Published:Updated:

ராசிபலன்!

ராசிபலன்!

ராசிபலன்!

ராசிபலன்!

Published:Updated:
ராசிபலன்!

டிசம்பர் 28 முதல் ஜனவரி 10 வரை

ராசிபலன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
ல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் என நினைப்பவர் நீங்கள். புதன் சாதகமாக இருப்பதால், புதிய எண்ணங்கள் உதயமாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், வீடு- வாகன வசதிகள் பெருகும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். கன்னிப்பெண்களுக்கு, நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்; பெற்றோர் ஒத்துழைப்பர். 5-ஆம் தேதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய், ராகுவுடன் நிற்பதால் சிறு விபத்து, சகோதர வகையில் சங்கடங்கள் வந்து நீங்கும். 6-ஆம் தேதி முதல், ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெறுவதால், திடீர் திருப்பங்கள் உண்டு. சொத்துப் பிரச்னைகள் நீங்கும். வழக்குகள் சாதகமாகும்.

31-ஆம் தேதி இரவு 9 மணி முதல் 1, 2 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்; அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். 12-ல் நிற்கும் குருவால் வீண் செலவுகள், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். சூரியன் 9-ஆம் வீட்டில் நிற்பதால், தந்தையின் உடல்நிலை பாதிக்கப்படலாம். அரசியல்வாதிகள், தலைமைக்கு ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள், உங்களுடன் ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பர். உத்தியோகத்தில், திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கலைத் துறையினருக்கு, ஒப்பந்தங்கள் தேடி வரும்.

சகிப்புத் தன்மையால் சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன்!

வெள்ளையுள்ளம் கொண்டவர் நீங்கள். குரு வலுவாக நிற்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். எதிர்பார்த்த பணம், கௌரவ பதவிகள் தேடி வரும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். மகளுக்கு தடைப்பட்ட திருமணம் கூடிவரும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 1-ஆம் தேதி முதல் 7-ல் அமர்வதால், உற்சாகம் அடைவீர்கள்; இழுபறியான வேலைகள் முடிவடையும். ஆரோக்கியம் மேம்படும். மனைவியுடனான சச்சரவுகள் நீங்கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கன்னிப் பெண்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

புதன் சாதகமாக இருப்பதால், பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவர். 8-ல் செவ்வாயும் சூரியனும் நிற்பதால், சிறியளவில் தீக்காயம், சகோதர பகை, ஏமாற்றம் வந்து செல்லும். வழக்கில் அவசரம் வேண்டாம். 6-ஆம் தேதி முதல், செவ்வாய் 9-ஆம் வீட்டில் அமர்வதால் தடைகள் நீங்கும். சொத்துப் பிரச்னைகள் தீரும். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் விலகும். 3, 4 மற்றும் 5-ஆம் தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் நடைபெறுவதால், எவரையும் பகைக்க வேண்டாம். அரசியல்வாதிகள், சகாக்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பர். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். கலைத் துறையினருக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

கடின உழைப்பால் இலக்கை எட்டும் காலம் இது.

ராசிபலன்!

னிய பேச்சால் எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பவர் நீங்கள். புதன் சாதகமாக செல்வதால் இழுபறியான வேலைகள் முடிவடையும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். ஒரு சொத்தைக் காப்பாற்ற, மற்றொரு சொத்தை விற்கவேண்டி வரும். பிள்ளைகளின் திறமைகளை அறிந்து ஊக்கப்படுத்துவீர்கள். நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

1-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால், தம்பதிக்கு இடையே விட்டுக்கொடுப்பது நல்லது. வாகன விபத்துகள் நிகழலாம்; கவனம்! திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். கன்னிப்பெண்கள், பெற்றோரை அனுசரிக்கவும். அர்த்தாஷ்டமச் சனி இருப்பதால், வீண் சந்தேகம், தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். செவ்வாயும், சூரியனும் ராசியைப் பார்ப்பதால் முன்கோபம் ஏற்படலாம். பழைய கடன் பிரச்னை மனதை வாட்டும். அரசியல்வாதிகளுக்கு, மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 5-ஆம் தேதி காலை 10 மணி முதல் 7-ஆம் தேதி இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம்; காரியங்களில் தாமதம் ஏற்படும். குரு 10-ல் தொடர்வதால், குறுக்கு வழியை தவிர்க்கவும். வியாபாரத்தில், பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில், உழைப்புக்கேற்ற அங்கீகாரம் இல்லையே என வருந்துவீர்கள். கலைத் துறையினர் பற்றிய வதந்திகள் வரும்.

நிதானம் தேவைப்படும் நேரம் இது.

ராசிபலன்!

டின உழைப்பாளி நீங்கள். புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சாதுரியமாக செயல்பட்டு சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு-வாகனம் அமையும். வங்கிக் கடன் கிடைக்கும். அந்தஸ்து உயரும். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டு. கன்னிப்பெண்களுக்கு, திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். எனினும் சூரியன், ராகுவுடன் நிற்பதால் வீண் பழி, அசதி, சோர்வு, ஒற்றைத் தலைவலி வந்து நீங்கும்.

மகான்களின் ஆசி கிடைக்கும். பயணங்கள் திருப்தி தரும். சூரியன் வலுவாக இருப்பதால், நாடாளுவோரின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்குகள் வெற்றி பெறும். அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கு ஆதரவு பெருகும். செவ்வாய் சாதகமாக இருப்பதால், பேச்சில் முதிர்ச்சி தெரியும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தோரின் பிரச்னைகளை தீர்த்துவைப்பீர்கள். பூர்வீகச் சொத்தை சீர்செய்வீர்கள். 7-ஆம் தேதி இரவு 8 மணி முதல் 8, 9 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்; எதிலும் நிதானம் தேவை! வியாபாரத்தில் பற்று- வரவு உயரும். ஷேர், ரியல் எஸ்டேட் மூலம் பணம் வரும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில், புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத் துறையினர் புகழடைவர்.

அந்தஸ்து உயரும் தருணம் இது.

ராசிபலன்!

நெருக்கடி நேரத்திலும் நெறிபிறழாதவர் நீங்கள். புதன் சாதகமாக இருப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். தடைப்பட்ட காரியங்களை பிரபலங் களின் உதவியுடன் முடிப்பீர்கள். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், தோற்றப் பொலிவு கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும். செவ்வாய், ராகுவுடன் நிற்பதால், பெற்றோருடன் மனத்தாங்கல் வரும். சொத்து வாங்குவது- விற்பது தாமதமாகும். உடன்பிறந்தவர்களை அனுசரியுங்கள். 6-ஆம் தேதி முதல், செவ்வாய் சாதகமாக வருவதால் அலைச்சல், டென்ஷன் விலகும். கன்னிப்பெண்களின் குழப்பங்கள் நீங்கும்.

ராசிநாதன் சூரியன் 5-ஆம் வீட்டில் நிற்பதால், கர்ப்பிணிகள் நீண்ட தூர பயணங்களைத் தவிர்க்கவும். அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். பாதச் சனி தொடர்வதால் கால் வலி, அறுவை சிகிச்சை ஏற்படலாம். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்துபோட வேண்டாம். 10-ஆம் தேதி சந்திராஷ்டமம் தொடங்குவதால், எதிலும் கவனம் தேவை. அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. 8-ல் குரு மறைந்திருப்பதால் எதிர்பாராத பண வரவு உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில், உங்களின் நிர்வாகத் திறமை கூடும். கலைத் துறையினர் உற்சாகத்துடன் வலம் வருவர்.

யதார்த்தமான பேச்சால் சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன்!

ற்பனைத் திறன் மிகுதியானவர் நீங்கள். சூரியனும் புதனும் வலுவாக இருப்பதால், சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். அரசு மற்றும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத பண வரவு, வழக்குகளில் வெற்றி உண்டு. குரு 7-ல் நிற்பதால் சொந்தபந்தங்கள் தேடி வருவர். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். பூர்வீகச் சொத்தை விற்று புது நிலம், வீடு வாங்குவீர்கள்.

கன்னிப்பெண்களுக்கு, தடைப்பட்ட திருமணம் கூடிவரும். அரசியல்வாதிகள், தலைமையிடம் பாராட்டு பெறுவீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், புத்துணர்ச்சி பெருகும். வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுகஸ்தானத்தில் செவ்வாய் ராகுவுடன் நிற்பதால், தாயாருக்கு மருத்துவச் செலவு, வாகன விபத்துகள் ஏற்படலாம். 6-ஆம் தேதி முதல், செவ்வாய் உச்சம் அடைவதால் சகோதர பகை விலகும். ஜென்மச் சனி தொடர்வதால் முதுகு வலி, முன்கோபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்தியோகத் தில் உயரதிகாரிகள் வியக்கும்படி நடந்துகொள்வீர்கள். அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

குருவருளால் திருவருள் கூடும் நேரம் இது.

ராசிபலன்!

நியாயத்தின் பக்கம் நிற்பவர் நீங்கள். 3-ல் செவ்வாய், ராகு, சூரியன் சாதகமாக இருப்ப தால், புதிய முயற்சிகள் வெற்றிபெறும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவர். பகை மறையும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். மகனுக்கு, புது வேலை கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். உடன்பிறந்தவர்கள், உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.

1-ஆம் தேதி முதல், ராசிநாதன் சுக்கிரன் 2-ல் அமர்வதால் திடீர் பண வரவு உண்டு.கன்னிப்பெண்களுக்கு வேலை கிடைக்கும். 6-ல் குரு மறைந்திருப்பதால் வீண் சந்தேகம், மறைமுக விமர்சனம், எதிர்காலம் பற்றிய கவலைகள், காய்ச்சல் வந்து விலகும். 9-ஆம் வீட்டில் கேது தொடர்வதால், தந்தைக்கு ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படலாம். விரயச் சனி தொடர்வதால், கடனை நினைத்து வருந்துவீர்கள். எவரிடமும் அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று, முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். கலைத் துறையினருக்கு போட்டிகள் குறையும்.

தொலைநோக்கு சிந்தனையால் வெற்றி பெறும் காலம் இது.

ராசிபலன்!

திரிகளுக்கும் நல்லதே நினைக்கும் பண்பாளர் நீங்கள். 1-ஆம் தேதி முதல் சுக்கிரன் ராசிக்குள் நுழைவதால் அலுப்பும் சலிப்பும் நீங்கும். வராது என்றிருந்த பணம் வரும். தம்பதிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. ஆடை- ஆபரணம் சேரும். குரு வலுவாக அமர்ந்திருப்பதால் மதிப்பு கூடும். கல்யாண பேச்சுவார்த்தைகள் நலமுடன் முடியும். சித்தர்கள், மகான்களின் ஆசி கிட்டும். உறவினர்கள் உதவுவர். கன்னிப்பெண்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள்.

5-ஆம் தேதி வரை ராசிநாதன் செவ்வாய், ராகுவுடன் நிற்பதால் ஒருவித படபடப்பு, மருத்துவச் செலவு, சொத்து வாங்குவது- விற்பதில் வில்லங்கம், சகோதர வகையில் பிரச்னைகள் வந்து செல்லும். 6-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் உச்சம் பெறுவதால் மனக்குழப்பம், வீண் பகை, சொத்து சிக்கல், வாகனப் பழுது நீங்கும். அரசியல்வாதிகள் எவரையும் விமர்சிக்க வேண்டாம். வியாபார ரீதியாக பிரபலங்களைச் சந்திப்பீர்கள். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை வெளியிட வேண்டாம். 10-க்குரிய சூரியன், ராகுவுடன் நிற்பதால் உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கலைத் துறையினர் பரபரப்புடன் காணப்படுவர்.

பேச்சிலும் செயலிலும் கவனம் செலுத்தவேண்டிய தருணம் இது.

ராசிபலன்!

தையும் தாங்கும் இதயம் கொண்டவர் நீங்கள். புதன் சாதகமாக இருப்பதால் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் உயரும். வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும். அந்தஸ்து உயரும். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புது வண்டி வாங்குவீர்கள். பழைய வீட்டை விற்று, புது இடம் வாங்குவீர்கள்.

சனி வலுவாக இருப்பதால், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் அடங்கும். கன்னிப் பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ராசிக்குள் சூரியன், செவ்வாய், ராகு நிற்பதால் பெற்றோரால் டென்ஷன், அறுவை சிகிச்சை, அலைச்சல்கள் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். வழக்கை கவனமாக கையாளுங்கள். 6-ஆம் தேதி முதல் செவ்வாய் ராசியை விட்டு விலகுவதால், பேச்சில் தடுமாற்றம் நீங்கும். பங்காளிப் பிரச்னை தீரும். அரசியல்வாதிகள், கோஷ்டி பூசலில் சிக்கிக்கொள்ளாதீர்கள். குலதெய்வ வழிபாடு மனநிறைவு தரும். 4-ல் குரு தொடர்வதால் சலிப்பு, தாயாருடன் மனத் தாங்கல், வருங்காலம் பற்றிய பயம் வந்து விலகும். வியாபாரத்தில் புது சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பர். உத்தியோகத்தில், மூத்த அதிகாரி உதவுவார். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

வி.ஐ.பி-களால் உதவி பெறும் வேளை இது.

ராசிபலன்!

றப்போம் மன்னிப்போம் என்ற கொள்கை உடையவர் நீங்கள். சனி பகவான் வலுவாக இருப்பதால், திடமான முடிவுகளை எடுப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, புது இடம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். யோகாதிபதிகளான புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்களால் நன்மை உண்டு. அடகில் இருக்கும் நகைகளை மீட்பீர்கள். நண்பர்கள் உதவுவர்.

குரு சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். லோன் கிடைக்கும். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவாள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கன்னிப் பெண்களின் புது முயற்சிகளை, பெற்றோர் ஆதரிப்பர். 12-ல் செவ்வாய், ராகு, சூரியன் நிற்பதால் வீண் பகை, மன உளைச்சல், கண் எரிச்சல், செலவுகள் வந்து போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து, புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் பழகுங்கள். பங்குதாரர்களிடையே சலசலப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். சக ஊழியர்களின் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். கலைத் துறையினருக்கு சம்பள பாக்கி கைக்கு வரும்.

தன்னம்பிக்கையால் வெற்றி பெறும் வேளை இது.

ராசிபலன்!

வருக்காகவும் கொள்கையை மாற்றிக்கொள்ளாதவர் நீங்கள். குரு வலுவாக இருப்பதால், தொட்டது துலங்கும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை கட்டி முடிக்க வங்கிக் கடன் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால், உங்களை குறை சொன்னவர்களும் பாராட்டுவார்கள். சமுதாயப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.

ராகு வலுவாக அமர்ந்திருப்பதால் திடீர் பணவரவு உண்டு. கௌரவ பதவிகள் தேடி வரும். லாப வீட்டில் சூரியன் நிற்பதால், புது வேலைக்கான முயற்சிக்கு பலன் கிடைக்கும். அரசு காரியங்களில் அனுகூலம், வழக்குகளில் சாதகம் உண்டு. செவ்வாய் சாதகமான நட்சத்திரங் களில் செல்வதால் உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பர். சொத்து வாங்குவது- விற்பது சுலபமாக முடியும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் அலைச்சலும், மறதியும் வந்து நீங்கும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டாம். 28, 29-ஆம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம்; அலைச்சல், டென்ஷன் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில், இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு பெரிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

நினைத்ததை முடிக்கும் நேரம் இது.

ராசிபலன்!

ழப்புகள், ஏமாற்றங்களைக் கண்டு கலங்காதவர் நீங்கள். சூரியன் வலுவாக அமர்ந்திருப்ப தால், எதிரிகளும் நண்பர்களாவர். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தாரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. அரசியலில் செல்வாக்கு கூடும். மூத்த சகோதரிக்கு திருமணம் பேசி முடிப்பீர்கள். 29-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 31-ஆம் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டமம்; சில காரியங்களை போராடி முடிக்கவேண்டி இருக்கும்.

1-ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆம் வீட்டில் அமர்வதால் பண வரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. கன்னிப் பெண்கள் பெற்றோரை ஆலோசித்து, முக்கிய முடிவெடுப்பீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள் சிலர், உங்கள் உதவியை நாடுவார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பு நிகழும். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். புது சொத்து வாங்குவீர்கள். கண்டகச் சனி இருப்பதால் மனைவியுடன் மோதல்கள் வந்து நீங்கும். ஜென்ம குரு தொடர்வதால் காய்ச்சல், மறைமுக விமர்சனங்கள் வந்து செல்லும். புது முதலீடுகள் செய்து, வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். புதிய சலுகைகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

திடீர் திருப்பங்கள் நிறைந்த தருணம் இது.

ராசிபலன்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism