Published:Updated:

ராசி பலன்

ராசி பலன்

ராசி பலன்

ராசி பலன்

Published:Updated:

'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

 ஆகஸ்ட் 17_ம் தேதி முதல் 30_ம் தேதி வரை

ராசி பலன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேஷம்: சுய சிந்தனை கொண்டவர்களே ! உங்களின் பூர்வபுண்யாதிபதி சூரியன் 5-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்த்திருப்பதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவர் நல்லபடியாக நடந்து கொள்வார். ஜென்ம குரு தொடர்வதால்... வேலைச்சுமை, செலவுகள் வந்து செல்லும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். சமய சந்தர்ப்பம் அறிந்து காய் நகர்த்தும் தருணமிது.

ராசி பலன்

ரிஷபம்: கடந்து வந்த பாதையை மறக்காதவர்களே ! உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், கனிவாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சர்ப்பகிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால்... கவலைகள், ஏமாற்றங்கள் வந்து நீங்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புதுப் பொறுப்பு உங்களைத் தேடிவரும். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் வேளையிது.

ராசி பலன்

மிதுனம்: பேச்சைவிட, செயலில் விருப்பமுள்ளவர்களே !  உங்கள் ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பழைய உறவினர்கள், தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ராசிக்குள் செவ்வாய் நிற்பதால்... உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தைரியமான முடிவுகள் எடுக்கும் தருணமிது.

ராசி பலன்

 கடகம்: பேச்சிலும் செயலிலும் தூய்மையை விரும்புபவர்களே ! உங்கள் தனாதிபதி சூரியன் சொந்த வீட்டில் நுழைவதால், எதிர்பாராத பணவரவு உண்டு. புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். 12-ல் செவ்வாய் இருப்பதால்... மன உளைச்சல், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து விலகும். வி.ஐ.பி-க்களின் உதவியால் சாதிக்கும் நேரமிது.  

ராசி பலன்

சிம்மம்: மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பவர்களே ! ராசிநாதன் சூரியன் ராசிக்குள் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், உங்களின் செல்வாக்கு, பணபலம் அதிகரிக்கும். பிள்ளைகளின் உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். புதன் 12-ல் மறைந்திருப்பதால்... உறவினர்கள், தோழிகளால் செலவுகள் வரும். 17, 18 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் நடப்பதால், உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைள் கிடைக்கும். அதிரடி திட்டங்கள் தீட்டும் வேளையிது.    

ராசி பலன்

கன்னி: இரக்க குணத்தால் ஏமாறுபவர்களே ! செவ்வாய் வலுவாக இருப்பதால், புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். வீட்டு வேலைகளில் கணவர் உதவியாக இருப்பார். யோகாதிபதி சுக்கிரன் 12-ல் மறைந்திருப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். குரு 8-ல் நிற்பதால்... அலைச்சல், மன இறுக்கம் வந்து செல்லும். 19-ம் தேதி முதல், 21-ம் தேதி மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் சில சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மன அமைதி குறையும். சுப காரியங்கள் கூடி வரும் காலமிது.   

ராசி பலன்

துலாம்: சூழ்நிலை அறிந்து பேசுபவர்களே ! உங்கள் பாக்யாதிபதி புதன் வலுவாக இருப்பதால், வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீடு வாங்குவது, விற்பது சாதகமாக அமையும். விரயச் சனி தொடர்வதால், அவ்வப்போது கடன் பிரச்னைகள் தலைத்தூக்கும். 21-ம் தேதி மாலை 5 மணி முதல்  23-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், புதிய முயற்சிகள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டு. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நேரமிது.  

ராசி பலன்

விருச்சிகம்: வெளிப்படையாக பேசுபவர்களே !  யோகாதிபதி சூரியன் 10-ல் நுழைந்திருப்பதால், நீண்ட நாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் கணவர் சில நேரங்களில் முணுமுணுப்பார். செவ்வாய் தொடர்ந்து வலுவிழந்திருப்பதால், வீண் செலவுகள் வந்து செல்லும். 24-ம் தேதி முதல் 26-ம் தேதி காலை 9.30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், அநாவசிய பேச்சைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில், பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் உயர்வு உண்டு. பழைய சிக்கல்கள் தீரும் தருணமிது.

ராசி பலன்

தனுசு: மகிழ்வித்து மகிழ்பவர்களே ! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், பணம் வரும். கணவரின் அன்பு பெருகும். நவீன டிசைனில் நகை வாங்குவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வெளியூர் பயணம் செல்வீர்கள். 26-ம் தேதி காலை 9.30 மணி முதல் 28-ம் தேதி மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், யோசித்து முடிவெடுங்கள். தந்தையார் உடல் நிலை சீரடையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சவால்களில் வெற்றி பெறும் வேளையிது.

ராசி பலன்

மகரம் : மாறுபட்ட கோணத்தில் சிந்திப்பவர்களே! செவ்வாய் வலுவாக இருப்பதால்... நிலம், வீடு வாங்குவது, விற்பது சுமுகமாக முடியும். நட்பு வட்டம் விரியும். 28-ம் தேதி மதியம் 2 மணி முதல் 30-ம் தேதி மாலை 5.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், எதிலும் அவசரப்பட வேண்டாம். குருபகவான் 4-ல் நிற்பதால்... வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். சொன்ன சொல்லை நிறைவேற்றும் காலமிது.

ராசி பலன்

கும்பம் : யோசித்து பேசுபவர்களே ! உங்களின் யோகாதிபதி சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். பணம் வரும் என்றாலும் பற்றாக்குறை நீடிக்கும். புதன் 6-ல் மறைந்திருப்பதால், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். உறவினர்கள், தோழிகளுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். 30-ம் தேதி மாலை 5.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால், எதிலும் நிதானம் அவசியம். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்ஸி எடுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். வளைந்து நிமிரும் நேரமிது.

ராசி பலன்

மீனம் : முயற்சிகளிலிருந்து பின்வாங்காதவர்களே! குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் மனப்போராட்டங்கள் ஓயும். எதிர்பாராத பணவரவு உண்டு. கடனாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். வியாபாரத்தில், விற்பனை சூடுபிடிக்கும். புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சமங்களை சொல்லித் தருவார். பிரச்னைகளிலிருந்து விடுபடும் வேளையிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism