைகசீலிநே நம:சிவாய

பார்வதீப்ரியாய பக்தபாலிநே நம:சிவாய

துர்விதக்ததைத்ய ஸைன்யதாரிணே நம:சிவாய

சர்வரீ சதாரிணே கபாலிநே நம:சிவாய

பொருள்: எல்லாப் பிராணிகளையும் காப்பாற்றுவதில் கருத்துள்ளவரும், பார்வதி தேவிக்குப் பிரியமானவரும், பக்தர்களைக் காப்பவரும், தப்புக் காரியங்களில் ஈடுப்படும் அரக்கர் சைன்யத்தை அழிப்பவரும், சந்திரனை முடியில் உடையவரும், கபாலத்தைக் கையில் உடையவருமான சிவனுக்கு வணக்கம்.

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

விசாகம்

பாஹிமாமுமா மனோக்ஞதேஹதே நம:சிவாய

தேஹிமேவரம் ஸிதாத்ரிகேஹதே நம:சிவாய

மோஹதர்ஷி காமிநீஸமூஹதே நம:சிவாய

ஸ்வேஹிதப்ரஸன்ன காமதோஹதே நம:சிவாய

பொருள்: உமாதேவியின் மனத்துக்கு உகந்த சரீரத்தை உடையவரே, என்னைக் காப்பாற்றும். வெள்ளியங்கிரியில் இருப்பவரான ஈசனே, எனக்கு வரம் அருளும். மஹரிஷிகளின் மனைவிகளை மோகிக்கச் செய்தவரும், தன்னிடம் வேண்டியதைக் கொடுப்பவருமான சிவனுக்கு வணக்கம். (குறிப்பு: தாயுடன் கூடிய தகப்பனாகிய ஈஸ்வரனே பக்தர்களுக்கு மகிழ்ச்சியுடன் வேண்டியதைக் கொடுப்பார் என்பது விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது.)

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

அனுஷம்

மங்களப்ரதாய கோதுரங்கதே நம:சிவாய

கங்கயாதரங்கிதோத்தமாங்கதே நம:சிவாய

ஸங்கரப்ரவ்ருத்த வைரிபங்கதே நம:சிவாய

அங்கஜாரயே கரே குரங்கதே நம:சிவாய

பொருள்: மங்களத்தைச் செய்பவரும், ரிஷப வாகனத்தை உடையவரும், அலைமோதும் கங்கையை தலையில் உடையவரும், போரில் இறங்கிய சத்ருக்களை ஒழிப்பவரும், மன்மதனுக்கு சத்ருவும், கையில் மானை உடையவருமான சிவனுக்கு வணக்கம்.

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

கேட்டை

ஈஹிதேக்ஷண ப்ரதாநஹேதவே நம:சிவாய

ஆஹிதாக்நிபாலகோக்ஷகேதவே நம:சிவாய

தேஹகாந்திதூத ரௌப்யதாதவே நம:சிவாய

கேஹதுக்க புஞ்ஜதூமகேதவே நம:சிவாய

பொருள்: பக்தர்கள் வேண்டியதைக் கொடுப்பவரும், யாகம் செய்பவர்களைக் காப்பவரும், ரிஷபக் கொடியோனும், வெள்ளியைத் தோற்கடிக்கும் உடற்காந்தி (உடலில் ஒளியை) உடையவரும், வீட்டில் உண்டாகும் துயரங்களை எல்லாம் அடியோடு தொலைப்பவருமான சிவபெருமானுக்கு வணக்கம்.

நட்சத்திரத் தேவதைகளின் படங்கள் இங்கே தரிசனத்துக்காகவே தவிர, அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தான் அந்தந்த ஸ்லோகங்களைப் படிக்கவேண்டும் என்பதில்லை. அனைத்து நட்சத்திரக்காரர்களும் அத்தனை ஸ்லோகங்களையும் படிப்பதே சரி!

(இன்னும் வரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு