Published:Updated:

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-23

வலுவிழந்தோர் வளம் காண ஆவஹந்தி வழிபாடு..! கே.குமார சிவாச்சாரியார்

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-23

வலுவிழந்தோர் வளம் காண ஆவஹந்தி வழிபாடு..! கே.குமார சிவாச்சாரியார்

Published:Updated:
##~##

வெளிநாடுகளில் வாழ்பவர்கள், தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஆபத்தும் துயரமும் சூழ்ந்தபோது சூரிய சந்திரர்களை வழிபட்டு அக்னி ஹோத்திரம் செய்ததால், ஆபத்து விலகியதாகக் கூறியுள்ளனர். 'ஆவஹந்தி வழிபாடு’ என்பது நான்கு வேதங்களும், சான்றோர்களும், மகான்களும் சான்றளிக்கும் மந்திரார்த்தமான அக்னி ஹோத்ரம் ஆகும். ஆவஹந்தி வழிபாட்டால் வளமான வாழ்க்கை அமையும்.

செல்வச் செழிப்புள்ள ஒருவர், மன நிம்மதி இல்லையே என வருத்தப்படுவார்; வறுமையில் வாடுபவரோ, பணம் இல்லையே என்று கஷ்டப்படுவார். அறுசுவை உணவு இருந்தும் பசி இல்லையே என்பார் ஒருவர்; பசி தீர உணவு இல்லையே என்று வருந்துவார் மற்றவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. யாருக்கு என்ன கவலை இருந்தாலும், அவர்கள் அதிலிருந்து விடுபட உகந்த வழிபாடு - ஆவஹந்தி வழிபாடு.

வேதங்களில் ஒன்றான யஜுர் வேதத்தில் முக்கிய அங்கமாக விளங்குவது தைத்ரீய உபநிஷத். இதன் தொடக்கப் பகுதியாகிய சிட்சாவல்லியில், நான்காவது அனுவாகமாக, மனித வாழ்வை உயர்த்திக்காட்டும் மந்திரப் பகுதியாக விளங்குகிறது இந்த ஆவஹந்தி வழிபாட்டுக் கூறுகள்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-23

அன்னபூரணி தேவியும், மகாவிஷ்ணுவும், இந்திரனும் இந்த பூஜையின் பிரதான தெய்வங்களாகத் திகழ்கின்றனர்.

வானியல் ஆராய்ச்சியிலும், மந்திர சாஸ்திரங்களிலும் தீர்க்கதரிசியாகத் திகழ்ந்த ஸ்ரீசாயனாசார்யர் கூறுகையில், 'இந்த வழிபாட்டால் மழையைப் பெய்யவைத்து நாட்டை வளமுடையதாக்கிவிட முடியும்’ என்று உறுதிபடக் கூறுகிறார். 'ஆவஹந்தி மந்திரத்தின் பதினான்கு வாக்கு மந்திர பாகங்களை, இல்லற வாழ்க்கைக்குச் செல்லுமுன் தினமும் சொல்லி வழிபட்டு வந்தால், வாழ்க்கை பிரகாசத்துடன் திகழும்’ என்கிறார் போதாயன முனிவர். ஓர் ஆலயம் நீண்ட ஆண்டுகளாகக் கும்பாபிஷேகம் நடைபெறாமல், தோஷங்களால் பாதிக்கப்பட்டிருந்தால், ஆவஹந்தி வழிபாடு உடனடி பலன் கொடுக்கும்.

வீடுகளில் நடைபெறும் காம்யார்த்த யக்ஞங்களில் இந்த ஆவஹந்தி மந்திரத்தைக் கூறி வழிபட்டால், நம் வேண்டுதல்கள் நிறைவேறுவது உண்மை. நீடித்த ஆயுள், உணவு, வஸ்திரங்கள் வேண்டுவோர் இந்த வழிபாட்டை மனத்தில் முழு நம்பிக்கை கொண்டு செய்தல் வேண்டும்.

ஆவஹந்தி பூஜை செய்யும் முறை: பிரதானமாக, சிவப்பு வண்ண நூல் சுற்றிய கலசத்தை அன்னபூரணி தேவிக்கும், வெண்மை நிற நூல் சுற்றிய கலசத்தை இந்திரனுக்கும், பச்சை அல்லது நீல நிற நூல் சுற்றிய கலசத்தை மகாவிஷ்ணுவுக்கும் ஸ்தாபிக்கவேண்டும்.

பூஜையின்போது பக்கவாட்டில் ரிஷபன், பகன்தாதா ஆகியவர்களது பெயர்களைக் கூறி வழிபட்டு, தூப தீப நிவேதனம் செய்தல் வேண்டும். கிழக்காக அமைக்கப்பட்ட யாக பூஜை மேடையில் நவசமித்துகள், சிறிது நெய், யாகக் கூட்டுப் பொருள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட மந்திரப் பகுதிகளை உச்சரித்து, யாக வழிபாடு செய்யலாம். எந்த பூஜைக்கும், முதலில் விநாயகர் பூஜையை முறைப்படி செய்ய வேண்டும். தொடர்ந்து ஆவஹந்தி பூஜையைச் செய்யவும்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-23

முதலில், அன்னபூரணி பூஜை.

அன்னபூரணியை தியானித்து கலசத்தில் புஷ்பம் சமர்ப்பித்து...

'ஓம் அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராணவல்லபே!
ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷ£ம்தேஹி ச பார்வதி!
அஹம் வைச்வானரோ பூத்வா ப்ராணினாம் தேஹமாசரித:
ப்ராணாபான ஸமாயுக்த: பசாம்யன்னம் சதுர்விதம்’

என்ற மந்திரத்தை ஜெபிக்கவும்.

இந்திரனை தியானித்து, கலசத்தில் புஷ்பம் சமர்ப்பித்து,

'ஓம் ஐராவத கஜாரூடம் சுவர்ண வர்ணம் கிரீடினம்
சகஸ்ர நயனம் சக்ரம் வஜ்ரபாணிம் விபாவயேத்
ஓம் லம் வஜ்ரஹஸ்தாய வித்மஹே சகஸ்ராக்ஷ£ய தீமஹி
தந்நோ இந்திர ப்ரசோதயாத்’

என்ற மந்திரத்தை ஜெபிக்கவும்.

தொடர்ந்து, மகாவிஷ்ணுவை தியானித்து, புஷ்பம் சமர்ப்பித்து...

'வந்தே முகுந்தம் அரவிந்த தனாயதாக்ஷம்
குந்தேந்து சங்கத சனம் சிசுகோப வேஷம்
இந்த்ராதிதேவ கணவந்தித பாதபீடம்
ப்ருந்தா வனாலய மஹம் வசுதேவ சூனும்
ஓம் மேகவர்ணாய வித்மஹே
சார்ங்கபாணாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்’

- என்ற மந்த்ரத்தை ஜெபிக்கவும்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-23

பின்னர், 'ஓம் பகதேவதாயை நம: ஓமா தாத ரூபாயை நம: ஆவாஹன பூஜாம் க்ருத்வா’ என்று சொல்லி, கலசங்களுக்கு தூப தீபம் நிவேதனம் காட்டவேண்டும்.

கற்பூர ஆரத்தி செய்துவிட்டு, எதிரில் உள்ள யாக குண்டத்தில் நம் வேண்டுதலுக்கு ஏற்ப பொருட்களை இட்டு, ஆவஹந்தி மந்திரங்களைக் கூறலாம்.

ஒரு குடும்பத்தில், எளிமையாக 4 செங்கற்களை வைத்து, நெய் மற்றும் சமித்துக் குச்சிகளால் 27 தினங்கள் யாகம் செய்யலாம். பலனுக்கு ஏற்றபடி பொருட்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். முடிவில், பூரணாஹுதி செய்து, தூப தீபம் நைவேத்யமும் புஷ்பாஞ்சலியும் செய்து, யாக ரட்சை கட்டிக்கொண்டு, கலச நீரை வீடு முழுவதும் தெளித்துவிட்டு, மூன்று முறை கலச நீரை அருந்தவேண்டும்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-23

செல்வம் சேர்ந்திட, தானியங்கள், நெய், தேனில் தோய்த்த செம்பருத்தி மலர்கள் ஆகியவற்றால் 27 தினங்களும், வறுமை விலகி சுப காரியங்கள் நிகழ, பால், தேனில் நனைத்த செம்பருத்தி மலர்கள் ஆகியவற்றால் 8000 தடவையும் ஆவர்த்திகள் செய்ய வேண்டும். செல்வம் நிலைத்திருக்க, தொடர்ந்து 12 பௌர்ணமிகளில் 108 யாக திரவியங்களால் ஆவர்த்திகள் செய்தல் அவசியம். குழந்தைகள் அறிவாற்றல் பெற, பௌர்ணமி அன்று நெய் மற்றும் அவிஸ்ஸால் ஒரு லட்சம் ஆவர்த்திகள் செய்தல் வேண்டும்.

மகிமைகள் நிறைந்த ஆவஹந்தி மந்திரப் பகுதி:-

'ஆவஹந்தி விதன்வானா குர்வானா சீரமாத்மன;
மமகாவச்ச அன்னபானேச சர்வதா... ஸ்வாஹா
அன்ன பூர்ணாயை பவான்யை இதம் நமம:
ததோமே ச்ரியமாவஹ! லோமசாம் பசுபி: ஸஹஸ்வாஹா
ஆமா யந்து ப்ரம்மசாரிண: ஸ்வாஹா விமாயந்து
ப்ரம்மசாரிண: ஸ்வாஹா: ப்ரமாயந்து ப்ரம்மசாரிண: ஸ்வாஹா
தமாயந்து ப்ரம்மசாரிண: ஸ்வாஹா
சமாயந்து ப்ரம்மசாரிண: ஸ்வாஹா
யசோஜனேஸாணி - ஸ்வாஹா ச்ரேயான் வஸ்ய ஸோஸானிஸ்வாஹா
தந்த்வாபக ப்ரவிசானி ஸ்வாஹா: ஸமாபக ப்ரவிச ஸ்வாஹா:
தஸ்மின் ஸஹஸ்ர சாகே நிபகாகம் த்வயிம்ருஜே ஸ்வாஹா:
யதாப: ப்ரவதாயந்தி யதா மாஸா அஹர்ஜரம் ஏவம்மாம்
ப்ரஹ்ம சாரிண: தாதரயெந்து ஸர்வத: ஸ்வாஹா: ப்ரதிவே
சோஸி ப்ரமா பாஹி ப்ரமா பத்யஸ்வ!’

தினமும் இந்த ஆவஹந்தி மந்திரத்தை ஜபம்செய்தோ, ஹோமம் செய்தோ விரும்பிய பலனை அடையலாம்.

- வழிபடுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism