Published:Updated:

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 24

பூரண ஆயுள்... புண்ணிய வழிபாடு! கே.குமார சிவாச்சாரியார்

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 24

பூரண ஆயுள்... புண்ணிய வழிபாடு! கே.குமார சிவாச்சாரியார்

Published:Updated:
##~##

ஜோதிடவியல் கணக்கின்படி ஒரு மனிதனுக்குப் பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள். மீசையும் தாடியும் நரைத்து நம் ஆயுள் காலம் போய்க்கொண்டிருக்கிறதே என்று சிலர் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க... விலைவாசி விஷம் போல் ஏறும் வேளையில் இன்னும் அதிக நாள் வாழவேண்டுமா என்று நினைப்போரும் உண்டு!

லிங்கபுராணத்தில் வரும் மோட்ச சாம்ராஜ்யத்தின் வதைபடு ஸ்தானப் பகுதியில், ஒரு மனிதன் அற்ப ஆயுளுடன் தனது வாழ்க்கையை முடிக்கக் கூடாது. பூரண ஆயுளுடன் பூமியில் வாழ்ந்து, ஆயிரம் பிறைகள் கண்டு ஆனந்தமடைந்த பிறகு, பேரன்- பேத்திகள் சூழ 60-ம் கல்யாணம், உக்ரரத சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் ஆகிய சாந்தி கர்மங்களை செய்துகொண்டு, வாழ்க்கையை நன்கு அனுபவித்து பூர்த்தி செய்தல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரி! பூரண ஆயுள் எனும் மகா பேறு எல்லோருக்கும் கிடைத்துவிடுவது இல்லையே! மனிதர்களின் ஆயுள் காலத்தைக் கொடிய நோய்கள் அசைத்துப் பார்க்கும் இந்த காலகட்டத்தில், பூரண ஆயுளுடன் வாழ மார்க்கம் உண்டா?

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 24

ஜனன கால ஜாதகத்தில் கிரகங்களின் ஸ்தான பலன்களுக்கு ஏற்ப ஆயுள் பலம் அறிந்து, ஆயுள் ஸ்திர வழிபாட்டைச் செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றன ஞானநூல்கள்.

சூரியன் சோமன் செவ்வாய் சொற்புதன் வியாழன் வெள்ளி
காரியனி ராகு கேது கடவுள ரொன்பனாமத்
தாரியல் சக்கரத்தை தரித்திரர் பூசித்தாலும்
பாரினில் புத்திரர் உண்டாம் பாக்கியம் நல்குந்தானே...!

கருத்து: சாதாரண நிலையில் உள்ள மனிதர்களும் நவநாயகர்களது பீடமாகிய சக்கரங்களை வழிபடுவதால், அனைத்து நலன்களும் பெற்று நீண்ட காலம் வாழமுடியும். பாக்கியங்கள் என்ற வரிசையில், தீர்க்கமான ஆயுள் என்பதும் முக்கியமானது. ஆயுள் நிலையை அறிவதில் ஆயுள்காரகர்கள் எனப்படும் சனி பகவானும், குளிகனும் முக்கிய அங்கம் வகிப்பவர்கள்.

இவர்களது இருப்பிடத்தையும், கிரகங்களின் சேர்க்கையையும் வைத்து அஷ்டவர்க்கம் வரை சென்று ஒருவரது ஆயுள் பலத்தைக் கூறலாம். ஒருவரது ஆயுள் அற்பாயுளாக வரும் என்று தெரிந்தால், தன்வந்தரி மூர்த்தியின் ஆயுள் ஸ்திர வழிபாட்டை அறிந்து செய்துகொள்ளலாம்.

ஆயுள் ஸ்திர தந்திர வழிபாடு:

பஞ்சாங்க சுத்தியுள்ள சனி, செவ்வாய், திரயோதசி திதி ஆகிய தினங்களில் ஏதேனும் ஒருநாளில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.

ஸ்ரீதன்வந்த்ரி பகவான், விஷ்வக்சேனர், ஆயுள்தேவி வர்தனீ தெய்வங்களை கலசங்களில் ஆவாஹனம் செய்ய வேண்டும். ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், சித்தரத்தை, அதிமதுரம், வெட்டிவேர், விளாமிச்சை வேர் கலந்து ஒன்றாக்கிப் பொடி செய்து, சுத்த நீருடன் கலந்து, கலசங்களில் சேர்த்து முறைப்படி பூஜிக்க வேண்டும்.

9 செங்கற்களை செவ்வகமாக வைத்து யாக மேடை அமைத்து, 64 யாக மூலிகைகளுடன் நவ சமித்துகள், சீந்தில் கொடி, நாயுருவி, குங்கிலியம் ஆகியவற்றுடன் நெய் சேர்த்து அக்னி ஹோமம் செய்ய வேண்டும்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 24

1. ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய
பரம புருஷாய சுக சௌக்ய வர்த்தநாய ரோக நாசநாய
ஆயுர் விருத்தி கராய ஒளஷத ரூபிணே மம   ரோகான் மோசய மோசய
சர்வ வியாதி நாசாய ஹும்பட் விஷ்ணவே ஸ்வாஹா

2. ஓம் ஹ்ரீம் க்லீம் தன்வந்தரயே
அம்ருத ரூபாய அம்ருதோத்பலாய
வியாதி நாசாய ஆயுர் விருத்தி காரணாய மம
த்ரேக சௌக்யம் குருகுரு ஸ்வாஹா

3. ஓம் ஆயுர்தேவதாயை, வித்மஹே விஷ்ணு ரூபாய தீமகி
தந்நோ தன்வந்தரி ப்ரசோதயாத்

இந்த மந்திரங்களைக் கூறி ஹோம பூஜை முடித்ததும், பூர்ணாஹுதி (ஸ்ரீதன்வந்த்ரி காயத்ரியால்) செய்து, தூப-தீப நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காட்டிய பிறகு, கையில் துளசி மற்றும் நீலோத்பல மலர்களை எடுத்துக் கொண்டு, கீழ்க்காணும் மந்திரத்தை 5 முறை சொல்லி, தரையில் விழுந்து நமஸ்காரம் செய்யவேண்டும்.

ஓம் அச்சுதானந்த கோவிந்த விஷ்ணோ நாராயணாம்ருதா
ரோகான்மே நாசாய அசேஷான் ஆஸு தன் வந்தரே ஹரே’

வீடு வாங்குவதற்குப் பத்திரப் பதிவு செய்வோம். பத்திரப் பதிவு அலுவலகத்தில் நமது பெயரில் பத்திரம் பதியப்படுகிறதா என்று கவனமாக கவனிப்போம். ஆனால், நம் உடல் ஆரோக்கியத்தை பத்திரமாகக் கவனிக்கிறோமா என்றால், பெரும்பாலும் இல்லை என்றே சொல்லவேண்டும்.

ஒருவரது ஜாதகத்தில் ஆயுள் பாதக நிலை வரும் நேரத்தில், எளிதான பிரயோக விதி ஒன்றை, கடைப்பிடித்து நமது ஆயுளைப் பத்திரப்படுத்தலாம். இதை, ஆயுள் பத்திரம் என்றும் சிறப்பித்துச் சொல்லலாம்.  

3 x 16 செ.மீ அளவுள்ள பனை ஓலையில், ஸ்ரீதன்வந்த்ரி பகவானின் அட்சரத்துடன் உருவாக்கப்படும் அந்த ஆயுள் பத்திரம் குறித்து அடுத்த இதழில் விரிவாகப் பார்ப்போம்.

- வழிபடுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism