Published:Updated:

ஜய வருடம் இப்படித்தான்!

ஜய வருடம் இப்படித்தான்!

ஜய வருடம் இப்படித்தான்!

ஜய வருடம் இப்படித்தான்!

Published:Updated:
ஜய வருடம் இப்படித்தான்!

விளைச்சல் பெருகும்... வினைகள் நீங்கும்... சந்தோஷம் பொங்கும்!

ஜய வருடதன்னிலே செய் புவனங்கள் எல்லாம்
வியனுரவே பைங்கூழ் விளையும் நயமுடனே
அக்கம் பெரிதாமளவில் சுகம் பெருகும்
வெக்குவார் மன்னரிறை மேல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சித்திரை மாதம் 1 -ம் தேதி, 14.4.2014 திங்கட்கிழமை, சுக்ல பட்சம் சதுர்த்தசி, அஸ்த நட்சத்திரம், வியாகாதம நாமயோகம், வணஜை நாமகரணம் சித்தயோகம் கூடிய நல்ல நாளில் காலை மணி 6.05க்கு ராஜஸ மேஷ லக்னத்தில் கன்னி ராசியில் சந்திர ஹோரையில் ஜய வருஷம் பிறக்கிறது. இந்த வருடத்துக்கு ராஜாவும், மந்திரியும் சந்திரன் ஆவார். அதிக மழை பொழியும். விளைச்சல் பெருகும்.

ஜய வருடம் இப்படித்தான்!

ஜய என்றாலே வெற்றி. இந்த ஆண்டு எல்லோருக்கும் அவரவர் தகுதிக்குரிய வகையில் வெற்றியைத் தரும். கோசாரப்படி மத்திய அரசில் புதிய மாற்றம் உண்டாகும். இரும்பு, செம்பு, தங்கம் விலை ஏறும். அரசாங்கத்துக்கு நல்ல வருமானம் கிடைக்கும். வரிகள் சுலபமாக வசூலாகும். அரசியல் கட்சிகளில் பழைமையான கட்சிக்கு செல்வாக்கு பெருகும். சந்திரன் பெண் கிரகமாகி, இந்த வருஷத்துக்கு ராஜாவாகவும் மந்திரியாகவும் வருவதால் பெண்களுக்கு மதிப்பு உயரும். அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். நாடாளும் தகுதியும் உண்டாகும். திருக்கோயில்களின் வளர்ச்சிக்கு அரசாங்கம் பொருளாதார உதவி வழங்கும்.

பொதுவாக இந்த ஆண்டு ஆதாயம் அதிகமாகி, விரயம் குறையும். சேமிப்பு அதிகமாகும். சூரியன் கேதுவுடன் இணைந்திருப்பதால் பக்தி மார்க்கத்திலும் ஞானமார்க்கத்திலும் உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். துலாத்தில் சனி, ராகு  இருப்பதால் வான் வழிப் பயணம் பாதிக்கும். விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், காற்று, ஆகாயம் சம்பந்தமான இனங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் சங்கடங்கள் ஏற்படும்.

செவ்வாய் கன்னியில் இருப்பதால், கட்டடப் பொருட்கள் விலை குறையும். இன்ஜினீயரிங் துறையினருக்கு வருவாய் கூடும். பாதுகாப்புத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சம்பந்தமான இனங்கள் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் இனங்கள் லாபம் தரும்.

வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும். படித்த இளைஞர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும். வனத்துறையினருக்கு நற்காலம் உதயமாகும். ஒப்பந்த முறைப்படி தொழில் புரிபவர்களுக்கு லாபம் குறைவதுடன், நற்பெயரும் பாதிக்கும்.

ஜய வருடம் இப்படித்தான்!

சுக்கிரன் கும்பத்தில் இருப்பதால் சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகள் அபிவிருத்தி அடையும். பெண்களுக்கு ஆதரவு பெருகும். அழகுப் பொருட்கள் லாபம் தரும். பெண்களுக்குச் சாதகமான சட்டங்கள் உருவாகும்.

சுரங்கத்தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் காரியங்களில் குறுக்கீடுகளும் தடைகளும் உண்டாகும். வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்குப் பிரச்னைகள் ஏற்படும்.

ஜூன் முதல் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் அபிவிருத்தி உண்டாகும். வங்கிகள், சேமிப்பு நிறுவனங்கள், கஜானாக்கள் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கடல் வாணிபம் மூலம் லாபம் அதிகமாகும். ரியல் எஸ்டேட் மூலம் அதிக லாபம் கிடைக்கும்.

நவம்பர் முதல் ஜலத்தால் சேதம் உண்டாகும். அந்நியர்களால் தொல்லைகள் ஏற்படும். தொழிலாளர்களுக்கு சங்கடங்கள் சூழும். ஜல சம்பந்தமான நோய்கள் பரவும்.  தெய்வ காரியங்களிலும் அறப்பணிகளிலும் ஈடுபடுவதன் மூலம் நலம் கூடுவதுடன் சங்கடங்கள் நிச்சயமாக குறையும்

ஜய வருடம் இப்படித்தான்!

பஞ்சாங்கம் வாசியுங்கள்... கேளுங்கள்!

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்  ஆகிய ஐந்தின் நிகழ்வுகளை விளக்கும் நூல், பஞ்சாங்கம். இந்துக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் தவறாமல் இடம் பெற வேண்டிய அற்புதமான நூல்.  

''திதேஸ்ச ஸ்ரீயம் ஆப்நோதி வாராத் ஆயுஷ்ய வர்த்தனம்
நக்ஷத்ராத் ஹரதே பாபம் யோகாத் ரோக நிவாரணம்
கரணாத் கார்ய சித்திஸ்ச பஞ்சாங்க பலம் உத்தமம்''

என்ற வசனப்படி ஒருநாளின் ஐந்து பகுதிகளாய் விளங்கும் திதியை தெரிந்துகொள்வதால், செல்வம் பெருகும்; வாரம் அதாவது கிழமையை அறிவதால் ஆயுள் பலம் கூடும். நட்சத்திரத்தை அறிவதால் பாபங்கள் விலகும்; யோகத்தை அறிவதால் நோய் அகலும், கரணத்தை அறிவதால் நாம் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும்.  முன்னோர்கள் நாம் நல்வாழ்க்கையைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த உணர்வால் நமக்கு அளித்திருக்கக் கூடிய மிகப்பெரிய பொக்கிஷமே பஞ்சாங்கம்!

இந்தப் பஞ்சாங்கத்தை தினமும் பார்க்க முடியாதவர்கள்கூட வருடத்தின் முதல் நாளான சித்திரை மாதம் ஒன்றாம் தேதியன்று கோயில்களில் நடைபெறும் பஞ்சாங்கம் வாசித்தல் எனும் நிகழ்ச்சியில் தவறாது கலந்துகொண்டு, அந்த வருடத்தின் நவநாயகர்களின் ஆட்சி மற்றும் வேறு பொறுப்புகளையும், பலன்களையும் கேட்டு அறிந்து கொள்வது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism