நல்ல மண வாழ்க்கை அமைய, திருமணப் பொருத்தங்கள் ஏன் பார்க்கவேண்டும், எப்படிப் பார்க்கவேண்டும் என்பது பற்றிப் பார்த்தோம். பொதுவாகப் பார்க்கப்படும் தச விதப் பொருத்தங்கள் பற்றிய விவரங்களை இந்த அத்தியாயத்தில் இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

1. தினப்பொருத்தம்

பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆணின் நட்சத்திரம் வரை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த எண்ணிக்கை 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24 ஆக இருந்தால், தினப்பொருத்தம் அமைந்துவிட்டது என்று சொல்லலாம். உதாரணம், அசுவினிக்கு 2-வது பரணி, 4-வது ரோகிணி ஆகியவை தினப்பொருத்தம் உடையவை.

2. கணப்பொருத்தம்

இருபத்தேழு நட்சத்திரங்களையும் தேவ கணம், மனித கணம், ராக்ஷஸ கணம் என மூன்றாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு கணத்திலும் 9 நட்சத்திரங்கள் அடங்கும்.

தேவ கணம் மனித கணம் ராக்ஷஸ கணம்

அசுவினி பரணி கார்த்திகை

மிருகசீரிஷம் ரோகிணி ஆயில்யம்

புனர்பூசம் திருவாதிரை மகம்

பூசம் பூரம் சித்திரை

ஹஸ்தம் உத்திரம் விசாகம்

சுவாதி பூராடம் கேட்டை

அனுஷம் உத்திராடம் மூலம்

திருவோணம் பூரட்டாதி அவிட்டம்

ரேவதி உத்திரட்டாதி சதயம்

ஆண்-பெண் இருவர் நட்சத்திரங்களும் தேவ கணத்தில் இருந்தால், கணப்பொருத்தம் சிறப்பாக அமையும். ஆண், பெண் இருவர் நட்சத்திரங்களும் மனித கணத்தில் இருந்தாலும், கணப்பொருத்தம் அமையும். தேவகணம், மனித கணம் ஆகிய பிரிவில் அடங்கும் நட்சத்திரங்கள் உள்ள ஆண்-பெண் ஜாதகங்களுக்கும் கணப்பொருத்தம் உண்டு எனக் கொள்ளலாம். ஆண்-பெண் இருவர் நட்சத்திரங்களும் அசுர கணத்தில் இருந்தால் கணப்பொருத்தம் இருக்காது. தேவ கண நட்சத்திரங்களுக்கு ராக்ஷஸ கண நட்சத்திரங்கள் பொருந்தாது. மனித கண நட்சத்திரங்களுக்கு ராக்ஷஸ கண நட்சத்திரங்கள் பொருந்தாது.

என்ன காரணம்?

குணங்களில் ஸத்வ, தமோ, ரஜோ என மூன்று வகை குணங்கள் உண்டு என்கிறது வேதம். இவற்றின் பிரதிபலிப்பே தேவ, மனித, ராக்ஷஸ கண நட்சத்திரங்கள்! இவை, தனி மனிதனின் குணாதிசயங்களை ஓரளவு வெளிப்படுத்தும். மிகவும் ஸாத்விகமான ஒரு பெண்ணுக்கு ராக்ஷஸ குணம் உள்ள கணவன் அமைந்தால் அவள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா? குணாதிசயங்கள் முற்றிலும் முரண்பாடாக உள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நிகழ்ந்தால், அவர்களின் வாழ்க்கை மன இறுக்கத்துடன் கரடுமுரடான பாதையில்தான் செல்லும். அதனால், மண முறிவுகூட ஏற்படலாம். இன்றைய சூழலில், மற்ற பொருத்தங்கள் சிறப்பாக அமைந்தால், கணப்பொருத்தத்துக்கு சில விதிவிலக்குகள் தருகிறார்கள். அது ஜோதிடரின் கணக்கீட்டின்படி அமைய வேண்டும்.

3. மாகேந்திரப் பொருத்தம்!

புத்திர சந்தான பாக்கியத்தைக் குறிக்கும் பொருத்தம் இது. பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணி, அந்த எண்ணிக்கை 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வருமானால், மாகேந்திரப் பொருத்தம் அமைந்துள்ளதாகக் கொள்ளலாம். இந்தப்பொருத்தம் பார்க்கும்போது, ஆண்-பெண் ஜாதகக் கட்டத்தில் லக்னத்துக்கு 5-ம் இடமான புத்திர ஸ்தானத்தில் அமையும் கிரகங்களின் பலம் அல்லது பலவீனத்தின் அடிப்படையிலும் முடிவு செய்யவேண்டும்.

4. ஸ்திரீ தீர்க்கம்

ஒரு பெண் தீர்க்க சுமங்கலியாக வாழும் மாங்கல்ய பாக்கியம் பற்றிய பொருத்தம் இது. இதுவும் நட்சத்திர எண்ணைக் கொண்டு அமைகிறது. பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் வரை எண்ணி, அந்த எண்ணிக்கை 13-க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கம் பொருத்தம் அமையும். 13-க்குக் கீழ் இருந்தால் இந்தப் பொருத்தம் அமையாது.

உதாரணமாக, பெண் நட்சத்திரம் அசுவினி என்றால், சித்திரை முதல் ரேவதி வரை உள்ள ஆணின் நட்சத்திரங்களுக்கு ஸ்திரீதீர்க்கப் பொருத்தம் அமையும். இவை 13-க்கு மேற்பட்டவை. பரணி முதல் அஸ்தம் வரை 13 எண்ணிக்கைக்கு உட்பட்ட ஆண் நட்சத்திரங்களுக்கு ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் அமையவில்லை எனலாம். ஆனால் இது, கண்டிப்பான விதியாகாது! இதற்கும் விதி விலக்குகள் உண்டு. மேலும், பெண் ஜாதகத்தில் லக்னத்துக்கு 7-ம் இடம் அல்லது 8-ம் இடத்தில் அமைந்துள்ள கிரஹங்கள் அல்லது அந்த வீட்டுக்குரிய கிரஹம் அமைந்துள்ள இடம். அதன் வலிமை ஆகியவற்றைத் தெரிந்த பின்பே முடிவு செய்ய வேண்டும். இதை ஜோதிடர்கள் ஆராய்ந்து முடிவு செய்து விதிவிலக்கு அளிப்பார்கள்.

5. யோனிப் பொருத்தம்

திருமணத்தால் ஆண்-பெண் அடையும் தாம்பத்ய சுகம் பற்றியும், அதனால் பிறக்கும் குழந்தைச் செல்வங்கள் பற்றியும் அறிய உதவுவது யோனிப் பொருத்தம். ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு விலங்கினத்தைக் குறிக்கிறது என்கின்றன ஜோதிட நூல்கள். நட்சத்திரங்களுக்கு உரிய மிருகங்களை அறிவோமா?

1. அசுவினி - குதிரை

2. பரணி - யானை

3. கார்த்திகை - ஆடு

4. ரோகிணி - பாம்பு

5. மிருகசீரிஷம் - பாம்பு

6. திருவாதிரை - நாய்

7. புனர்பூசம் - பூனை

8. பூசம் - ஆடு

9. ஆயில்யம் - பூனை

10. மகம் - பெருச்சாளி

11. பூரம் - பெருச்சாளி

12. உத்திரம் - பசு

13. அஸ்தம் - எருமை

14. சித்திரை - புலி

15. சுவாதி - எருமை

16. விசாகம் - புலி

17. அனுஷம் - மான்

18. கேட்டை - மான்

19. மூலம் - நாய்

20. பூராடம் - குரங்கு

21. உத்திராடம் - கீரி

22. திருவோணம் - குரங்கு

23. அவிட்டம் - சிங்கம்

24. சதயம் - குதிரை

25. பூரட்டாதி - சிங்கம்

26. உத்திரட்டாதி - பசு

27. ரேவதி - யானை

அந்தந்த நட்சத்திரத்துக்கு உரிய விலங்குகளின் குணங்கள் அந்த நட்சத்திரம் உள்ளவர்களின் ஒரு பரிமாணமாக உள்ளடங்கியிருக்கும்.

ஆண்-பெண் நட்சத்திரங்களைத் திருமணத்துக்காகச் சேர்க்கும்போது, ஒன்றுக்கொன்று பகையான இயல்புகள் கொண்ட விலங்குகளைப் பிரதிபலிக்கும் நட்சத்திரங்களைச் சேர்க்கக்கூடாது. அவ்வாறு சேர்த்தால் யோனிப் பொருத்தம் அமையாது. பகையான விலங்குகள் எவை என்பதைப் பார்ப்போமா?

விலங்கு - பகை விலங்கு

குதிரை எருமை

யானை சிங்கம்

ஆடு குரங்கு

பாம்பு கீரி

நாய் மான்

பூனை எலி

பெருச்சாளி பூனை

பசு புலி

பகையான யோனிகள் சேராது. உதாரணம் ரோகிணி (பாம்பு) உத்திராடம் (கீரி) சேராது. ஒரே யோனிகள் உள்ள நட்சத்திரங்களைச் சேர்க்கலாம். அதாவது அசுவினி- சதயம் (குதிரை); ரோகிணி - மிருகசீரிஷம் (பாம்பு). பத்து வகை திருமணப் பொருத்தங் களில் மற்ற பொருத்தங்கள் பற்றிய விவரங்களை அடுத்தடுத்துப் பார்ப்போம்.

- தொடரும்...